28th October Daily Current Affairs – Tamil

இந்தியாவின் சிறந்த வங்கி: எஸ்பிஐ-க்கு சா்வதேச விருது

  • 2024 – ஆம் ஆண்டு இந்தியாவின் சிறந்த வங்கியாக பாரத ஸ்டேட் வங்கியை அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பொருளாதாரப் பத்திரிகையான ‘குளோபல் ஃபைனான்ஸ்’ தேர்வு செய்துள்ளது.
  • அண்மையில் வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி மாநாட்டில் இந்த விருதை எஸ்பிஐ தலைவர் சி.எஸ்.ரெட்டி பெற்றுக் கொண்டார்.
  • உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள வங்கிகளில், அவற்றின் சேவைத் தரம், நிர்வாகம், செயல்பாடுகள், நிதியைக் கையாளும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்டுதோறும் சிறந்த வங்கிகளை குளோபல் ஃபைனான்ஸ் தோ்வு செய்து வருகிறது.

ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவக் காப்பீடு:

  • மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ இலவச மருத்துவக் காப்பீட்டின்கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடிதொடங்கி வைக்கிறார்.
  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.
  • இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.
  • தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீடு எடுத்துள்ள முதியவா்களும் இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள முடியும்.
  • கா்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் முறையாக செலுத்தப்படுவதை பதிவு செய்யும் யு-வின் இணையதளத்தையும் பிரதமா் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
  • கரோனா காலத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டதை பதிவு செய்ய தொடங்கப்பட்ட ‘கோ-வின்’ இணையதளத்தை முன்மாதிரியாகக் கொண்டு இந்தத் தடுப்பூசியைப் பதிவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்:

  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் /100 நாள் வேலை திட்டத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005 – ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இயற்றப்பட்டது.
  • முதலில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இது 2009 காந்தியடிகள் பிறந்த நாளன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது.
  • இத்திட்டத்தின் கீழ், பொதுவேலை செய்ய விருப்பம் உள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு கட்டாய சிறப்புத்திறன் இல்லா உடலுழைப்பு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

அக்டோபர் 28: சர்வதேச அனிமேஷன் தினம்

  • சர்வதேச அனிமேஷன் தினம் அக்டோபர் 28 அன்று கொண்டாடப்படுகிறது.
  • அனிமேஷனின் கலை மற்றும் கைவினைகளை அங்கீகரிக்கிறது, அதன் கலாச்சார தாக்கத்தையும் படைப்பாற்றலையும் எடுத்துக்காட்டுகிறது.

தகவல் துளிகள்:

  1. உத்தரப் பிரதேசத்தில் சமஸ்கிருதம் படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்துள்ளார்.
  2. காவேரி மருத்துவமனை மற்றும் பெண்கள் மோட்டார் ஸ்போர்ட் கிளப் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட மார்பகப் புற்றுநோய் ஒழிப்புக்காக 250 பெண்கள் பங்கேற்ற இரு சக்கர வாகன விழிப்புணா்வு பேரணி ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
  3. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அரசு, சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளிடமும், உலக வங்கி, சா்வதேச நிதியம் போன்ற அமைப்புகளிடம் தொடர்ந்து கடன் பெற்று வருகிறது.
  4. ஐஎம்எஃப் மற்றும் உலக வங்கி மாநாடு வாஷிங்டனில் நடைபெற்றது.
  5. ஜப்பானில் நடைபெற்ற சா்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் இந்தியா்கள் 6 தங்கம், 9 வெள்ளி, 9 வெண்கலம் என 24 பதக்கங்கள் வென்று அசத்தினர்.
  6. ஆடவா் ஒற்றையா் எஸ்ஹெச்6 பிரிவில் சாம்பியனான சிவராஜன் சோலைமலை, இரட்டையரில் சுதா்சன் சரவணகுமார் முத்துசாமியுடன் இணைந்து தங்கம் வென்றார்.
  7. ஜப்பான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், சீனாவின் ஜெங் கின்வென் சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these