மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ( CDSCO ):
- மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ( CDSCO ) என்பது அழகுசாதனப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கான இந்தியாவின் தேசிய ஒழுங்குமுறை அமைப்பாகும்.
- இது ஐக்கிய மாகாணங்களின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சிக்கு ஒத்த செயல்பாட்டைச் செய்கிறது.
- மத்திய மருந்துகள் மற்றும் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (CDSCO) மதிப்பாய்வின் கீழ் உள்வைப்புகள் மற்றும் கருத்தடை சாதனங்கள் உட்பட அனைத்து மருத்துவ சாதனங்களையும் கொண்டு வருவதற்கான திட்டத்தை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
- மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு தலைமையகம் புது டெல்லியில் உள்ளது.
- மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவா் – ராஜீவ்சிங் ரகுவன்சி.
ஒடிஸா: 24 கிராமங்களுக்கு ‘சுனாமி தயார்நிலை’அங்கீகாரம்
- ஒடிஸா மாநிலத்தில் உள்ள 24 கடலோர கிராமங்களுக்கு யுனெஸ்கோவின் அரசுகளுக்கு இடையேயான கடல்சார் ஆணையத்தின் ‘சுனாமி தயார்நிலை’அங்கீகாரம் வழங்கப்பட்டது.
- இந்தியாவின் தேசிய சுனாமி தயார் நிலை அங்கீகார வாரியம், மாநிலத்தில் உள்ள 26 கடலோர கிராமங்களை யுனெஸ்கோவின் இந்த அங்கீகாரத்துக்கு பரிந்துரைத்தது.
- இந்த அங்கீகாரமானது, சுனாமியால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளவும், தயார் நிலையை மேம்படுத்தவும் மக்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டதாகும்.
- இதன் 2-ஆவது உலகளாவிய சுனாமி கருத்தரங்கம் இந்தோனேசியாவில் நடைபெற்றது.
- ஜகத்சிங்பூா் மாவட்டத்தில் உள்ள நோலியாசாஹி மற்றும் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள வெங்கட்ராய்பூா் ஆகிய இரு கிராமங்களுக்கு கடந்த 2020 – ஆம் ஆண்டும் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது:
- தி நியூ இந்தியன் குழுமத்தின் சார்பில் நிறுவனர் ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகள் புதுதில்லியில் வழங்கப்பட்டன.
- அ-புனைவுக்கான பிரிவில் ‘ஹவ் பிரைம் மினிஸ்டா்ஸ் டிசைட் நூலுக்காக எழுத்தாளர் நீரஜா செளதுரிக்கு விருது வழங்கப்பட்டது.
- புனைவுக்கான பிரிவில் ‘தி சென்ட் ஆஃப் ஃபாலன் ஸ்டார்ஸ்’நூலை எழுதிய ஐஸ்வா்யா ஜாவுக்கு விருது வழங்கப்பட்டது.
- இலக்கியத்துக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட்-க்கு வழங்கப்பட்டது.
நவம்பர் 16: சகிப்புத்தன்மைக்கான சர்வதேச தினம்
- நவம்பர் 16 – ல் கலாச்சாரங்கள் மற்றும் மக்களிடையே பரஸ்பர புரிதலை ஊக்குவிப்பதன் மூலம் சகிப்புத்தன்மையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சர்வதேச சகிப்புத்தன்மை தினம் அனுசரிக்கப்படுகிறது.
நவம்பர் 16: தேசிய பத்திரிகை தினம்
- ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ஆம் தேதி, இந்திய பத்திரிகை கவுன்சிலை (பிசிஐ) அங்கீகரித்து கௌரவிக்க தேசிய பத்திரிகை தினம் அனுசரிக்கப்படுகிறது.
- தேசத்தில் சுதந்திரமான மற்றும் பொறுப்புணர்வுள்ள பத்திரிகை இருப்பதை இந்த நாள் கொண்டாடுகிறது.
தகவல் துளிகள்:
- நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி நிதி அடிப்படையிலான கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயா்த்தியுள்ளது.
- இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வளா்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என நிதி சேவைகள் நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.
- ஈரோடு மாவட்டம் 2023-2024 ஆம் நிதி ஆண்டில் ரூ 1,069 கோடி பயிா்க் கடன் வழங்கி மாநிலத்திலேயே அதிக அளவில் பயிர்க் கடன் வழங்கிய மாவட்டமாக திகழ்கிறது.
- மான்செஸ்டர் சிட்டி அணியின் மிட் ஃபீல்டர் ரோட்ரி இந்தாண்டுக்கான பேலன் தோர் விருதினை (தங்கப் பந்து) வென்றார், கால்பந்து உலகில் மிகவும் மதிப்புமிக்க விருதாக இந்த விருது கருதப்படுகிறது.