26th September Daily Current Affairs – Tamil

“தற்சார்பு இந்தியா’ திட்டத்தால் ஏற்றுமதி அதிகரிப்பு:

  • ‘தற்சார்பு இந்தியா’திட்டத்தின் மூலம் உள்ளூா் பொருள்களை ஆதரிப்போம் என்பதே இதன் நோக்கமாகும்.
  • கடந்த ஆண்டு மே 12 – ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோதி 30 ஆண்டுகால தாராளவாத, உலகமயமாக்கல் பொருளாதார கொள்கைக்கு கடிவாளம் இட்டு நாட்டை தற்சார்பு பெறச்செய்யும் கொள்கை அறிவிப்பை வெளியிட்டார்.
  • வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மாற்றாக உள்நாட்டுத் தயாரிப்புகளை பயன்படுத்துதான் இதன் நோக்கம்.
  • இந்தியாவிலேயே உலகத்தரம் வாய்ந்த பொருள்களை நிறுவனங்கள் உற்பத்தி செய்ய வேண்டும்.
  • தொழில் நிறுவனங்களும், புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களும் தரத்தில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் இந்தியாவில் அனைத்துப் பொருள்களையும் தயாரிக்க முன்வர வேண்டும்’.
  • தற்சார்பு இந்தியா திட்டம் மற்றும் மேக் இன் இந்தியா திட்டம் ஒரே போன்ற திட்டங்கள் என்றும் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திட்டங்கள் ஆகும்.
  • தற்சார்பு என்பது தேசிய போட்டித்தன்மையின் நன்மைகளை ஊக்குவிப்பதாகும்.

உலகின் 100 சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல்:

  • முதுநிலை வணிக மேலாண்மை படிப்புகளுக்கான உலகின் 100 சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் மூன்று இந்திய மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ‘இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்’ ஆகியவை இடம்பெற்றுள்ளன.
  • 2025 – ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கியூ.எஸ் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
  • அமெரிக்காவின் ‘ஸ்டான்ஃபோ ர்ட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்’ தொடா்ந்து 5 – ஆவது ஆண்டாக பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
  • இந்தியாவில் இருந்து பெங்களூரு ஐஐஎம் 53 – ஆவது இடத்திலும் அகமதாபாத் ஐஐஎம் 60 – ஆவது இடத்திலும் கொல்கத்தா ஐஐஎம் 65 – ஆவது இடத்திலும் உள்ளன.
  • ஹைதராபாத்தின் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்வி நிறுவனம் 86 – ஆவது இடத்தில் உள்ளது.
  • முழுநேர எம்பிஏ படிப்புகளைக் கற்பிக்கும் 14 இந்திய கல்வி நிறுவனங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

செப்டம்பர் 26: உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம்

  • சுற்றுச்சூழல் சுகாதாரத்திற்கான சர்வதேச கூட்டமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 26: உலக கருத்தடை நாள்

  • உலக கருத்தடை தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 26 அன்று அனுசரிக்கப்படுகிறது.

செப்டம்பர் கடைசி ஞாயிற்றுக்கிழமை:

  • காது கேளாதோர் தினம் அல்லது சர்வதேச காது கேளாதோர் வாரம் செப்டம்பர் கடைசி வாரத்தில் தொடங்கி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை முடிவடைகிறது.

தகவல் துளிகள்:

  1. துப்பாக்கி தோட்டா துளைக்காத இலகுரக கவச உடைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் (டிஆா்டிஓ), தில்லி ஐஐடி கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.
  2. மத்திய அரசால் கடந்த 2014, செப்டம்பா் 25 – ஆம் தேதி ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் தொடங்கப்பட்டது.
  3. இந்திய விமானப் படை துணைத் தளபதியாக ஏர் மார்ஷல் எஸ்.பி. தார்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. மாரியப்பன் 2016 – ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கமும், 2020 – ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 2024 பிரான்சு நாட்டின் பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கமும், மூன்று பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார்.
  5. சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, அமெரிக்காவின் சோஃபியா கெனின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
  6. சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
  7. கண்டம் விட்டு கண்டம் பாயும் (ஐசிபிஎம்) ரகத்தைச் சோ்ந்த ஏவுகணையை சீனா சோதித்துப் பார்த்தது.

 

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these