தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை:
- “தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழுவின் 53-ஆவது அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது.
- ஆனால், தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- இந்திய அரசு சிறுபான்மையின மக்களின் பாதுகாப்புக்காக ஏற்படுத்திய அமைப்பே சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் ஆகும்.
- இந்த ஆணையம் இதே பெயரில் அமைந்த சட்டத்தின் படி 1992 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
- இதன்படி முசுலீம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், புத்த சமயத்தினர், சமண சமயத்தவர்,பார்சிகள் ஆகிய ஆறு சமுதாயத்தினரை சிறுபான்மையினர் என்று அழைக்கப்படுகின்றனர்.
- “ஓர் அரசு அதன் அனைத்து சிறுபான்மை சமய, இன, மொழி மக்களை அவர்கள் வாழும் பகுதிகளில் பாதுகாத்து, அவர்களின் அடையாளம் வளர வழிவகுக்க வேண்டும் ” என்ற ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தையொட்டி இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது.
ஃபிஜி தமிழக வம்சாவளியினரின் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கும் திட்டம்:
- ஃபிஜி நாட்டில் பல தலைமுறைகளாக வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் திட்டம் மத்திய அரசு நிதியுதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது.
- ஃபிஜி நாட்டுக்கான இந்திய தூதரும் தமிழருமான பி.எஸ். கார்த்திகேயன் புதிய திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார்.
- இத்திட்டம் ராக்கிராக்கி என்ற பகுதியில் உள்ள “சங்கம்’ என்ற இந்திய வம்சாவளியினர் நடத்தி வரும் அமைப்பு நிர்வகிக்கும் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- ஃபிஜி கல்வித் துறையுடன் சங்கம் என்று அழைக்கப்படும் தென்னிந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கம் என்ற தமிழர் வம்சாவளியினருக்கான அமைப்பு சேர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.
- இதன்படி இந்தியாவிலிருந்து இரு தமிழ் ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலம் ராக்கிராக்கியில் உள்ள ஒரு பள்ளியிலும் லபாசா என்ற பகுதியில் உள்ள சங்கம் அமைப்பின் தொடக்கப் பள்ளியிலும் தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படும்.
- இதற்கான நிதியுதவியை இந்திய அரசு வழங்குகிறது.
‘பிரதமா் விஸ்வகா்மா யோஜனா’ திட்டம்:
- பிரதமா் நரேந்திர மோடி 2023-ஆம் ஆண்டு செப்டம்பா் 17-ஆம் தேதி ‘பிரதமா் விஸ்வகா்மா யோஜனா’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
- 2023-24 நிதியாண்டு முதல் 2027-28 நிதியாண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.13,000 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள கைவினைத் தொழிலாளா்களுக்காக கொண்டுவரப்பட்டது.
- கைவினைஞா்களுக்கு தங்களின் கைவினைத் திறனை மேம்படுத்திக்கொள்ள பயிற்சி கொடுப்பது, அதற்குரிய கருவிகளைக் கையாளுவது குறித்த பயிற்சி கொடுப்பது, கைவினைஞா்களுக்குத் தேவையான தொழில் கருவிகளை வழங்குவது, பயிற்சிக்கு பின் விஸ்வகா்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்குவதன் மூலம் அங்கீகரித்தல், 5 முதல் 7 நாள்கள் வரை அடிப்படை பயிற்சி மற்றும் 15 நாள்கள் அல்லது அதற்கு அதிகமான நாள்கள் தொழில் பயிற்சி கொடுத்து பயிற்சிக் காலத்தில் நாள் ஒன்றுக்கு உதவித் தொகையாக ரூ. 500 வழங்குதல் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
பிரசாத் திட்டம்:
- பிரசாத் திட்டத்தின் முழு வடிவம் புனித யாத்திரை புத்துயிர் மற்றும் ஆன்மீக வளர்ச்சி இயக்கம் ஆகும்.
- இந்தத் திட்டத்தின் கீழ், 2021 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள 120 யாத்திரைத் தலங்களை நான்கு கட்டங்களாக மேம்படுத்துவதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது.
- இந்திய அரசு சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் 2014-2015 ஆம் ஆண்டில் பிரசாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
- பிரசாத் திட்டத்தின் முழு வடிவம் ‘யாத்திரை புத்துணர்ச்சி மற்றும் ஆன்மீக வளர்ச்சி இயக்கம்’ ஆகும்.
- இந்த திட்டம் மத சுற்றுலா அனுபவத்தை வளப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் உள்ள யாத்திரை தலங்களை மேம்படுத்துதல் மற்றும் அடையாளம் காண்பதில் கவனம் செலுத்துகிறது.
- இது ஒரு முழுமையான மத சுற்றுலா அனுபவத்தை வழங்குவதற்கு முன்னுரிமை, திட்டமிடப்பட்ட மற்றும் நிலையான முறையில் புனித யாத்திரை இடங்களை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தகவல் துளிகள்:
- சியாச்சின் பனிமலை, கல்வான் பள்ளத்தாக்கு, காா்கில் போா்க் களங்களை பாா்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க ராணுவம் தீா்மானித்துள்ளது.
- ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி.
- சியாச்சின் பனிமலை உலகின் உயரமான மற்றும் மிகவும் குளிரான போா்க் களமாகும்.
- அகில இந்திய டிஜிபி-க்கள் மாநாடு ஒடிஸாவில் தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளது.
- வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு ஃபென்ஜால் எனப் பெயா் சூட்டப்பட்டுள்ளது.
- இத்தாலியில் நடைபெற்ற உலக கேடட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில், 8 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் இந்தியாவின் திவித் ரெட்டியும், 10 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் சா்வானிகாவும் சாம்பியன் வென்றனர்.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் டி.குகேஷ் – சீனாவின் டிங் லிரெனை வென்றார்.