விமான மசோதா 2025:
- விமானத் துறை சார்ந்த இந்தியாவின் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் விமான மசோதா, 2025, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- விமானத் துறை சார்ந்த இந்தியாவின் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
- இது குத்தகைதாரா்கள் மற்றும் குத்தகைக்கு எடுப்பவா்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த விமானத் துறைக்கும் பாதுகாப்பு வழங்குகிறது.
- இந்தியா கையொப்பமிட்டுள்ள கேப்டவுன் ஒப்பந்தம், 2001-ஐ அமல்படுத்தவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
- விமானம் , ஹெலிகாப்டர்கள் மற்றும் என்ஜின்கள் உள்ளிட்ட உயர் மதிப்பிலான சொத்துகளுக்கு ஒரே மாதிரியான பாதுகாப்பு உரிமைகள் வழங்குவதே கேப்டவுன் ஒப்பந்தத்தின் நோக்கம் ஆகும்.
தமிழகத்தில் 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு:
- தமிழகத்தில் இதுவரை 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
- தற்போது கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி தோவாளை மாணிக்கம் மாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
- தமிழகத்தில் இதுவரை 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டு, இந்திய அளவில் அதிக புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் விளங்கி வருகிறது.
- தமிழகத்திலேயே 11 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்று மாநிலத்தில் முதல் மாவட்டமாக தஞ்சை விளங்குகிறது.
- தஞ்சை மாவட்டத்தில் முதல் முறையாக வேளாண் பொருளுக்கு புவிசார் குறியீடு பெறுவது இதுவே முதல்முறை ஆகும்.
ஏப்ரல் 2: உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்.
- ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 – ஆம் தேதி உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது.
தகவல் துளிகள்:
- இந்திய ரிசர்வ் வங்கியின் 90 – ஆவது ஆண்டு விழா மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்றது.
- இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளின் 75 – ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.
- இந்தியா-சீனா இருநாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவது ‘டிராகன்-யானை’ ஒத்துழைப்பு எனப்படும்.
- புது தில்லியில் ஏப்ரல் 1- 4 வரை ராணுவ தளபதிகள் மாநாடு நடைபெற உள்ளது.
- முப்படை தலைமைத் தளபதி – அனில் செளஹான்.
- நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி – பி.வி.ஆர்.சுப்பிரமணியம்.
- லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டின் அதிபா் கேப்ரியல் போரிக் ஃபான்ட் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
- அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓபன் ஏஐ நிறுவனத்துக்குச் சொந்தமானது சாட்ஜிபிடி.
- சாட்ஜிபிடியில் புதிய அம்சமாக செய்யறிவு நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்களை ஓவியமாக மாற்றும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட புதிய ஜிபிடி – 4.0 என்னும் புகைப்பட ஊக்கியின் மூலம் ஜிப்லி சேவை வழங்கப்படுகிறது.
- ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும் 10 பணிகளை முன்னிலைப்படுத்தி வழங்கி, அதை நிறைவேற்றும் வகையில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் உருவாக்கப்பட்டது.
- நடந்தாய் வாழி காவிரி’ திட்டம் காவிரி மற்றும் அதன் 5 கிளை ஆறுகள் மாசுபடுவதில் இருந்து பாதுகாத்தல், புத்துயிர் பெறச் செய்தல், நீர் ஆதாரங்களை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.
- நிகழாண்டுக்கான ‘மா.அரங்கநாதன் இலக்கிய விருது’ பேராசிரியா் தமிழவன் மற்றும் ப.திருநாவுக்கரசு ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.
- ஆடவருக்கான 12 – ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி, பிகார் மாநிலம் ராஜ்கிர் நகரில், ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பா் 7 வரை நடைபெறவுள்ளது.
- மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், செக் குடியரசு வீரா் ஜேக்கப் மென்சிக் சாம்பியன் ஆனார்.