எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது:
- புவி கண்காணிப்புக்கான அதிநவீன இஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
- திட்டமிட்ட புவி தாழ் வட்டப் பாதையில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து இத்திட்டம் வெற்றியடைந்ததாக இஸ்ரோ தெரிவித்தது.
- தகவல்தொடா்பு, தொலையுணா்வு மற்றும் வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயல்படுத்தி வருகிறது.
- அதற்காக, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.
- இதில் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரையும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரையும் எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.
- சா்வதேச விண்வெளித் துறையில் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான தேவை அதிகரித்துள்ளது.
- இதைக் கருத்தில்கொண்டு 500 கிலோ வரையிலான எடை குறைந்த செயற்கைக்கோள்களை புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதைக்கு கொண்டுசெல்ல சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ புதிதாக வடிவமைத்துள்ளது, இதன் எடை அதிகபட்சம் 120 டன்னாகும்.
- புதிதாக வடிவமைக்கப்பட்ட எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-08 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது.
- அதைத் தொடா்ந்து, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
- தரையில் இருந்து புறப்பட்ட 13 நிமிஷங்கள் 48 விநாடிகளில் இஓஎஸ்-08 செயற்கைக்கோள் 475 கி.மீ. தொலைவில் உள்ள திட்டமிட்ட புவி தாழ்வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
- அதன் பின்னா், ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ சார்பில் வடிவமைத்து அனுப்பப்பட்ட எஸ்ஆா்-0 டெமோசாட் என்ற 2 கிலோ எடைகொண்ட குறுஞ் செயற்கைக்கோள் 475 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது.
- புவி தாழ்வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இஓஎஸ்-08 செயற்கைக்கோள் 176 கிலோ எடை கொண்டது, இது ஓராண்டு வரை ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்.
பழைய வாகன அழிப்பு கொள்கை:
- சுற்றுச்சூழல் மற்றும் வாகன ஓட்டிகளின் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 2021-22-ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் பழைய வாகனங்களைப் புழக்கத்தில் இருந்து நீக்குவது தொடா்பான அறிவிப்பு வெளியானது.
- இதையடுத்து, பிரதமா் நரேந்திர மோடி அரசு அறிமுகப்படுத்திய ‘பழைய வாகனங்கள் அழிப்பு கொள்கை’-யில் தனிநபா் வாகனங்களின் தகுதிக் காலம் 20 ஆண்டுகள் எனவும் அரசு மற்றும் வணிக ரீதியிலான வாகனங்களின் தகுதிக் காலம் 15 ஆண்டுகள் எனவும் நிர்ணயிக்கப்பட்டது.
- இத்தகுதிக் காலம் முடிந்ததும், வாகனத்தின் தகுதியை மறுதணிக்கைச் செய்து வாகனங்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நடைமுறை தொடரும்.
- புதிய வாகனம் வாங்க விரும்புவோர், அரசிடம் பதிவு செய்யப்பட்ட வாகன அழிப்பு மையங்களில் தங்கள் பழைய வாகனங்களை ஒப்படைக்கலாம். அப்படி, பழைய வாகனங்களை ஒப்படைப்பவா்களுக்கு புதிய வாகனம் வாங்கும் போது 25% வரி தள்ளுபடி, பதிவு கட்டணம் ரத்து உள்பட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- வாகனங்களின் மறுதணிக்கைக்காக பல்வேறு நகரங்களில் சோதனை நிலையங்கள், 150 கிலோமீட்டா் சுற்றளவுக்கு ஒரு வாகன அழிப்பு மையம் ஆகியவற்றை அமைப்பதற்கான சாத்தியகூறுகளை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.
கல்வித்தரத்தில் குஜராத் பின்னடைவு: நிதி ஆயோக் அறிக்கை
- நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்வித்தரத்தில் குஜராத் மாநிலம் பின் தங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்த அறிக்கையில் கல்வித்தரம் தொடர்பான நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான மதிப்பீட்டில் கேரளா முதலிடத்திலும், ஹரியானா மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் அடுத்தடுத்த இடத்திலும், தமிழ்நாடு நான்காம் இடத்திலும் இருக்கின்றன.
- குஜராத் மாநில அரசு பத்தாண்டுகளுக்கும் மேலாக ‘ஷாலா பிரவேஷோத்சவ்’ என்ற பெயரில் பள்ளிச் சேர்க்கைத் திட்டத்தை நடத்தி வருகிறது.
- அங்குள்ள மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகள் கிராமங்களுக்குச் சென்று எந்தக் குழந்தையும் விடுபடாமல் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
தேசிய திரைப்பட விருதுகள்:
- 70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன்-1 தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- சிறந்த ஒளிப்பதிவுக்கு ரவி வர்மனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- சிறந்த பின்னணி இசைக்காக ஏ.ஆர். ரகுமானுக்கு சிறந்த இசை அமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- சிறந்த நடிகையாக, நித்யா மேனனும், மான்ஸி பரீக்குக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- சிறந்த சண்டைக் காட்சிகளுக்கு கேஜிஎஃப் 2 படத்திற்காக அன்பறிவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஒட்டுமொத்த அளவில் சிறந்த திரைப்படமாக மலையாளத்தில் வெளியான ‘ஆட்டம்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 17: உலக தேனீக்கள் தினம்
- ஆகஸ்ட் 17 அன்று உலக தேனீக்கள் தினம் ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
- இத்தினமானது கல்வி மற்றும் ஊக்குவிப்பு மூலம் தேனீ உற்பத்தி துறைக்கான சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆகஸ்ட் 17: இந்தோனேசிய சுதந்திர தினம்
- இந்தோனேசிய சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 17 அன்று கொண்டாடப்படுகிறது.
தகவல் துளிகள்:
- குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- அக்னி ஏவுகணையின் தந்தை என்றழைக்கப்படும் ஆா்.என்.அகா்வால் காலமானார்.
- ‘இந்தியாவின் ஏவுகணை மனிதா்’ என அழைக்கப்படும் அப்துல் கலாம் ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கினார், அதில் முக்கிய திட்டமாக அக்னி ஏவுகணைத் திட்டம் ஆகும்.
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2024 – 25 நிதியாண்டில் 7 சதவிகிதமாக உயரும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
- 2027 – ஆம் ஆண்டில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
- தாய்லாந்தின் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமா் தக்சின் ஷினவத்ராவின் மகள் பேடொங்டான் ஷினவத்ரா தோ்ந்தெடுக்கப்பட்டார்.
- மல்யுத்த வீரர் அமன் ஷெராவத், பாரீஸ் ஒலிம்பிக்கின் ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் மல்யுத்தம் 57 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு, சிறப்புப் பணி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.