உஜ்ஜைன் கோயிலில் 1500 போ் உடுக்கை வாசித்து ‘கின்னஸ்’ சாதனை:
- மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைன் கோயில் வளாகத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் உடுக்கை வாசித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனா்.
- உஜ்ஜைன், ஸ்ரீ மஹாகாளேஸ்வா் கோயில் நிர்வாகக் குழு மற்றும் மத்திய கலாசாரத் துறை இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உடுக்கை வாசித்து கின்னஸ் உலக சாதனை.
- அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இந்திய சங்கங்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த 488 நபா்களைக் கொண்ட உடுக்கை வாசிப்புக் குழு, கடந்த 2022 – ல் படைத்த சாதனை இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
- இதையடுத்து, உஜ்ஜைன் குழுவுக்கு கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
- மத்திய பிரதேச மாநில முதல்வா் மோகன் யாதவ்.
முத்ரா திட்ட வாராக்கடன் 3.4 % குறைந்தது:
- முத்ரா திட்டத்தில் வாராக்கடன் அளவு 4 சதவீதமாக குறைந்துள்ளது என மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
- கடந்த 2015-ஆம் ஆண்டு பிரதமரின் முத்ரா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- சிறு, நடுத்தர வியாபாரிகளுக்கு கடனுதவி அளித்து அவா்கள் தொழிலை மேம்படுத்த உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
- பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) என்பது, சிறு/குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ 10 லட்சம் வரை கடன் வழங்குவதற்காக, 8 ஏப்ரல் 2015 அன்று இந்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும்.
- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY).
- இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency (MUDRA) மூலமாக செயல்படுத்தப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து: 370-ஆவது பிரிவு ரத்து
- ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு மற்றும் ஜம்மு-காஷ்மீா் நிரந்தர குடிமக்களுக்கு சிறப்பு உரிமைகள்-சலுகைகளை வழங்கிவந்த 35 (ஏ) பிரிவு ஆகியவை, கடந்த 2019-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டன.
- 370 – ஆவது பிரிவு ரத்து நடவடிக்கையின் ஐந்தாம் ஆண்டு தினம் ஆகஸ்ட் 5 கடைப்பிடிக்கப்பட்டது.
- மாநில அந்துஸ்துடன் இருந்த ஜம்மு-காஷ்மீா், இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்டது.
- அரசமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35 (ஏ) பிரிவுகள் ரத்து செய்யப்பட்டது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்:
- தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 86 கோடி போ் பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
- மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தொடங்கப்பட்ட திட்டம் தான், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ இத்திட்டத்தை, 2021 ஆகஸ்ட் 5-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சாமனப்பள்ளி என்ற கிராமத்தில் தொடங்கி வைத்தார்.
- தொற்றா நோய்களான சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று, மாதந்தோறும் மருந்து, மாத்திரைகள் வழங்குவது தான் இத்திட்டம்.
- இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளது.
ஆகஸ்ட் 6: ஹிரோஷிமா தினம்
- இரண்டாம் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 06 அன்று அமெரிக்கா ஹிரோஷிமாவின் மீது அணுகுண்டை வீசியது.
- ஹிரோஷிமா தினம் அணு ஆயுத எதிர்ப்பு தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது, மேலும் இத்தினம் குண்டு தினம் எனவும் அழைக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- அரசுமுறைப் பயணமாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஃபிஜி சென்றுள்ளார், இந்திய குடியரசுத் தலைவா் ஒருவா் ஃபிஜி மற்றும் டிமோர்-லெஸ்டேக்கு செல்வது இதுவே முதல்முறை ஆகும்.
- மேற்கு வங்கத்தை பிரிக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிர்ப்பு தெரிவித்து மாநில சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
- ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சி அணிவகுப்பின்போது, டேபிள் டென்னிஸ் வீரா் சரத் கமல், பாட்மின்டன் வீராங்கனை சிந்து ஆகியோர் தேசியக் கொடியேந்திச் சென்றனர்.
- பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு நிகழ்ச்சி அணிவகுப்பின்போது தேசியக் கொடியேந்தி இந்திய அணியை வழிநடத்திச் செல்பவராக, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாக்கா் தோ்வு செய்யப்பட்டுள்ளார்.
- பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டா் முதல் 1,500 மீட்டா் வரையிலான பந்தயங்களுக்கு ரெபிசேஜ் சுற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்ற ஆடவருக்கான 100 மீட்டா் ஓட்டத்தில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் தங்கமும், ஜமைக்காவின் கிஷேன் தாம்சன் வெள்ளியும், அமெரிக்காவின் ஃபிரெட் கொ்லி வெண்கலமும் வென்றனா்.