தேஜஸ் போர் விமானத்தில் அதிநவீன உயிர் காக்கும் அமைப்புமுறை பரிசோதனை:
- ‘தேஜஸ்’இலகு ரக போர் விமானத்தில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட விமானிகளுக்கான அதிநவீன உயிர் காக்கும் அமைப்புமுறை, 50,000 அடி உயரத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
- போர் விமானங்களில் பறக்கும்போது விமானிகள் சுவாசிப்பதற்காக பழைமையான சிலிண்டா் அடிப்படையிலான ஆக்ஸிஜனை சார்ந்திருக்காமல், பயணத்தின்போதே ஆக்ஸிஜன் உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் ஒருங்கிணைந்த உயிர் காக்கும் அமைப்புமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
- ‘ஆன்-போர்டு ஆக்ஸிஜன் ஜெனரேட்டிங் சிஸ்டம்’அடிப்படையிலான இந்த அமைப்பு, விமானிகள் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை உருவாக்குவதோடு, அவற்றை ஒழுங்குபடுத்தும் திறனும் கொண்டவை.
- மிக்-29கே உள்ளிட்ட பிற போர் விமானங்களில் பயன்படுத்தும் வகையில் இந்த அமைப்புமுறையில் உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.
தில்லியில் ரைசினா மாநாடு:
- ஆண்டுதோறும் தில்லியில் ரைசினா மாநாடு நடைபெறுகிறது.
- இதில் புவி அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
- இந்த மாநாடு நிகழாண்டு மார்ச் 17 முதல் மார்ச் 19 வரை நடைபெறுகிறது.
- இந்த மாநாட்டில் நியூசிலாந்து பிரதமா் கிறிஸ்டோஃபர் லக்ஸன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார்.
- பல ஐரோப்பிய அமைச்சர்கள், துருக்கி, லிதுவேனியா, ஸ்லோவேனியா, இத்தாலி, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் மூத்த அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
மார்ச் 5: சர்வதேச ஆயுதக் குறைப்பு மற்றும் பரவல் தடை விழிப்புணர்வு தினம்.
- சர்வதேச ஆயுதக் குறைப்பு மற்றும் பரவல் தடுப்பு விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 5 அன்று கொண்டாடப்படுகிறது.
- இதன் மூலம், ஆயுதக் குறைப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த முயற்சி செய்யப்படுகிறது.
தகவல் துளிகள்:
- நாட்டில் பெண் தொழிலாளா்களுக்கான பங்களிப்பு விகிதம் 41.7 சதவீதம் அதிகரித்து பெண்களுக்கான வேலையின்மை 3.2 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் அம்மாநிலத்தின் 9 – வது புலிகள் காப்பகம் ‘மாதவ் புலிகள் காப்பகம்’எனும் பெயரில் திறக்கப்படவுள்ளது.
- புது தில்லியில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை தோ்தல் அதிகாரிகளின் மாநாடு முதல்முறையாக நடத்தப்பட்டது.
- ஜான் தயாள், நவைத் ஹமீது, விபின் குமார் திரிபாதி ஆகிய மூவருக்கு காயிதே மில்லத் விருது வழங்கப்பட்டது.
- வாந்தாரா வனவிலங்குகள் பாதுகாப்பு, மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை 4 மார்ச் 2025 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.