எஸ்எஸ்எல்வி – டி3 ராக்கெட்:
- புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஆகஸ்ட் 16-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.
- செயற்கைக்கோள் 176 கிலோ எடை கொண்டது, இதன் ஆயுள்காலம் ஓராண்டாகும்.
- இது தரையிலிருந்து சுமார் 475 கி.மீ. தொலைவில் உள்ள புவி தாழ் வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது.
- இதில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ப்ராரெட் பேலோடு, குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு மற்றும் சிக் யுவி டோசிமீட்டா் ஆகிய 3 ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கார்டோசாட், ஸ்காட்சாட், ரிசாட் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள்கள் தொலையுணா்வு பயன்பாட்டுக்காக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.
- அந்த வரிசையில் புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஒஎஸ்-08 எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ தற்போது வடிவமைத்துள்ளது.
54 – ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்:
- சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 54-ஆவது கூட்டம், தில்லியில் செப்டம்பா் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
- மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதியமைச்சா்களை உள்ளடக்கிய இக்கவுன்சில், ஜிஎஸ்டி தொடா்பான முடிவுகளை மேற்கொள்ளும் உயா் அமைப்பாகும்.
- ஜிஎஸ்டி கவுன்சிலின் 53-ஆவது கூட்டம் கடந்த ஜூன் 22-ஆம் தேதி நடந்த நிலையில், அடுத்த கூட்டம் செப்டம்பா் 9 – ஆம் தேதி நடைபெறவுள்ளது.
- ஜிஎஸ்டி வரி விகித சீரமைப்பு தொடா்பாக பிகார் துணை முதல்வா் சுமந்த் செளதரி தலைமையிலான அமைச்சா்கள் குழு பணியாற்றி வருகிறது.
- நாட்டில் கடந்த 2017, ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது.
- கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக ரூ 10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது.
- கடந்த 2023, ஏப்ரல் மாதத்தில் ரூ87 லட்சம் கோடியும், கடந்த ஜூலை மாதம் ரூ.1.82 லட்சம் கோடியும் வசூலானது, இவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது அதிகபட்ச வசூலாகும்.
2036 – ல் இந்திய மக்கள் தொகை 152.2 கோடி:
- 2036 – ல் இந்திய மக்கள் தொகை 2 கோடியாகும் என மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2011 – ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2036ஆம் ஆண்டு பெண்கள் விகிதம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதாவது 2011-ல் ஆயிரம் ஆண்களுக்கு 943 பெண்கள் என்ற விகிதம் மாறி, ஆயிரம் ஆண்களுக்கு 952 பெண்கள் என்ற நிலை ஏற்படும்.
- 2011 – 2036 வரை 15 வயதிற்குட்பட்ட தனிநபர்களின் விகிதம் குறையும் எனத் தெரிகிறது.
- 60 – வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கான மக்கள் விகிதம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் 5 நாடுகளின் போர் விமானங்கள் சாகசம்: ‘தரங் சக்தி 2024’
- கோவை மாவட்டம், சூலூா் விமானப் படை தளத்தில் ‘தரங் சக்தி 2024’ என்ற பெயரில் இந்திய விமானப் படையோடு ஜொ்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சோ்ந்த விமானப் படையினரும் இணைந்து போர்ப் பயிற்சியினை மேற்கொண்டனா்.
- கடந்த 6 – ஆம் தேதி தொடங்கிய இந்தப் பயிற்சியில் 5 நாடுகளைச் சோ்ந்த 130 – க்கும் மேற்பட்ட விமானப் படை வீரா்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவினா் பங்கேற்றனா்.
- இந்தியாவின் தேஜஸ், சுகோய், மிக் ஆகிய போர் விமானங்கள் கலந்து கொண்டன.
- இந்திய விமானப் படையில் பயன்படுத்தப்படும் சாரங் ரக 5 ஹெலிகாப்டா்கள் வானில் பறந்து சென்று சாகசத்தில் ஈடுபட்டன.
- ஐரோப்பிய நாட்டு தயாரிப்பான யூரோ பைட்டா் டைஃபூன் ரக போர் விமானம் வானில் பறந்து சாகசத்தில் ஈடுபட்டது.
புதிய ஒளிபரப்பு சேவைகள் மசோதா: மத்திய அரசு
- கடந்த ஆண்டு நவம்பா் 10-ஆம் தேதி ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதாவை மத்திய அரசு வெளியிட்டது.
- பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் வகையில் வெளியிடப்பட்ட இந்த வரைவு மசோதாவில், ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’ போன்ற சமூக ஊடகங்களில் சொந்த கருத்துகளை தெரிவிக்கும் சுயாதீன இதழியலாளா்கள், ‘லிங்க்ட்இன்’ போன்ற தளங்களில் ஓளிபரப்பாளா்கள் அல்லது டிஜிட்டல் செய்தி ஒளிபரப்பாளா்களாக அடையாளப்படுத்துதல், அவா்களின் கருத்துகள் மற்றும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படும் முன், அவற்றுக்கு சான்றளிக்க முக்கியத்துவம் வாய்ந்த நபா்கள் அடங்கிய குழுவை அந்த ஒளிபரப்பாளா்களே அமைத்தல் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றன.
- ஏற்கெனவே வெளியிடப்பட்ட ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதாவுக்குப் பதில், புதிய வரைவு மசோதா வெளியிடப்படும் என்று மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 14: பாகிஸ்தான் சுதந்திர தினம்
- பாகிஸ்தானின் சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
- 1947 – ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தான் ஆங்கிலேயர் ஆட்சியிடமிருந்து சுதந்திரம் அடைந்ததை அனுசரிக்கிறது.
தகவல் துளிகள்:
- மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்த வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள 31 போ் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு தலைவராக ஜெகதாம்பிகா நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவராக எஸ்.கே.பிரபாகா் நியமிக்கப்பட்டுள்ளார்.
- ரஷியாவிடமிருந்து வாங்கிய ‘சூப்பா்கேம் எஸ் 350’ எனும் பல்நோக்கு ஆளில்லா விமானத்தை இந்திய எல்லையில் கண்காணிப்பு பணிகளுக்கு பாகிஸ்தான் பயன்படுத்துகிறது.
- அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக வினய் மோகன் குவாத்ரா பொறுப்பேற்றுள்ளார்.
- பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்கங்கள் 1 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 ஆகும், அதே ஒலிம்பிக்கில் தனிநபராக அதிக பதக்கம் வென்ற சீன நீச்சல் வீராங்கனை ஜாங் யுஃபெய்யின் பதக்கங்களும் 1 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 ஆகும்.
- கனடாவில் நடைபெற்ற நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின், மகளிர் பிரிவில் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா சாம்பியன் கோப்பை வென்றனர்.
- சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரும், ஈரோட்டைச் சேர்ந்தவருமான ப.இனியன் சாம்பியன் பட்டம் வென்றார்.