பிரதமா் மோடிக்கு பார்படாஸ் நாட்டின் உயரிய விருது:
- கரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமா் மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பார்படாஸ் நாட்டின் உயரிய தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
- ‘கயானா நாட்டின் ஜார்ஜ் டவுனில் கடந்த ஆண்டு, நவம்பரில் நடைபெற்ற 2-ஆவது இந்தியா-கரிகாம் தலைவா்கள் உச்சி மாநாட்டின்போது பிரதமா் மோடியுடனான சந்திப்பில் பார்படாஸ் பிரதமர் மியா அமோர் மோட்லி இந்த விருதுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.
கங்கை நதிநீா் ஒப்பந்தம்: இந்தியா-வங்கதேசம்
- கங்கை நதிநீா் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவுள்ள நிலையில், இது தொடர்பாக இந்தியா-வங்கதேசம் ஆகிய இருநாடுகளின் பேச்சுவார்த்தை மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் தொடங்கியது.
- இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளிலும் 54 நதிகள் பாய்ந்தோடுவதாக மத்திய ஜல்சக்தி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இருநாடுகளிலும் பாய்ந்தோடும் நதிநீா் பகிர்வு குறித்த விவகாரங்களுக்கு தீா்வுகாண 1972-இல் இருநாட்டு உறுப்பினா்களைக்கொண்ட கூட்டு நதிநீா் ஆணையம் அமைக்கப்பட்டது.
- கங்கை நதிநீா் ஒப்பந்தத்தில் அப்போதைய இந்திய பிரதமா் எச்.டி.தேவே கௌடாவும் வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனாவும் 1996, டிசம்பா் 12 – இல் கையொப்பமிட்டனா்.
- அந்த நேரத்தில், எச்.டி. தேவகவுடா இந்தியாவின் பிரதமராகவும், ஜோதி பாசு மேற்கு வங்க முதல்வராகவும் இருந்தனர்.
- கங்கை நதி என்பது இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளின் வழியாக பாய்கின்ற ஒரு ஆறாகும்.
- கங்கை இந்தியாவின் தேசிய நதி ஆகும்.
- இமய மலையில் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள கங்கோத்ரியில் தொடங்கும் பாகிரதி நதியானது, தேவப்பிரயாக் எனுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கையாகிறது.
- பிறகு உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள் வழியாகச் சென்று, ஹூக்லி, பத்மா என இரு ஆறுகளாக பிரிந்து முறையே மேற்கு வங்காளம், வங்கதேசம் வழியாகச் சென்று மிகப்பெரிய வளமான கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
- கங்கை ஆறு மொத்தம் 2525 கி.மீ ஓடுகிறது.
- ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், வாரணாசி, பட்னா, கொல்கத்தா ஆகியவை இவ்வாற்றின் கரையில் அமைந்த முக்கிய நகரங்களாகும்.
- வங்கதேசத்தில் கங்கை ஆறு பத்மா ஆறு என அழைக்கப்படுகிறது.
- கங்கை ஆற்றின் துணை ஆறுகள்: யமுனை ஆறு, கோசி ஆறு, கோமதி ஆறு, காக்ரா ஆறு, கண்டகி ஆறு.
தகவல் துளிகள்:
- தேவபூமி என்று அழைக்கப்படும் மாநிலம் உத்தராகண்ட்.
- 2023 – ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை நக்கீரன் இரா.கோபால் மற்றும் சுகிதா சாரங்கராஜ் ஆகிய இருவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- தமிழகத்தில் தஞ்சாவூா், திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தேக்கு மர உற்பத்தியை மேம்படுத்தவும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மரங்களின் தரத்தை உயா்த்தவும் ஜப்பான் நாடு நிதியுதவி வழங்கியுள்ளது.
- பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 39 புதிய மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- உலக பயங்கரவாத வரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
- உலகளாவிய பயங்கரவாத குறியீடு 2025 அறிக்கையின் படி, புர்கினா ஃபசோ முதல் இடத்திலும், சிரியா 3 – ம் இடத்திலும் உள்ளன.
- பிராக் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்திய ஜிஎம் அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்றார்.