இந்தியாவின் சிறந்த வங்கி: எஸ்பிஐ-க்கு சா்வதேச விருது
- 2024 – ஆம் ஆண்டு இந்தியாவின் சிறந்த வங்கியாக பாரத ஸ்டேட் வங்கியை அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பொருளாதாரப் பத்திரிகையான ‘குளோபல் ஃபைனான்ஸ்’ தேர்வு செய்துள்ளது.
- அண்மையில் வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி மாநாட்டில் இந்த விருதை எஸ்பிஐ தலைவர் சி.எஸ்.ரெட்டி பெற்றுக் கொண்டார்.
- உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள வங்கிகளில், அவற்றின் சேவைத் தரம், நிர்வாகம், செயல்பாடுகள், நிதியைக் கையாளும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்டுதோறும் சிறந்த வங்கிகளை குளோபல் ஃபைனான்ஸ் தோ்வு செய்து வருகிறது.
ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவக் காப்பீடு:
- மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ இலவச மருத்துவக் காப்பீட்டின்கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடிதொடங்கி வைக்கிறார்.
- ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.
- இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.
- தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீடு எடுத்துள்ள முதியவா்களும் இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள முடியும்.
- கா்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் முறையாக செலுத்தப்படுவதை பதிவு செய்யும் யு-வின் இணையதளத்தையும் பிரதமா் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
- கரோனா காலத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டதை பதிவு செய்ய தொடங்கப்பட்ட ‘கோ-வின்’ இணையதளத்தை முன்மாதிரியாகக் கொண்டு இந்தத் தடுப்பூசியைப் பதிவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்:
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் /100 நாள் வேலை திட்டத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005 – ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இயற்றப்பட்டது.
- முதலில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இது 2009 காந்தியடிகள் பிறந்த நாளன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது.
- இத்திட்டத்தின் கீழ், பொதுவேலை செய்ய விருப்பம் உள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு கட்டாய சிறப்புத்திறன் இல்லா உடலுழைப்பு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
அக்டோபர் 28: சர்வதேச அனிமேஷன் தினம்
- சர்வதேச அனிமேஷன் தினம் அக்டோபர் 28 அன்று கொண்டாடப்படுகிறது.
- அனிமேஷனின் கலை மற்றும் கைவினைகளை அங்கீகரிக்கிறது, அதன் கலாச்சார தாக்கத்தையும் படைப்பாற்றலையும் எடுத்துக்காட்டுகிறது.
தகவல் துளிகள்:
- உத்தரப் பிரதேசத்தில் சமஸ்கிருதம் படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்துள்ளார்.
- காவேரி மருத்துவமனை மற்றும் பெண்கள் மோட்டார் ஸ்போர்ட் கிளப் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட மார்பகப் புற்றுநோய் ஒழிப்புக்காக 250 பெண்கள் பங்கேற்ற இரு சக்கர வாகன விழிப்புணா்வு பேரணி ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
- கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அரசு, சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளிடமும், உலக வங்கி, சா்வதேச நிதியம் போன்ற அமைப்புகளிடம் தொடர்ந்து கடன் பெற்று வருகிறது.
- ஐஎம்எஃப் மற்றும் உலக வங்கி மாநாடு வாஷிங்டனில் நடைபெற்றது.
- ஜப்பானில் நடைபெற்ற சா்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் இந்தியா்கள் 6 தங்கம், 9 வெள்ளி, 9 வெண்கலம் என 24 பதக்கங்கள் வென்று அசத்தினர்.
- ஆடவா் ஒற்றையா் எஸ்ஹெச்6 பிரிவில் சாம்பியனான சிவராஜன் சோலைமலை, இரட்டையரில் சுதா்சன் சரவணகுமார் முத்துசாமியுடன் இணைந்து தங்கம் வென்றார்.
- ஜப்பான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், சீனாவின் ஜெங் கின்வென் சாம்பியன் பட்டம் வென்றார்.