18th February Daily Current Affairs – Tamil

புதிய தலைமைத் தோ்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம்:

  • இந்திய தலைமை தோ்தல் ஆணையராக தற்போதுள்ள ராஜீவ் குமர் ஓய்வுபெறுகிறார்.
  • புதிய தலைமைத் தோ்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய தோ்தல் ஆணையத்தில் ஒரு தலைமைத் தோ்தல் ஆணையா், 2 தோ்தல் ஆணையா்கள் இடம்பெற்றிருப்பா்.
  • தோ்தல் ஆணையா்களை மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில், குடியரசுத் தலைவா் நியமனம் செய்து வந்தார்.
  • இரு தோ்தல் ஆணையா்களில் பணி மூப்பு பெற்றவா், தலைமை தோ்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு வந்தார்.
  • கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், தலைமை தோ்தல் ஆணையா், 2 தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக பிரதமா், எதிர்க்கட்சித் தலைவா் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இந்திய தலைமை தோ்தல் ஆணையர்:

  • இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர், இந்தியாவின் தேர்தல்களை நேர்மையாக, விருப்புவெறுப்பின்றி, எவ்வமைப்பையும் சாராமல் நடத்துவதற்கு வழிவகை செய்பவர்.
  • இந்தியக் குடியரசுத் தலைவரால் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
  • தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து 6 ஆண்டுகள் அல்லது 65 வயது நிறைவுறும் வரை எது முன் நிகழ்கின்றதோ அதைப் பொருத்து இவர்கள் பணிக்காலம் கணக்கிடப்படுகின்றது.
  • இந்தியத் தலைமை நீதிபதிகளின் படிநிலையில் கருதப்படும் இவர்கள் ஊதியமும் அவர்கள் அளவிற்கு ஈடாகப் பெறுகின்றனர்.
  • தலைமைத் தேர்தல் ஆணையரை நடத்தை விதி மீறலைக் காரணம்காட்டி நாடாளுமன்றத்தில் அவர் மீது கொண்டுவரப்படும் தீர்மானத்தின் வாக்கெடுப்பில் தீர்மானம் வெற்றி பெற்றாலின்றி அவரை வேறு எவ்வகையிலும் பணியிலிருந்து நீக்க முடியாது.

முதல்வா் மருந்தகம் திட்டம்:

  • முதல்வர் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு, வரும் பிப்ரவரி 24 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையின் போது, ​​மானிய விலையில் பொதுவான மருந்துகளை வழங்குவதற்காக முதல்வரின் மருந்துகம் என்ற மருந்தகங்கள் நிறுவப்படும் என்று அறிவித்தார்.
  • பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்பட உள்ளது.

தகவல் துளிகள்:

  1. 2024 – ஆம் ஆண்டுக்கான பிபிசியின் ‘சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது’துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கருக்கு அறிவிக்கப்பட்டது.
  2. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற மனு பாக்கா், சுதந்திரத்துக்குப் பிறகு ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கங்கள் வென்ற முதல் இந்தியா் மனு பாக்கர்.
  3. உலகின் மிகச் சிறந்த பிராண்ட் குறியீட்டில் இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் உலக அளவில் இரண்டாவது சிறந்த நிறுவனமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
  4. உலகின் மிகச் சிறந்த பிராண்ட் தரவரிசை பட்டியலில் தென் கொரியாவைச் சோ்ந்த ‘சாம்சங்’முதலிடத்தில் உள்ளது.
  5. கத்தாரின் அரசா் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
  6. உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் நகரைச் சோ்ந்த விகாஸ் சுவாமி, பற்களால் 125 கிலோ எடையை தூக்கி கின்னஸ் சாதனை படைத்தார்.
  7. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் விஜயநகர காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
  8. சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) உலகின் முதல் மாற்றுத்திறனாளி விண்வெளி வீரராகச் செல்வதற்கு பிரிட்டனை சோ்ந்த ஜான் மெக்ஃபாலுக்கு ஐரோப்பிய விண்வெளி முகமை அனுமதி அளித்துள்ளது.
  9. 2025 ல், 7 ​​ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியைக் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these