28th November Daily Current Affairs – Tamil

தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை:

  • “தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழுவின் 53-ஆவது அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது.
  • ஆனால், தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • இந்திய அரசு சிறுபான்மையின மக்களின் பாதுகாப்புக்காக ஏற்படுத்திய அமைப்பே சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் ஆகும்.
  • இந்த ஆணையம் இதே பெயரில் அமைந்த சட்டத்தின் படி 1992 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
  • இதன்படி முசுலீம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், புத்த சமயத்தினர், சமண சமயத்தவர்,பார்சிகள் ஆகிய ஆறு சமுதாயத்தினரை சிறுபான்மையினர் என்று அழைக்கப்படுகின்றனர்.
  • “ஓர் அரசு அதன் அனைத்து சிறுபான்மை சமய, இன, மொழி மக்களை அவர்கள் வாழும் பகுதிகளில் பாதுகாத்து, அவர்களின் அடையாளம் வளர வழிவகுக்க வேண்டும் ” என்ற ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தையொட்டி இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது.

ஃபிஜி தமிழக வம்சாவளியினரின் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கும் திட்டம்:

  • ஃபிஜி நாட்டில் பல தலைமுறைகளாக வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் திட்டம் மத்திய அரசு நிதியுதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது.
  • ஃபிஜி நாட்டுக்கான இந்திய தூதரும் தமிழருமான பி.எஸ். கார்த்திகேயன் புதிய திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டம் ராக்கிராக்கி என்ற பகுதியில் உள்ள “சங்கம்’ என்ற இந்திய வம்சாவளியினர் நடத்தி வரும் அமைப்பு நிர்வகிக்கும் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • ஃபிஜி கல்வித் துறையுடன் சங்கம் என்று அழைக்கப்படும் தென்னிந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கம் என்ற தமிழர் வம்சாவளியினருக்கான அமைப்பு சேர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.
  • இதன்படி இந்தியாவிலிருந்து இரு தமிழ் ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலம் ராக்கிராக்கியில் உள்ள ஒரு பள்ளியிலும் லபாசா என்ற பகுதியில் உள்ள சங்கம் அமைப்பின் தொடக்கப் பள்ளியிலும் தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படும்.
  • இதற்கான நிதியுதவியை இந்திய அரசு வழங்குகிறது.

‘பிரதமா் விஸ்வகா்மா யோஜனா’ திட்டம்:

  • பிரதமா் நரேந்திர மோடி 2023-ஆம் ஆண்டு செப்டம்பா் 17-ஆம் தேதி ‘பிரதமா் விஸ்வகா்மா யோஜனா’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
  • 2023-24 நிதியாண்டு முதல் 2027-28 நிதியாண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.13,000 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள கைவினைத் தொழிலாளா்களுக்காக கொண்டுவரப்பட்டது.
  • கைவினைஞா்களுக்கு தங்களின் கைவினைத் திறனை மேம்படுத்திக்கொள்ள பயிற்சி கொடுப்பது, அதற்குரிய கருவிகளைக் கையாளுவது குறித்த பயிற்சி கொடுப்பது, கைவினைஞா்களுக்குத் தேவையான தொழில் கருவிகளை வழங்குவது, பயிற்சிக்கு பின் விஸ்வகா்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்குவதன் மூலம் அங்கீகரித்தல், 5 முதல் 7 நாள்கள் வரை அடிப்படை பயிற்சி மற்றும் 15 நாள்கள் அல்லது அதற்கு அதிகமான நாள்கள் தொழில் பயிற்சி கொடுத்து பயிற்சிக் காலத்தில் நாள் ஒன்றுக்கு உதவித் தொகையாக ரூ. 500 வழங்குதல் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

பிரசாத் திட்டம்:

  • பிரசாத் திட்டத்தின் முழு வடிவம் புனித யாத்திரை புத்துயிர் மற்றும் ஆன்மீக வளர்ச்சி இயக்கம் ஆகும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், 2021 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள 120 யாத்திரைத் தலங்களை நான்கு கட்டங்களாக மேம்படுத்துவதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது.
  • இந்திய அரசு சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் 2014-2015 ஆம் ஆண்டில் பிரசாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
  • பிரசாத் திட்டத்தின் முழு வடிவம் ‘யாத்திரை புத்துணர்ச்சி மற்றும் ஆன்மீக வளர்ச்சி இயக்கம்’ ஆகும்.
  • இந்த திட்டம் மத சுற்றுலா அனுபவத்தை வளப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் உள்ள யாத்திரை தலங்களை மேம்படுத்துதல் மற்றும் அடையாளம் காண்பதில் கவனம் செலுத்துகிறது.
  • இது ஒரு முழுமையான மத சுற்றுலா அனுபவத்தை வழங்குவதற்கு முன்னுரிமை, திட்டமிடப்பட்ட மற்றும் நிலையான முறையில் புனித யாத்திரை இடங்களை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தகவல் துளிகள்:

  1. சியாச்சின் பனிமலை, கல்வான் பள்ளத்தாக்கு, காா்கில் போா்க் களங்களை பாா்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க ராணுவம் தீா்மானித்துள்ளது.
  2. ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி.
  3. சியாச்சின் பனிமலை உலகின் உயரமான மற்றும் மிகவும் குளிரான போா்க் களமாகும்.
  4. அகில இந்திய டிஜிபி-க்கள் மாநாடு ஒடிஸாவில் தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளது.
  5. வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு ஃபென்ஜால் எனப் பெயா் சூட்டப்பட்டுள்ளது.
  6. இத்தாலியில் நடைபெற்ற உலக கேடட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில், 8 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் இந்தியாவின் திவித் ரெட்டியும், 10 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் சா்வானிகாவும் சாம்பியன் வென்றனர்.
  7. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் டி.குகேஷ் – சீனாவின் டிங் லிரெனை வென்றார்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these