4 சீன பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி:
- சீனாவில் தயாரிக்கப்படும் ‘வேக்வம் ஃபிளாஸ்க் , அலுமினியம் ஃபாயில் காகிதம், மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் சில வகை காந்தங்கள், டிரைகுளோரோ ஐசோசைனூரிக் அமிலம் ஆகிவற்றுக்கு மத்திய அரசு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளது.
- பொருள் குவிப்பு தடுப்பு வரி:
- பொருள் குவிப்பு தடுப்பு வரி என்பது தங்கள் பொருட்களை நியாயமான சந்தை விலைக்கு குறைவாக விற்று , உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வெளிநாட்டு நிறுவனங்கள் மீது அரசாங்கம் விதிக்கும் கூடுதல் பாதுகாப்பு சுங்க வரி ஆகும் .
- உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கவும் , சந்தையில் ஏகபோகத்தைத் தடுக்கவும் , வர்த்தக நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் இத்தகைய வரி விதிக்கப்படுகிறது.
ஸ்டாக்ஹோம் நீர் பரிசு 2025:
- புகழ்பெற்ற நீர்வளவியலாளரான குந்தர் ப்ளோஷ்ல், உலகளவில் வெள்ள அபாயங்கள் மற்றும் காலநிலை மாற்ற தாக்கங்கள் குறித்த முன்னோடி ஆராய்ச்சிக்காக 2025 – ஆம் ஆண்டுக்கான ஸ்டாக்ஹோம் நீர் பரிசைப் பெற்றுள்ளார்.
- ஸ்டாக்ஹோம் நீர் பரிசு என்பது, நீர் தொடர்பான துறையில் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் ஒரு உலகளாவிய விருது ஆகும், இது ஆண்டுதோறும் ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் வாட்டர் இன்ஸ்டிடியூட்டினால் (SIWI) வழங்கப்படுகிறது.
- 1991 – ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்படும், ஸ்டாக்ஹோம் நீர் பரிசு என்பது நீர் தொடர்பான நடவடிக்கைகளில் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் ஒரு விருது ஆகும்.
மார்ச் 24: உலக காசநோய் (TB) தினம்.
- 1882 – ஆம் ஆண்டு டாக்டர் ராபர்ட் கோச், காசநோயை ஏற்படுத்தும் பேசிலஸ் என்ற மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸைக் கண்டுபிடித்ததை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் மார்ச் 24 அன்று உலக காசநோய் தினம் கொண்டாடப்படுகிறது.
தகவல் துளிகள்:
- சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட திமேனா் கிராமத்துக்குமுதல் முறையாக மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது.
- நாட்டிலேயே முதன் முறையாக பழங்குடியினா்களுக்கு என மலை பிரதேசத்தில் அதிநவீன 700 படுக்கைகள் கொண்ட உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை ஏப்ரல் 6 – ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
- புகழ்பெற்ற நீர்வளவியலாளரான குந்தர் ப்ளோஷ்ல், 2025 – ஆம் ஆண்டுக்கான ஸ்டாக்ஹோம் நீர் பரிசைப் பெற்றுள்ளார்.
- சுவிட்ஸா்லாந்தில் நடைபெறும் ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் தமிழக வீரா் சங்கா் முத்துசாமி உலகின் முன்னணி வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.