“தற்சார்பு இந்தியா’ திட்டத்தால் ஏற்றுமதி அதிகரிப்பு:
- ‘தற்சார்பு இந்தியா’திட்டத்தின் மூலம் உள்ளூா் பொருள்களை ஆதரிப்போம் என்பதே இதன் நோக்கமாகும்.
- கடந்த ஆண்டு மே 12 – ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோதி 30 ஆண்டுகால தாராளவாத, உலகமயமாக்கல் பொருளாதார கொள்கைக்கு கடிவாளம் இட்டு நாட்டை தற்சார்பு பெறச்செய்யும் கொள்கை அறிவிப்பை வெளியிட்டார்.
- வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மாற்றாக உள்நாட்டுத் தயாரிப்புகளை பயன்படுத்துதான் இதன் நோக்கம்.
- இந்தியாவிலேயே உலகத்தரம் வாய்ந்த பொருள்களை நிறுவனங்கள் உற்பத்தி செய்ய வேண்டும்.
- தொழில் நிறுவனங்களும், புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களும் தரத்தில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் இந்தியாவில் அனைத்துப் பொருள்களையும் தயாரிக்க முன்வர வேண்டும்’.
- தற்சார்பு இந்தியா திட்டம் மற்றும் மேக் இன் இந்தியா திட்டம் ஒரே போன்ற திட்டங்கள் என்றும் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திட்டங்கள் ஆகும்.
- தற்சார்பு என்பது தேசிய போட்டித்தன்மையின் நன்மைகளை ஊக்குவிப்பதாகும்.
உலகின் 100 சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல்:
- முதுநிலை வணிக மேலாண்மை படிப்புகளுக்கான உலகின் 100 சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் மூன்று இந்திய மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ‘இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்’ ஆகியவை இடம்பெற்றுள்ளன.
- 2025 – ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கியூ.எஸ் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
- அமெரிக்காவின் ‘ஸ்டான்ஃபோ ர்ட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்’ தொடா்ந்து 5 – ஆவது ஆண்டாக பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
- இந்தியாவில் இருந்து பெங்களூரு ஐஐஎம் 53 – ஆவது இடத்திலும் அகமதாபாத் ஐஐஎம் 60 – ஆவது இடத்திலும் கொல்கத்தா ஐஐஎம் 65 – ஆவது இடத்திலும் உள்ளன.
- ஹைதராபாத்தின் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்வி நிறுவனம் 86 – ஆவது இடத்தில் உள்ளது.
- முழுநேர எம்பிஏ படிப்புகளைக் கற்பிக்கும் 14 இந்திய கல்வி நிறுவனங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
செப்டம்பர் 26: உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம்
- சுற்றுச்சூழல் சுகாதாரத்திற்கான சர்வதேச கூட்டமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 26: உலக கருத்தடை நாள்
- உலக கருத்தடை தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 26 அன்று அனுசரிக்கப்படுகிறது.
செப்டம்பர் கடைசி ஞாயிற்றுக்கிழமை:
- காது கேளாதோர் தினம் அல்லது சர்வதேச காது கேளாதோர் வாரம் செப்டம்பர் கடைசி வாரத்தில் தொடங்கி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை முடிவடைகிறது.
தகவல் துளிகள்:
- துப்பாக்கி தோட்டா துளைக்காத இலகுரக கவச உடைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் (டிஆா்டிஓ), தில்லி ஐஐடி கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.
- மத்திய அரசால் கடந்த 2014, செப்டம்பா் 25 – ஆம் தேதி ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் தொடங்கப்பட்டது.
- இந்திய விமானப் படை துணைத் தளபதியாக ஏர் மார்ஷல் எஸ்.பி. தார்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மாரியப்பன் 2016 – ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கமும், 2020 – ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 2024 பிரான்சு நாட்டின் பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கமும், மூன்று பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார்.
- சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, அமெரிக்காவின் சோஃபியா கெனின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
- சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
- கண்டம் விட்டு கண்டம் பாயும் (ஐசிபிஎம்) ரகத்தைச் சோ்ந்த ஏவுகணையை சீனா சோதித்துப் பார்த்தது.