13th April Daily Current Affairs – Tamil

கலைஞரின் கனவு இல்லத் திட்டம்:

  • கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம், வீடில்லாதவா்களின் கனவு நிறைவேறி வருகிறது.
  • இந்தத் திட்டத்தில் சுமார் 360 சதுர அடி பரப்பளவில் கான்கிரீட் வீடுகள் கட்ட ரூ 3.50 லட்சம் வழங்கப்படுகிறது.
  • நிகழ் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • குடிசைவாசிகளுக்கு நிரந்தர வீடுகள் கட்டும் பணி 1975 – ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு முன்னோடி முயற்சியாக தொடங்கப்பட்டது.
  • அதைத் தொடர்ந்து, குடிசை இல்லாத தமிழகம் என்ற இலக்கை அடைவதற்காக, 2010ல், ‘கலைஞர் வீடு வாழங்கும் திட்டம்’ தொடங்கப்பட்டது.

ஏப்ரல் 13 – ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம்.

  • இது 1919 – ஆம் ஆண்டு ஏப்ரல் 13 – ஆம் தேதி அமிர்தசரஸில் நடந்தது,
  • இது அமிர்தசரஸ் படுகொலை என்றும் அழைக்கப்படுகிறது.
  • இந்த நாளில், ஜெனரல் டயரின் தலைமையில் பிரிட்டிஷ்,  இந்தியாவின் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸில் நிராயுதபாணியான இந்தியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
  • இதில் பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

ஏப்ரல் 13: பைசாகி தினம்.

  • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 13 அல்லது 14 – ஆம் தேதிகளில் பஞ்சாபி சமூகத்தினரால் கொண்டாடப்படும் ஒரு அறுவடைத் திருவிழாவாகும்.
  • இந்த ஆண்டு ஏப்ரல் 13 – ஆம் தேதி கொண்டாடப்படும் இது சீக்கியர்களுக்கு முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும்.

தகவல் துளிகள்:

  1. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அருண் பல்லி நியமிக்கப்பட்டார்.
  2. புதுதில்லியில் கார்னகி உலகளாவிய தொழில்நுட்ப உச்சிமாநாடு நடைபெற்றது.
  3. மத்திய ஆப்பிரிக்க நாடான கபோனில் ராணுவப் புரட்சிக்கு பின்னர் முதல் முறையாக அதிபர் தேர்தல் நடைபெறுகின்றது.
  4. நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் சாய் சுதர்சன்.
  5. தமிழகத்தைச் சேர்ந்த இவர் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
  6. அர்ஜென்டினாவின் பியுனோஸ் அயர்ஸ் நகரில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது.
  7. இதில் இந்திய வீராங்கனை இந்தர் சிங், மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் திறமையாக விளையாடி தங்கம் பதக்கம் வென்றார்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these