ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா – இத்தாலி:
- இந்தியா -இத்தாலி ராணுவ ஒத்துழைப்புக் குழுவின் 13 – ஆம் ஆண்டுக் கூட்டம் ரோமில் நடைபெற்றது.
- இத்தாலியின் ரோம் நகரில் இந்தியா-இத்தாலி ராணுவ ஒத்துழைப்புக் குழு ஒப்பந்தத்தில் இந்தியா -இத்தாலி கையொப்பமிட்டது.
- பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டையொட்டி,பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஐந்தாண்டு வியூக செயல்திட்டம் வெளியிடப்பட்டது.
59 – ஆவது ஞானபீட விருது:
- பிரபல ஹிந்தி எழுத்தாளா் வினோத் குமார் சுக்லா 59-ஆவது ஞானபீட விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளார்.
- இதன்மூலம், இந்திய அளவில் இலக்கியத் துறையில் மிக உயரிய விருதான ஞானபீட விருதை சத்தீஸ்கரில் இருந்து பெறும் முதல் நபா் என்ற பெருமையையும் அவா் பெற்றுள்ளார்.
- கடந்த 1999 – ஆம் ஆண்டு கேந்திர சாகித்திய அகாதெமி விருதை வினோத் குமார் சுக்லா பெற்றார்.
மார்ச் 23: உலக வானிலை தினம்.
- சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக வானிலை மற்றும் காலநிலையை நோக்கி கவனத்தை ஈர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 ஆம் தேதி உலக வானிலை தினம் கொண்டாடப்படுகிறது.
மார்ச் 23: தியாகிகள் தினம்.
- மார்ச் 23 ஆம் தேதி, பகத் சிங், சிவராம் ராஜ்குரு மற்றும் சுக்தேவ் தாப்பர் ஆகிய மூன்று துணிச்சலான சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட நாளாக நினைவுகூரப்படுகிறது.
- ஜனவரி 30 – ஆம் தேதி மகாத்மா காந்தியின் நினைவாக தியாகிகள் தினம் அல்லது ஷாஹீத் திவாஸ் என்று அனுசரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- சீ டிராகன் என்பது அமெரிக்க கடற்படையால் நடத்தப்படும், பன்னாட்டு நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் (ASW) பயிற்சி ஆகும், இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.
- இத்தாலியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு (டி ட்ரைபோஜியார்கோஸ்) ஒளியை உறைய வைத்து திடப்பொருளாக மாற்றுவதைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
- ஸ்லோவாக்கியா நாட்டில் வேகமாக பரவி வரும் (கோமாரி நோய் பரவலினால்) கால்நடை தொற்றினால் அதன் அண்டை நாடான செக் குடியரசு எல்லைக் கட்டுப்பாடு விதித்துள்ளது.
- இந்தியன் ப்ரீமியர் லீக் 18-ஆவது கிரிக்கெட் தொடரானது தொடங்கி நடைபெற்று வருகிறது, இதில் விராட் கோலியின் 400 -ஆவது டி20 போட்டியில் பிசிசிஐ அவருக்கு நினைவுப் பரிசு வழங்கியது.