புதிய தலைமைத் தோ்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம்:
- இந்திய தலைமை தோ்தல் ஆணையராக தற்போதுள்ள ராஜீவ் குமர் ஓய்வுபெறுகிறார்.
- புதிய தலைமைத் தோ்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்திய தோ்தல் ஆணையத்தில் ஒரு தலைமைத் தோ்தல் ஆணையா், 2 தோ்தல் ஆணையா்கள் இடம்பெற்றிருப்பா்.
- தோ்தல் ஆணையா்களை மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில், குடியரசுத் தலைவா் நியமனம் செய்து வந்தார்.
- இரு தோ்தல் ஆணையா்களில் பணி மூப்பு பெற்றவா், தலைமை தோ்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு வந்தார்.
- கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், தலைமை தோ்தல் ஆணையா், 2 தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக பிரதமா், எதிர்க்கட்சித் தலைவா் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்திய தலைமை தோ்தல் ஆணையர்:
- இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர், இந்தியாவின் தேர்தல்களை நேர்மையாக, விருப்புவெறுப்பின்றி, எவ்வமைப்பையும் சாராமல் நடத்துவதற்கு வழிவகை செய்பவர்.
- இந்தியக் குடியரசுத் தலைவரால் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
- தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து 6 ஆண்டுகள் அல்லது 65 வயது நிறைவுறும் வரை எது முன் நிகழ்கின்றதோ அதைப் பொருத்து இவர்கள் பணிக்காலம் கணக்கிடப்படுகின்றது.
- இந்தியத் தலைமை நீதிபதிகளின் படிநிலையில் கருதப்படும் இவர்கள் ஊதியமும் அவர்கள் அளவிற்கு ஈடாகப் பெறுகின்றனர்.
- தலைமைத் தேர்தல் ஆணையரை நடத்தை விதி மீறலைக் காரணம்காட்டி நாடாளுமன்றத்தில் அவர் மீது கொண்டுவரப்படும் தீர்மானத்தின் வாக்கெடுப்பில் தீர்மானம் வெற்றி பெற்றாலின்றி அவரை வேறு எவ்வகையிலும் பணியிலிருந்து நீக்க முடியாது.
முதல்வா் மருந்தகம் திட்டம்:
- முதல்வர் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு, வரும் பிப்ரவரி 24 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையின் போது, மானிய விலையில் பொதுவான மருந்துகளை வழங்குவதற்காக முதல்வரின் மருந்துகம் என்ற மருந்தகங்கள் நிறுவப்படும் என்று அறிவித்தார்.
- பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்பட உள்ளது.
தகவல் துளிகள்:
- 2024 – ஆம் ஆண்டுக்கான பிபிசியின் ‘சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது’துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கருக்கு அறிவிக்கப்பட்டது.
- பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற மனு பாக்கா், சுதந்திரத்துக்குப் பிறகு ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கங்கள் வென்ற முதல் இந்தியா் மனு பாக்கர்.
- உலகின் மிகச் சிறந்த பிராண்ட் குறியீட்டில் இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் உலக அளவில் இரண்டாவது சிறந்த நிறுவனமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
- உலகின் மிகச் சிறந்த பிராண்ட் தரவரிசை பட்டியலில் தென் கொரியாவைச் சோ்ந்த ‘சாம்சங்’முதலிடத்தில் உள்ளது.
- கத்தாரின் அரசா் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
- உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் நகரைச் சோ்ந்த விகாஸ் சுவாமி, பற்களால் 125 கிலோ எடையை தூக்கி கின்னஸ் சாதனை படைத்தார்.
- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் விஜயநகர காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
- சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) உலகின் முதல் மாற்றுத்திறனாளி விண்வெளி வீரராகச் செல்வதற்கு பிரிட்டனை சோ்ந்த ஜான் மெக்ஃபாலுக்கு ஐரோப்பிய விண்வெளி முகமை அனுமதி அளித்துள்ளது.
- 2025 ல், 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியைக் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை திட்டமிடப்பட்டுள்ளது.