2nd April Daily Current Affairs – Tamil

விமான மசோதா 2025:

  • விமானத் துறை சார்ந்த இந்தியாவின் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் விமான மசோதா, 2025, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
  • விமானத் துறை சார்ந்த இந்தியாவின் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
  • இது குத்தகைதாரா்கள் மற்றும் குத்தகைக்கு எடுப்பவா்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த விமானத் துறைக்கும் பாதுகாப்பு வழங்குகிறது.
  • இந்தியா கையொப்பமிட்டுள்ள கேப்டவுன் ஒப்பந்தம், 2001-ஐ அமல்படுத்தவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
  • விமானம் , ஹெலிகாப்டர்கள் மற்றும் என்ஜின்கள் உள்ளிட்ட உயர் மதிப்பிலான சொத்துகளுக்கு ஒரே மாதிரியான பாதுகாப்பு உரிமைகள் வழங்குவதே கேப்டவுன் ஒப்பந்தத்தின் நோக்கம் ஆகும்.

தமிழகத்தில் 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு:

  • தமிழகத்தில் இதுவரை 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
  • தற்போது கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி தோவாளை மாணிக்கம் மாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
  • தமிழகத்தில் இதுவரை 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டு, இந்திய அளவில் அதிக புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் விளங்கி வருகிறது.
  • தமிழகத்திலேயே 11 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்று மாநிலத்தில் முதல் மாவட்டமாக தஞ்சை விளங்குகிறது.
  • தஞ்சை மாவட்டத்தில் முதல் முறையாக வேளாண் பொருளுக்கு புவிசார் குறியீடு பெறுவது இதுவே முதல்முறை ஆகும்.

ஏப்ரல் 2: உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்.

  • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 – ஆம் தேதி உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. இந்திய ரிசர்வ் வங்கியின் 90 – ஆவது ஆண்டு விழா மகாராஷ்டிர மாநிலம் மும்பையில்  நடைபெற்றது.
  2. இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளின் 75 – ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.
  3. இந்தியா-சீனா இருநாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவது ‘டிராகன்-யானை’ ஒத்துழைப்பு எனப்படும்.
  4. புது தில்லியில் ஏப்ரல் 1- 4 வரை ராணுவ தளபதிகள் மாநாடு நடைபெற உள்ளது.
  5. முப்படை தலைமைத் தளபதி – அனில் செளஹான்.
  6. நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி –  பி.வி.ஆர்.சுப்பிரமணியம்.
  7. லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டின் அதிபா் கேப்ரியல் போரிக் ஃபான்ட்  அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
  8. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓபன் ஏஐ நிறுவனத்துக்குச் சொந்தமானது சாட்ஜிபிடி.
  9. சாட்ஜிபிடியில் புதிய அம்சமாக செய்யறிவு நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்களை ஓவியமாக மாற்றும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட புதிய ஜிபிடி – 4.0 என்னும் புகைப்பட ஊக்கியின் மூலம் ஜிப்லி சேவை வழங்கப்படுகிறது.
  10. ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும் 10 பணிகளை முன்னிலைப்படுத்தி வழங்கி, அதை நிறைவேற்றும் வகையில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் உருவாக்கப்பட்டது.
  11. நடந்தாய் வாழி காவிரி’ திட்டம் காவிரி மற்றும் அதன் 5 கிளை ஆறுகள் மாசுபடுவதில் இருந்து பாதுகாத்தல், புத்துயிர் பெறச் செய்தல், நீர் ஆதாரங்களை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.
  12. நிகழாண்டுக்கான ‘மா.அரங்கநாதன் இலக்கிய விருது’ பேராசிரியா் தமிழவன் மற்றும் ப.திருநாவுக்கரசு ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.
  13. ஆடவருக்கான 12 – ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி, பிகார் மாநிலம் ராஜ்கிர் நகரில், ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பா் 7 வரை நடைபெறவுள்ளது.
  14. மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், செக் குடியரசு வீரா் ஜேக்கப் மென்சிக் சாம்பியன் ஆனார்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these