‘தமிழ் 99’ விசைப்பலகை:
- தமிழகம் முழுவதும் உள்ள தட்டச்சு பயிலகங்களில் இனி புதிதாக சேரும் மாணவர்களுக்கு ‘தமிழ் 99’ விசைப்பலகை மூலம் மட்டுமே பயிற்சி அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- ‘தமிழ் 99’ என்பது தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் விசைப்பலகையாகும். உலகம் முழுவதும் ஆங்கிலத்திற்கு ஒரே விசைப்பலகை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- தமிழ் 99 என்பது தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட விசைப்பலகை தளவமைப்பு ஆகும்.
- தமிழ் மொழியுடன் பயன்படுத்த பல ஒருமொழி மற்றும் இருமொழி எழுத்துருக்களுடன் கூடிய தளவமைப்பு,இது 13 ஜூன் 1999 அன்று அரசாங்க உத்தரவின் மூலம் அங்கீகரிக்கப்பட்டது.
மார்ச் 13: உலக சிறுநீரக தினம்.
- உலக சிறுநீரக தினம் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது,
- இந்த ஆண்டு மார்ச் 13, 2025 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- சிறுநீரக ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டோரின் கஷ்டத்தை குறைத்தல், சிறுநீரகப் பாதுகாப்பை வலியுறுத்துதல்.
தகவல் துளிகள்:
- சீனா, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நீர் சுத்திகரிப்பு ரசாயனம் டிரைகுளோரோ ஐசோசயனூரிக் அமிலம் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரியை மத்திய அரசு விதித்துள்ளது.
- தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மார்ச் 22ல் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
- அம்ருதா பல்கலைக்கழகம் சார்பில் தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் பொறியியல் தொழில் வழிகாட்டுதல் திட்டம் ‘ரைஸ் 2025’ வரும் மார்ச் 20 இல் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
- குவாக்கரெலி சிமண்ட்ஸ் பகுப்பாய்வு நிறுவனத்தின் உலகப் பல்கலைக்கழக பாடவாரி தரவரிசையில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் 31 – ஆவது இடம்பிடித்துள்ளது.
- சா்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் வேலூா் விஐடி பல்கலைக்கழகம் 142 – ஆவது இடம் பிடித்துள்ளது.
- பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ஐசிசி விருது அலானா கிங் வென்றார்.
- சிறந்த வீரருக்கான ஐசிசியின் விருதை 3-ஆவது முறையாக ஷுப்மன் கில் வென்றார்.