பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டம்:
- பிரதமரின் விவசாயிகள் நிதியதவி திட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ 6,000 நிதியுதவி வழங்கப்படும்.
- பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டம், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த, விவசாயிகளின் கடனைக் குறைக்க மற்றும் விவசாய முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதமா் மோடியால் கடந்த 2019 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- இத்திட்டத்தின்கீழ் தலா ரூ 2,000 என ஆண்டுக்கு 3 தவணைகளில் மொத்தம் ரூ 6,000 விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.
தொகுதி மறுசீரமைப்பு:
- ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும், மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்ய வேண்டுமென இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 82 மற்றும் 170 வலியுறுத்துகிறது.
- இப்படி மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய Delimitaion Commission என்கிற குழுவை அமைக்க வேண்டுமென்று 1952 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டம் கூறியது.
- பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரை செய்யப்பட வேண்டும்.
- இதற்குப் பிறகு இந்தியாவில் மூன்று முறை 1951, 1961 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தது.
- இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகள் குறைந்து அவற்றின் பிரதிநிதித்துவம் குறையும் எனக் கூறப்படுகிறது.
மார்ச் 12: மொரிஷியஸ் தினம்.
- மொரிஷியஸ் தினம் ஆண்டுதோறும் மார்ச் 12 அன்று கொண்டாடப்படுகிறது.
மார்ச் 12: புகைபிடிக்காத நாள்.
- புகைபிடிப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது புதன்கிழமை புகைபிடிக்காத நாள் அனுசரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- நாடு முழுவதும் 200 புற்றுநோயாளி பராமரிப்பு மையங்கள் 2025 – 26 ஆம் ஆண்டில் நிறுவ இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஹரியாணா மாநிலம், ஜஜ்ஜார் எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டிலேயே மிகப்பெரிய புற்றுநோய் சிகிச்சை மையமாக உள்ளது.
- மோரீஷஸ் நாட்டின் உயரிய ‘தி கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் அண்ட் கீ ஆஃப் தி இந்தியன் ஓஷன்’ விருதை பிரதமா் நரேந்திர மோடிக்கு வழங்கியுள்ளது.
- இது வெளிநாடுகளில் இருந்து பிரதமா் மோடி பெறும் 21 – ஆவது உயரிய விருதாகும்.
- மோரீஷஸ் குடியரசுத் தலைவர் தரம்பீர் கோகூல்.
- மோரீஷஸ் நாட்டு பிரதமா் நவீன்சந்திர ராம்கூலம்.
- ஓசிஐ அட்டை வைத்திருப்பவா்கள் காலக்கெடு இன்றி இந்தியாவில் வாழ்வதற்கும், பணிபுரிவதற்கும் படிப்பதற்கும் உரிமைகள் வழங்கப்படுகின்றன.
- தமிழ்நாட்டின் நீர்நிலைகள் மற்றும் ஈரநிலங்களைப் பாதுகாக்கப் போராடியதற்காக, ஜெயஸ்ரீ வெங்கடேசனுக்கு ராம்சார் விருது வழங்கப்பட்டது.
- இந்திய மல்யுத்த சம்மேளனம் செயல்பட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.