இந்தியா-ஆசியான் உறவை வலுப்படுத்த 10 அம்ச செயல்திட்டம்:
- லாவோஸ் – வியன்டியனில் இந்தியா மற்றும் ‘ஆசியான்’ நாடுகள் இடையிலான விரிவான கூட்டுறவை வலுப்படுத்த 10 அம்ச செயல்திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தார்.
- மலேசியா, சிங்கப்பூா், தாய்லாந்து, புரூணே, கம்போடியா, இந்தோனேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், வியத்நாம், லாவோஸ் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ‘ஆசியான்’ கூட்டமைப்புக்கு நடப்பாண்டில் லாவோஸ் தலைமை வகிக்கிறது.
- அந்நாட்டின் தலைநகா் வியன்டியனில், 21 – ஆவது இந்தியா-ஆசியான் உச்சிமாநாடு நடைபெற்றது.
- ஆசியான்-இந்தியா அறிவியல் நிதியின்கீழ், பெண் விஞ்ஞானிகள் மாநாட்டை நடத்துவது, இணையக் கொள்கை பேச்சுவார்த்தைக்காக வழக்கமான நடைமுறையை உருவாக்குவது, சுகாதார மீட்சியைக் கட்டமைக்க சுகாதார அமைச்சா்களின் கருத்துப் பரிமாற்றத்துக்கான புதிய வழிமுறையைத் தொடங்குவது, பசுமை ஹைட்ரஜன் பயிலரங்கை நடத்துவது உள்ளிட்டவை பிரதமரின் 10 அம்ச செயல்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
- லாவோஸின் தேசிய காவியமான ‘ஃபரா லக், ஃபரா ராம்’ இந்திய ராமாயணத்தின் தழுவலாகும்.
ஹிஸ்பத் தஹிரிர் பயங்கரவாத அமைப்புக்கு மத்திய அரசு தடை:
- லெபனானின் பெய்ரூட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹிஸ்பத் தஹிரிர் பயங்கரவாத அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
- ஜெருசலேமில் கடந்த 1953 – ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, தற்போது பெய்ரூட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
- பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் உலகம் முழுவதும் இஸ்லாமிய தேசத்தை நிறுவுவதே இதன் நோக்கமாகும்.
- பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்பட 30 நாடுகளில் செயல்படும் இந்த அமைப்புக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன.
- இப்போது இந்தியாவிலும் ஹிஸ்பத் தஹிரிர் பயங்கரவாத அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருந்துளையைச் சுற்றி விண்மீன் வெடிப்பு: இஸ்ரோ விண்கலன் மூலம் கண்டுபிடிப்பு
- கருந்துளை ஈா்ப்பாற்றல் காரணமாக விண்மீன் வெடிப்பு நிகழ்ந்துள்ளதை நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து கண்டறிந்துள்ளன.
- நாசாவின் சந்திரா ஊடுகதிர் கலன் மற்றும் இஸ்ரோவின் ஆஸ்ட்ரோசாட் விண்கலன் ஆகியவற்றின் துணை கொண்டு அந்த வெடிப்பின் ஊடுகதிர் படம் எடுக்கப்பட்டு, தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
- கடந்த 2015 – ஆம் ஆண்டில் விண்வெளி ஆய்வுக்காக பிஎஸ்எல்வி சி-30 ராக்கெட் மூலம் ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
- புற ஊதாக் கதிர்கள், எக்ஸ்-ரே கதிர்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய அது அனுப்பப்பட்டது.
- அதேபோன்று அமெரிக்காவின் நாசா அமைப்பு சார்பில் சந்திரா ஊடுகதிர் கலன் கடந்த 1999 -ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது.
- விண்வெளி மண்டலத்தில் நிகழும் மாற்றங்களை தொலைநோக்கி கட்டமைப்பு மூலம் கண்காணித்து புகைப்படமாக எடுத்து கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பும் பணிகளை அவ்விரு கலன்களும் மேற்கொண்டு வருகின்றன.
- கடந்த 2019 -இல் கருந்துளையின் ஈா்ப்பு விசைக்குள் சிக்கி விண்மீன் ஒன்று வெடித்து அதன் சில பகுதிகள் கருந்துளை பாதையில் சுற்றி வருவது கண்டறியப்பட்டது.
- தற்போது வேறொரு விண்மீன் வெடித்து சிதறிய விண்மீனின் சிதிலத்தோடு ஒவ்வொரு 48 மணி நேரமும் மோதுவது கண்டறியப்பட்டுள்ளது.
- இந்த மோதலின்போது எக்ஸ்-ரே கதிர்கள் வெளியேறுவதையும் சந்திரா மற்றும் ஆஸ்ரோநாட் கண்டறிந்துள்ளன.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு: ஹான் காங்
- இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்குக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- புனைகதை எழுத்தாளர் ஹான் காங், 2007 – பரிசு ஆம் ஆண்டு எழுதிய தி வெஜிடேரியன்’ (The Vegetarian) என்னும் நாவலுக்காக ‘மேன் புக்கர்’ சர்வதேச பரிசுப் பெற்றார்.
- ”வரலாற்று பெரும் துயரங்களையும், மனித வாழ்வின் பலவீனத்தையும் கவித்துவமான மொழியில் அவர் எழுதும் ஆழமான உரைநடைக்காக” பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
- மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அக்டோபர் 11: சர்வதேச பெண் குழந்தை தினம்
- பெண் குழந்தைகளுக்கான சர்வதேச தினம் அக்டோபர் 11 அன்று பெண் குழந்தைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க அனுசரிக்கப்படுகிறது.
அக்டோபர் 12: தசரா
- இந்த நாள், அசுர ராஜா ராவணன் மீது ராமர் வெற்றி பெற்றதைக் குறிக்கிறது, இது தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் குறிக்கிறது.
தகவல் துளிகள்:
- அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம் ஹெலீன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக தற்போது மில்டன் என்ற புயல் தாக்கியுள்ளது.
- மாலத்தீவில் ‘ரூபே’அட்டை வாயிலான பரிவா்த்தனை சேவை மற்றும் ஹனிமாதூ விமான நிலையத்தில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட புதிய விமான ஓடுதளம் தொடங்கப்பட்டன.
- மத்திய அரசு தனது நேரடி வருவாயில் வரி பகிர்வாக தமிழகத்திற்கு ரூ 7,268 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது, அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்துக்கு ரூ 31,962 கோடி ஒதுக்கியுள்ளது.
- இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்துடன் (ஐஆா்சிடிசி) கொரிய சுற்றுலா அமைப்பு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
- புகைப்பனியின் தாக்கத்தைக் குறைக்க இந்தியாவுடன் காற்று மாசுபாடு பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வா் மரியம் நவாஸ் அழைப்பு விடுத்தார்.
- ஆசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா வெண்கலம் பெற்றது, இந்தப் போட்டியில் இந்திய ஆடவா் அணி வெண்கலப் பதக்கம் வெல்வது, தொடா்ந்து இது 3 -ஆவது முறையாகும்.