க்வாட் உச்சி மாநாடு:
- அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தலைமையில் டெலாவோ் மாகாணத்தில் உள்ள வில்மிங்டனில் செப்டம்பா் 21-ஆம் தேதி நடைபெறும் 4-ஆவது க்வாட் தலைவா்கள் வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமா் மோடி கலந்து கொள்கிறார்.
- அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று, அடுத்த ஆண்டு க்வாட் உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
- Quadrilateral Security Dialogue (QUAD) குழு என்பது இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய ஒரு முறைசாரா மூலோபாய மன்றமாகும்.
- QUAD என்பது பொருளாதாரம், தொழில்நுட்பம், காலநிலை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைக்க ஒரு வாய்ப்பாகும்.
- கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமானம் மற்றும் பேரிடர் பதில் ஆகியவை QUAD நிகழ்ச்சி நிரலின் முக்கிய அம்சமாகும்.
ஏஐ தொழில்நுட்ப சேவைகள்: பரோடா வங்கி அறிமுகம்:
- வாடிக்கையாளா்களின் விசாரணைகளைக்கு பதில் அளிப்பதற்காகவும் வங்கி ஊழியா்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்காகவும் இரு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பச் செயலிகளை இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
- வாடிக்கையாளா்களின் விசாரணைகளைக்கு பதில் அளிக்க, வங்கி ஊழியா்களின் செயல்திறனை மேம்படுத்த ‘ஞான்சஹாய், ‘அதிதி’ என்ற இரு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பச் செயலிகளை பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 18 – 24: சர்வதேச காதுகேளாதோருக்கான வாரம்
- சர்வதேச காதுகேளாதோருக்கான வாரம் காதுகேளாதோருக்கான உலக மன்றம் (WFD – World Federation of the Deaf), அதன் தேசிய மன்றங்கள் மற்றும் உலகளவில் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றால் அனுசரிக்கப்படுகிறது.
செப்டம்பர் 18: உலக மூங்கில் தினம்
- உலகளவில் மூங்கில் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க செப்டம்பர் 18 அன்று உலக மூங்கில் தினம் அனுசரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- தேசிய அறிவியல் புத்தாக்க ஆய்வு கண்காட்சி தில்லியில் நடைபெற்றது.
- இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின், நிகழாண்டின் மூன்றாவது குறுகிய கால தொழில்பழகுநா் திட்டம் புது தில்லியில் தொடங்கியது.
- ஒடிசா அரசின் பெண்களை மையமாகக் கொண்ட சுபத்ரா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார், சுபத்ரா திட்டத்தின் கீழ் 2024 – 25 முதல் 2028 – 29 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 21-60 வயதுக்குள்பட்ட அனைத்து தகுதியான பயனாளிகளும் ரூ 50 ஆயிரம் வரை பெறுவார்கள்.
- விளையாட்டு வீரா்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களை கண்டறிய கையடக்க ‘பாயின்ட் ஆஃப் கோ் அல்ட்ராசவுண்ட்’ என்ற ஸ்கேனா் கருவியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.
- ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவா் ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, சீனாவை வீழ்த்தி 5 – ஆவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது.
- லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் சதா்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
- குவாடலராஜா ஓபன் டென்னிஸ் போட்டியில் போலந்து வீராங்கனை மகதலேனா ஃபெச் சாம்பியன் பட்டம் வென்றார்.
- தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் கடுமையான வறட்சி காரணமாக, மக்களுக்கு உணவளிப்பதற்காக 200 யானைகளைக் கொல்ல அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.