நடைமுறைக்கு வந்தது வக்ஃப் திருத்தச் சட்டம்:
- நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம் நாடு முழுமைக்கும் நடைமுறைக்கு வந்தது.
- மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சகம் அறிவிக்கையை வெளியிட்டது.
- இந்த திருத்தச் சட்ட மசோதா மக்களவையில் ஏப்ரல் 3 – ஆம் தேதியும், மாநிலங்களவையில் ஏப்ரல் 4 – ஆம் தேதியும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஏப்ரல் 5 – ஆம் தேதி ஒப்புதல் வழங்கினார்.
- வக்ஃப் திருத்தச் சட்டமானது வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை நியமிக்க வழிவகை செய்கிறது.
- குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுவோர் மட்டுமே வக்ஃப் சொத்துகளை அர்ப்பணிக்க முடியும்.
- ரூ 1 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் வக்ஃப் அமைப்புகள் அரசால் நியமிக்கப்படும் தணிக்கையாளர்களால் தணிக்கைக்கு உள்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
- வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 – இன் பிரிவு 1 – இன் துணைப் பிரிவு (2) – இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், இச் சட்டம் நாடு முழுமைக்கும் முதல் நடைமுறைக்கு வந்தது.
காற்றாலை, சூரிய சக்தி மின் உற்பத்தி: 3 – ஆம் இடம் இந்தியா
- காற்றாலை, சூரியசக்தி மின் உற்பத்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி உலகின் மூன்றாவது அதிக உற்பத்தி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
- கடந்த ஆண்டு உலக அளவில் செய்யப்பட்ட மின் உற்பத்தியில் காற்றாலைகள் மற்றும் சூரிய சக்தி மூலம் 15% மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இதில், இந்தியாவின் பங்கு 10 சதவீதமாகும்.
- முதல் இரண்டு இடங்களில் சீனா, அமெரிக்கா உள்ளன.
முத்ரா திட்டம்: ரூ 33 லட்சம் கோடிக்கு மேல் கடன்கள்
- முத்ரா திட்டத்தின்கீழ், இதுவரை ரூ 33 லட்சம் கோடிக்கு மேல் 52 கோடி எண்ணிக்கையிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
- சிறு-குறு தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பிணையில்லா வங்கிக் கடன் வழங்கும் முத்ரா திட்டம், கடந்த 2015, ஏப்ரல் 8 – ஆம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் கடன் உச்சவரம்பு கடந்த 2024 – ஆம் ஆண்டில் ரூ 20 லட்சமாக உயர்த்தப்பட்டது.
- சிசு (ரூ 50,000 வரை), கிஷோர் (ரூ 5 லட்சம் வரை), தருண் (ரூ 10 லட்சம் வரை), தருண் பிளஸ் (ரூ 20 லட்சம் வரை) ஆகிய பிரிவுகளின்கீழ் கடன்கள் வழங்கப்படுகின்றன.
- நாட்டின் இளைஞர்கள் இடையே தொழில்முனைவு உணர்வை ஊக்குவிக்க முத்ரா திட்டம் பேருதவியாக உள்ளது.
- இளைஞர்கள் தங்களின் தொழில்முனைவு திறனை வெளிப்படுத்த இத்திட்டம் அதிகாரமளித்துள்ளது.
- மத்திய அரசின் முன்னெடுப்புகளில் ஒன்றான முத்ரா திட்டத்தின் 10 – ஆம் ஆண்டு தினம் கடைபிடிக்கப்பட்டது.
- ஆரம்பத்தில் இத்திட்டத்தின் கடன் வரம்பு ரூ 5 லட்சமாக இருந்தது, இப்போது ரூ 20 லட்சமாக உயா்ந்துள்ளது.
- முத்ரா திட்டத்தின்கீழ் அதிக கடன்கள் வழங்கப்பட்ட மாநிலங்கள் வரிசையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
“சர்வதேச குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆண்டு“:
- 2025 – ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் “சர்வதேச குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆண்டாக” (International Year of Quantum Science and Technology – IYQ) அறிவிக்கப்பட்டுள்ளது.
- குவாண்டம் அறிவியல் மற்றும் பயன்பாடுகளின் முக்கியத்துவம் குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிக்கவும், குவாண்டம் இயக்கவியலின் 100 – வது ஆண்டைக் கொண்டாடுவதற்காகவும் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் துளிகள்:
- துபை பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
- முத்ரா திட்டத்தின்கீழ் அதிக கடன்கள் வழங்கப்பட்ட மாநிலங்கள் வரிசையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
- அரசமைப்பின் 200 – ஆவது விதி, சட்ட பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது ஒப்புதல் அளித்தல், அவற்றை நிறுத்தி வைத்தல், குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தல் ஆகிய மூன்று வாய்ப்புகளை ஆளுநருக்கு தருகிறது.
- காற்றாலை, சூரியசக்தி மின் உற்பத்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி உலகின் மூன்றாவது அதிக உற்பத்தி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.