கொதிகலன் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்:
- 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட புதிய கொதிகலன் சட்ட மசோதா-2024 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- கொதிகலன்களை ஒழுங்குபடுத்துதல், நீராவி கொதிகலன்களின் வெடிப்பு அபாயத்திலிருந்து மக்களின் உயிா் மற்றும் சொத்துக்களைப் பாதுகாத்தல், கொதிகலன் பதிவு நடைமுறையில் சீரானதன்மை ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் வகையில் நூற்றாண்டு பழைமையான 1923-ஆம் ஆண்டு கொதிகலன் சட்டத்துக்கு மாற்றாக இந்தப் புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.
- சில விதிமுறைகளை தளா்த்தி, வணிகம் செய்வதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த மசோதா, கொதிகலனுக்குள் பணிபுரியும் நபா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை வழங்குகிறது.
- மேலும், கொதிகலன்களை பழுதுபாா்ப்பது தகுதிவாய்ந்த மற்றும் திறமையான நபா்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது.
நிதி மசோதா 2025:
- இணையவழி விளம்பரங்களுக்கு 6 சதவீத வரியை ரத்து செய்யும் திருத்தம் உள்பட மத்திய அரசின் 35 திருத்தங்களுடன், மக்களவையில் நிதி மசோதா 2025 நிறைவேற்றப்பட்டது.
- நிதியாண்டில் தனிநபா் வருமான வரி வசூல் 13.14 சதவீதம் வளரும் என்று உறுதியான தரவுகள் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது.
- இணையவழி விளம்பரங்களுக்கு 6 சதவீத வரியை ரத்து செய்யும் திருத்தம் மசோதாவில் கொண்டுவரப்பட்டது.
- நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா:
- தேசிய-மாநில பேரிடா் மேலாண்மை ஆணையங்களின் திறன்மிக்க செயல்பாட்டை உறுதி செய்யும் பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா-2024, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- இம்மசோதாவுக்கு மக்களவை ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிய நிலையில், மாநிலங்களவையில் நிறைவேறியது.
- கடந்த 2005-ஆம் ஆண்டின் பேரிடா் மேலாண்மை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வழிவகுக்கிறது.
- இச்சட்ட அமலாக்கத்தில் மாநில அரசுகள் எதிா்கொண்ட சிரமங்கள் மற்றும் மாநில அரசுகளின் பரிந்துரைகள் அடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- பேரிடா் மீட்பில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒரே சீரான நடைமுறைகளை உறுதி செய்யயும் வகையில் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
மியூசிக் அகாதெமி 99-ஆம் ஆண்டு விருதுகள்:
- மியூசிக் அகாதெமியின் 99-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- வயலின் இசைக் கலைஞா் ஆர்.கே.ஸ்ரீராம்குமாருக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்படவுள்ளது.
- இசைக் கலைஞா் சியாமளா வெங்கேடஸ்வரன், தவில் இசைக் கலைஞர் ஆர்.கோவிந்தராஜன் ஆகியோர் ‘சங்கீத கலா ஆசார்யா’ விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனர்.
- கதகளி இசைக் கலைஞா் மாடம்பி சுப்ரமணிய நம்பூதிரி, வீணை இசைக் கலைஞா்கள் ஜெ.டி.ஜெயராஜ் கிருஷ்ணன் மற்றும் ஜெயஸ்ரீ ஜெயராஜ் கிருஷ்ணன் ஆகியோா் ‘டிடிகே விருதுக்கு’ தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- சி.ஏ.ஸ்ரீதரா ‘இசை அறிஞா்’ விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளார்.
- பரத நாட்டிய கலைஞா் ஊர்மிளா சத்தியநாராயணா ‘நிருத்ய கலாநிதி’ விருதுக்குத் தோ்வு செய்யப்படுள்ளார்.
மார்ச் 25: சர்வதேச பிறக்காத குழந்தை தினம்.
- சர்வதேச பிறக்காத குழந்தை தினம் மார்ச் 25 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- இது கருக்கலைப்புக்கு எதிரான நாளாக அனுசரிக்கப்படுகிறது.
- ஐ.நா.வில் பணியாற்றும் போது இறந்த பத்திரிகையாளரான அலெக் கோலெட் கடத்தப்பட்டதன் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 25 அன்று ஐக்கிய நாடுகள் சபையால் இது அனுசரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- யமுனை நதியை தூய்மைப்படுத்துவும் தில்லியின் கழிவுநீா் வடிகால் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் ரூ 1,500 கோடி மதிப்பிலான விரிவான திட்டத்தை முதல்வர் ரேகா குப்தா அறிவித்தார்.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் (100 நாள் வேலைத் திட்டம்) உத்தர பிரதேசத்தைவிட, தமிழகத்துக்கு நிதியாண்டில் அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது.
- ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ தொடா்பான மசோதாக்களை ஆய்வு செய்வதற்காக பி.பி. சௌதரி தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலம் நீட்டிக்கபட்டது.
- நிதிச் செயலராக அஜய் சேத் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், 2005 [MGNREGA] கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி நூல்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
- நாட்டில் மின்சார வாகனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கார்பன் உமிழ்வு இல்லா செயல்திட்டத்தை (ஜீரோ எமிஷன்) தொடங்கியுள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
- குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆகக் குறைக்க நேபாள அரசு திட்டமிட்டுள்ளது.