கலைஞரின் கனவு இல்லத் திட்டம்:
- கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம், வீடில்லாதவா்களின் கனவு நிறைவேறி வருகிறது.
- இந்தத் திட்டத்தில் சுமார் 360 சதுர அடி பரப்பளவில் கான்கிரீட் வீடுகள் கட்ட ரூ 3.50 லட்சம் வழங்கப்படுகிறது.
- நிகழ் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- குடிசைவாசிகளுக்கு நிரந்தர வீடுகள் கட்டும் பணி 1975 – ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு முன்னோடி முயற்சியாக தொடங்கப்பட்டது.
- அதைத் தொடர்ந்து, குடிசை இல்லாத தமிழகம் என்ற இலக்கை அடைவதற்காக, 2010ல், ‘கலைஞர் வீடு வாழங்கும் திட்டம்’ தொடங்கப்பட்டது.
ஏப்ரல் 13 – ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம்.
- இது 1919 – ஆம் ஆண்டு ஏப்ரல் 13 – ஆம் தேதி அமிர்தசரஸில் நடந்தது,
- இது அமிர்தசரஸ் படுகொலை என்றும் அழைக்கப்படுகிறது.
- இந்த நாளில், ஜெனரல் டயரின் தலைமையில் பிரிட்டிஷ், இந்தியாவின் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸில் நிராயுதபாணியான இந்தியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
- இதில் பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
ஏப்ரல் 13: பைசாகி தினம்.
- ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 13 அல்லது 14 – ஆம் தேதிகளில் பஞ்சாபி சமூகத்தினரால் கொண்டாடப்படும் ஒரு அறுவடைத் திருவிழாவாகும்.
- இந்த ஆண்டு ஏப்ரல் 13 – ஆம் தேதி கொண்டாடப்படும் இது சீக்கியர்களுக்கு முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும்.
தகவல் துளிகள்:
- ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அருண் பல்லி நியமிக்கப்பட்டார்.
- புதுதில்லியில் கார்னகி உலகளாவிய தொழில்நுட்ப உச்சிமாநாடு நடைபெற்றது.
- மத்திய ஆப்பிரிக்க நாடான கபோனில் ராணுவப் புரட்சிக்கு பின்னர் முதல் முறையாக அதிபர் தேர்தல் நடைபெறுகின்றது.
- நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் சாய் சுதர்சன்.
- தமிழகத்தைச் சேர்ந்த இவர் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
- அர்ஜென்டினாவின் பியுனோஸ் அயர்ஸ் நகரில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை இந்தர் சிங், மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் திறமையாக விளையாடி தங்கம் பதக்கம் வென்றார்.