9th April Daily Current Affairs – Tamil

நடைமுறைக்கு வந்தது வக்ஃப் திருத்தச் சட்டம்:

  • நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம் நாடு முழுமைக்கும் நடைமுறைக்கு வந்தது.
  • மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சகம் அறிவிக்கையை வெளியிட்டது.
  • இந்த திருத்தச் சட்ட மசோதா மக்களவையில் ஏப்ரல் 3 – ஆம் தேதியும், மாநிலங்களவையில் ஏப்ரல் 4 – ஆம் தேதியும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஏப்ரல் 5 – ஆம் தேதி ஒப்புதல் வழங்கினார்.
  • வக்ஃப் திருத்தச் சட்டமானது வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை நியமிக்க வழிவகை செய்கிறது.
  • குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுவோர் மட்டுமே வக்ஃப் சொத்துகளை அர்ப்பணிக்க முடியும்.
  • ரூ 1 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் வக்ஃப் அமைப்புகள் அரசால் நியமிக்கப்படும் தணிக்கையாளர்களால் தணிக்கைக்கு உள்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
  • வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 – இன் பிரிவு 1 – இன் துணைப் பிரிவு (2) – இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், இச் சட்டம் நாடு முழுமைக்கும் முதல் நடைமுறைக்கு வந்தது.

காற்றாலை, சூரிய சக்தி மின் உற்பத்தி: 3 – ஆம் இடம் இந்தியா

  • காற்றாலை, சூரியசக்தி மின் உற்பத்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி உலகின் மூன்றாவது அதிக உற்பத்தி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
  • கடந்த ஆண்டு உலக அளவில் செய்யப்பட்ட மின் உற்பத்தியில் காற்றாலைகள் மற்றும் சூரிய சக்தி மூலம் 15% மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இதில், இந்தியாவின் பங்கு 10 சதவீதமாகும்.
  • முதல் இரண்டு இடங்களில் சீனா, அமெரிக்கா உள்ளன.

முத்ரா திட்டம்: ரூ 33 லட்சம் கோடிக்கு மேல் கடன்கள்

  • முத்ரா திட்டத்தின்கீழ், இதுவரை ரூ 33 லட்சம் கோடிக்கு மேல் 52 கோடி எண்ணிக்கையிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • சிறு-குறு தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பிணையில்லா வங்கிக் கடன் வழங்கும் முத்ரா திட்டம், கடந்த 2015, ஏப்ரல் 8 – ஆம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் கடன் உச்சவரம்பு கடந்த 2024 – ஆம் ஆண்டில் ரூ 20 லட்சமாக உயர்த்தப்பட்டது.
  • சிசு (ரூ 50,000 வரை), கிஷோர் (ரூ 5 லட்சம் வரை), தருண் (ரூ 10 லட்சம் வரை), தருண் பிளஸ் (ரூ 20 லட்சம் வரை) ஆகிய பிரிவுகளின்கீழ் கடன்கள் வழங்கப்படுகின்றன.
  • நாட்டின் இளைஞர்கள் இடையே தொழில்முனைவு உணர்வை ஊக்குவிக்க முத்ரா திட்டம் பேருதவியாக உள்ளது.
  • இளைஞர்கள் தங்களின் தொழில்முனைவு திறனை வெளிப்படுத்த இத்திட்டம் அதிகாரமளித்துள்ளது.
  • மத்திய அரசின் முன்னெடுப்புகளில் ஒன்றான முத்ரா திட்டத்தின் 10 – ஆம் ஆண்டு தினம்  கடைபிடிக்கப்பட்டது.
  • ஆரம்பத்தில் இத்திட்டத்தின் கடன் வரம்பு ரூ 5 லட்சமாக இருந்தது, இப்போது ரூ 20 லட்சமாக உயா்ந்துள்ளது.
  • முத்ரா திட்டத்தின்கீழ் அதிக கடன்கள் வழங்கப்பட்ட மாநிலங்கள் வரிசையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

சர்வதேச குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆண்டு“:

  • 2025 – ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் “சர்வதேச குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆண்டாக” (International Year of Quantum Science and Technology – IYQ) அறிவிக்கப்பட்டுள்ளது.
  • குவாண்டம் அறிவியல் மற்றும் பயன்பாடுகளின் முக்கியத்துவம் குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிக்கவும், குவாண்டம் இயக்கவியலின் 100 – வது ஆண்டைக் கொண்டாடுவதற்காகவும் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் துளிகள்:

  1. துபை பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
  2. முத்ரா திட்டத்தின்கீழ் அதிக கடன்கள் வழங்கப்பட்ட மாநிலங்கள் வரிசையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
  3. அரசமைப்பின் 200 – ஆவது விதி, சட்ட பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது ஒப்புதல் அளித்தல், அவற்றை நிறுத்தி வைத்தல், குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தல் ஆகிய மூன்று வாய்ப்புகளை ஆளுநருக்கு தருகிறது.
  4. காற்றாலை, சூரியசக்தி மின் உற்பத்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி உலகின் மூன்றாவது அதிக உற்பத்தி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these