16th November Daily Current Affairs – Tamil

மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ( CDSCO ):

  • மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ( CDSCO ) என்பது அழகுசாதனப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கான இந்தியாவின் தேசிய ஒழுங்குமுறை அமைப்பாகும்.
  • இது ஐக்கிய மாகாணங்களின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சிக்கு ஒத்த செயல்பாட்டைச் செய்கிறது.
  • மத்திய மருந்துகள் மற்றும் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (CDSCO) மதிப்பாய்வின் கீழ் உள்வைப்புகள் மற்றும் கருத்தடை சாதனங்கள் உட்பட அனைத்து மருத்துவ சாதனங்களையும் கொண்டு வருவதற்கான திட்டத்தை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
  • மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு தலைமையகம் புது டெல்லியில் உள்ளது.
  • மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவா் – ராஜீவ்சிங் ரகுவன்சி.

ஒடிஸா: 24 கிராமங்களுக்கு ‘சுனாமி தயார்நிலை’அங்கீகாரம்

  • ஒடிஸா மாநிலத்தில் உள்ள 24 கடலோர கிராமங்களுக்கு யுனெஸ்கோவின் அரசுகளுக்கு இடையேயான கடல்சார் ஆணையத்தின் ‘சுனாமி தயார்நிலை’அங்கீகாரம் வழங்கப்பட்டது.
  • இந்தியாவின் தேசிய சுனாமி தயார் நிலை அங்கீகார வாரியம், மாநிலத்தில் உள்ள 26 கடலோர கிராமங்களை யுனெஸ்கோவின் இந்த அங்கீகாரத்துக்கு பரிந்துரைத்தது.
  • இந்த அங்கீகாரமானது, சுனாமியால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளவும், தயார் நிலையை மேம்படுத்தவும் மக்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டதாகும்.
  • இதன் 2-ஆவது உலகளாவிய சுனாமி கருத்தரங்கம் இந்தோனேசியாவில் நடைபெற்றது.
  • ஜகத்சிங்பூா் மாவட்டத்தில் உள்ள நோலியாசாஹி மற்றும் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள வெங்கட்ராய்பூா் ஆகிய இரு கிராமங்களுக்கு கடந்த 2020 – ஆம் ஆண்டும் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது:

  • தி நியூ இந்தியன் குழுமத்தின் சார்பில் நிறுவனர் ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகள் புதுதில்லியில் வழங்கப்பட்டன.
  • அ-புனைவுக்கான பிரிவில் ‘ஹவ் பிரைம் மினிஸ்டா்ஸ் டிசைட் நூலுக்காக எழுத்தாளர் நீரஜா செளதுரிக்கு விருது வழங்கப்பட்டது.
  • புனைவுக்கான பிரிவில் ‘தி சென்ட் ஆஃப் ஃபாலன் ஸ்டார்ஸ்’நூலை எழுதிய ஐஸ்வா்யா ஜாவுக்கு விருது வழங்கப்பட்டது.
  • இலக்கியத்துக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட்-க்கு வழங்கப்பட்டது.

நவம்பர் 16: சகிப்புத்தன்மைக்கான சர்வதேச தினம்

  • நவம்பர் 16 – ல் கலாச்சாரங்கள் மற்றும் மக்களிடையே பரஸ்பர புரிதலை ஊக்குவிப்பதன் மூலம் சகிப்புத்தன்மையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சர்வதேச சகிப்புத்தன்மை தினம் அனுசரிக்கப்படுகிறது.

நவம்பர் 16: தேசிய பத்திரிகை தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ஆம் தேதி, இந்திய பத்திரிகை கவுன்சிலை (பிசிஐ) அங்கீகரித்து கௌரவிக்க தேசிய பத்திரிகை தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • தேசத்தில் சுதந்திரமான மற்றும் பொறுப்புணர்வுள்ள பத்திரிகை இருப்பதை இந்த நாள் கொண்டாடுகிறது.

தகவல் துளிகள்:

  1. நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி நிதி அடிப்படையிலான கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயா்த்தியுள்ளது.
  2. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வளா்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என நிதி சேவைகள் நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.
  3. ஈரோடு மாவட்டம் 2023-2024 ஆம் நிதி ஆண்டில் ரூ 1,069 கோடி பயிா்க் கடன் வழங்கி மாநிலத்திலேயே அதிக அளவில் பயிர்க் கடன் வழங்கிய மாவட்டமாக திகழ்கிறது.
  4. மான்செஸ்டர் சிட்டி அணியின் மிட் ஃபீல்டர் ரோட்ரி இந்தாண்டுக்கான பேலன் தோர் விருதினை (தங்கப் பந்து) வென்றார், கால்பந்து உலகில் மிகவும் மதிப்புமிக்க விருதாக இந்த விருது கருதப்படுகிறது.

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these