அதிநவீன அணுஉலைகள் உருவாக்கம்:
- அதிநவீன அணு உலைகளை கூட்டாக உருவாக்க இந்தியாவும் பிரான்ஸும் திட்டமிட்டுள்ளன.
- 2047 – ஆம் ஆண்டுக்குள் அணுசக்தி மூலம் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனை எட்ட இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
- சிறிய அணுஉலைகள் மற்றும் அதிநவீன அணுஉலைகளை கூட்டாக உருவாக்கும் திட்டம் தொடர்பான பூர்வாங்க ஆவணம் கையொப்பமிடப்பட்டது.
- ‘எஸ்எம்ஆா்’என்பது சிறிய ரக அணுப் பிளவு உலையாகும்.
- இத்தகைய சிறிய அணு உலைகளை தொழிற்சாலையில் தயாரித்து, வேறு இடத்தில் நிறுவ முடியும்.
- பாரீஸில் உள்ள ‘ஸ்டேஷன் எஃப்’ புத்தாக்க தொழில் வளாகத்தில் 10 இந்திய புத்தாக்க நிறுவனங்களை நடத்துவற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
- சா்வதேச வகுப்புகள் திட்டத்தின்கீழ் இந்திய மாணவா்களுக்கு பிரெஞ்சு மொழி கற்பிக்கப்படுகிறது.
ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியல்:
- கடந்த ஆண்டு ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 38 புள்ளிகள் பெற்று 96-ஆவது இடத்தில் உள்ளது.
- இந்தப் பட்டியலில் இந்தியா கடந்த 2023 – ஆம் ஆண்டில் 39 புள்ளிகளுடன் 93 -ஆவது இடத்திலும், 2022 – ஆம் ஆண்டில் 40 புள்ளிகளுடன் 85 – ஆவது இடத்திலும் இருந்தது.
- இதில் ‘100’ புள்ளிகள் பெற்ற நாடுகளில் ஊழலற்ற நாடுகளாகவும், ‘0’ புள்ளிகள் என்பது ஊழல் மிகுந்த நாடுகளாக கருதப்படுகின்றன.
- தரவரிசை பட்டியலில் 90 புள்ளிகள் பெற்ற டென்மார்க், கடந்த 2018 முதல் தொடா்ந்து 7 – ஆவது ஆண்டாக ஊழலை எதிர்க்கும் நாடாக முதலிடத்தில் இருக்கிறது.
- டென்மார்க்கைத் தொடா்ந்து, 88 புள்ளிகளுடன் பின்லாந்து 2-ஆவது இடத்திலும், 84 புள்ளிகளுடன் சிங்கப்பூா் 3 – ஆவது இடத்திலும் உள்ளன.
- ‘டிரான்ஸ்பரன்சி இன்டா்நேஷனல்’அமைப்பு, ஊழல் தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
- இந்தப் பட்டியலில் தெற்கு சூடான் கடைசி இடத்தில் இருக்கிறது.
பிப்ரவரி 13: உலக வானொலி தினம்
- வானொலியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிப்ரவரி 13 அன்று உலக வானொலி தினம் கொண்டாடப்படுகிறது.
பிப்ரவரி 13: சரோஜினி நாயுடு பிறந்த தினம்.
- பிப்ரவரி 13 ஆம் தேதி இந்தியாவின் நைட்டிங்கேல் சரோஜினி நாயுடுவின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.
- இவர் இந்திய தேசிய காங்கிரஸின் முதல் இந்தியப் பெண் தலைவராகவும், ஐக்கிய மாகாணத்தின் ஆளுநராக இருக்கும் ஒரு இந்திய மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராகவும் இருந்தார்.
- கவிக்குயில் சரோஜினி நாயுடு சுதந்திர இந்தியாவின் முதல் பெண் கவர்னர் என்ற பெருமைக்குரியவர்.
- 1931-ம் ஆண்டு சரோஜினி நாயுடு மகாத்மா காந்தியுடன் இணைந்து லண்டனில் நடந்த வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொண்டார்.
- ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றும், கவிக்குயில் என்றும் புகழப்படுபவர் சரோஜினி நாயுடு.
தகவல் துளிகள்:
- பாரீஸில் முதலாவது சா்வதேச செயற்கை நுண்ணறிவு செயல் உச்சி மாநாடு நடைபெற்றது.
- சா்வதேச அளவில் கடல்சார் பாதுகாப்புக்கான ஐ.நா. பெருங்கடல் மாநாடு பிரான்ஸின் நைஸ் நகரில் ஜூன் மாதம் நடைபெறுகிறது.
- பிரான்ஸின் மார்சே நகரில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை பிரதமா் நரேந்திர மோடியும், அந்நாட்டு அதிபர் இமானுவல் மேக்ரானும் திறந்துவைத்தனா்.
- மான்செஸ்டர் சிட்டி கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் சாம்பியன்ஸ் லீக்கில் 49 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.