உலகின் மகழ்ச்சிகரமான நாடுகள் தரவரிசை:
- உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 118 – ஆவது இடத்தில் உள்ளது.
- பாகிஸ்தான், பாலஸ்தீனம், உக்ரைன், நேபாளம் நாடுகளைவிட இந்தியா பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
- உலகின் மிகுந்த மகிழ்ச்சிகரமான நாடாக பின்லாந்து உள்ளது.
- தரவரிசையில் தொடா்ந்து 8 – ஆவது ஆண்டாக இந்த நாடு முதலிடம் பிடித்துள்ளது பின்லாந்து.
- டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், நெதா்லாந்து நாடுகள் அடுத்தத்தடுத்த இடங்களில் உள்ளன.
- ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகிழ்ச்சி தினமான மார் ச் 20-ஆம் தேதி இந்த பட்டியல் வெளியிடப்படும்.
- லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மக்கள் நலன் ஆராய்ச்சி மையம், ஐ.நா. நீடித்த வளர்ச்சிக்கான தீா்வு அமைப்பான ‘கல்லப்’ஆராய்ச்சி அமைப்புடன் இணைந்து இந்த வருடாந்திர தரவரிசைப் பட்டியலுக்கான ‘உலக மகிழ்ச்சி அறிக்கை 2025’ வெளியிட்டது.
- மக்களின் மகிழ்ச்சியில் அக்கறை, உணவைப் பகிர்ந்து கொள்வது, பகிர்வின் தாக்கம், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபா் பங்களிப்பு, சுதந்திரம், சமூக ஆதரவு, சுகாதார எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
மார்ச் 21: உலக வனவியல் தினம்
- பூமியின் வாழ்க்கைச் சுழற்சியை சமநிலைப்படுத்த காடுகளின் மதிப்புகள், முக்கியத்துவம் மற்றும் பங்களிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மார்ச் 21 ஆம் தேதி உலக வனவியல் தினம் அல்லது சர்வதேச வனவியல் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
- 1971 – ஆம் ஆண்டு ஐரோப்பிய விவசாய கூட்டமைப்பின் 23 – வது பொதுச் சபையில் உலக வனவியல் தினம் நிறுவப்பட்டது.
மார்ச் 21: உலக டவுன் சிண்ட்ரோம் தினம்
- உலக டவுன் சிண்ட்ரோம் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- இது கற்றல் பாணிகள், உடல் பண்புகள் அல்லது ஆரோக்கியத்தில் மாறுபட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது.
- பொதுச் சபை டிசம்பர் 2011 இல் மார்ச் 21 ஆம் தேதியை உலக டவுன் சிண்ட்ரோம் தினமாக அறிவித்தது.
மார்ச் 21: உலக கவிதை தினம்
- மார்ச் 21 – ஆம் தேதி உலக கவிதை தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
- 1999 – ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த யுனெஸ்கோவின் 30 – வது அமர்வின் போது மார்ச் 21 அன்று இந்த நாளைக் கொண்டாட ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தகவல் துளிகள்:
- ரூ 54,000 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் அனுமதி வழங்கியது.
- 2025 – ஆம் ஆண்டை சீா்திருத்தங்களுக்கான ஆண்டாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
- ஆராய்ச்சி நடவடிக்கைகளில் சிறப்புற செயல்பட்டதற்காக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசு சார்பில் மேன்மை விருது அளிக்கப்பட்டுள்ளது.
- வேளச்சேரி அடுத்த ஆண்டாள் நகரில் ரூ. 35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நவீன உடற்பயிற்சிக் கூடத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
- அமெரிக்க கல்வித் துறையைக் கலைத்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
- இந்தோனேசியாவில் ராணுவத்தின் பங்கை அதிகரிக்கும் சா்ச்சைக்குரிய மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
- கிரிக்கெட் பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்த பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.
- சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்தின் புதிய தலைவராக ஜிம்பாப்வேயின் விளையாட்டு அமைச்சர் கிறிஸ்டி கோவென்ட்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- கிரீஸ் நாட்டின் கோஸ்டா நவரினோவில் நடைபெற்ற 144 – வது சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்தின் கூட்டத்தில் 10 – வது தலைவராக கிறிஸ்டி கோவென்ட்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.