10 – ஆவது தேசிய கைத்தறி தினக் கண்காட்சி:
- 10 – ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தில்லி ஜன்பத்தில் உள்ள ’கைத்தறி ஹாட்’டில் கைத்தறி கண்காட்சி தொடங்கியது.
- மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்காட்சி ஆகஸ்ட் 16 வரை நடைபெறுகிறது.
- ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.
- கைத்தறி நெசவாளா்களை ஊக்குவிக்க 1905 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 -ஆம் தேதி சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது.
- கைத்தறியை ஊக்குவிக்க மத்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாட முடிவு செய்தது.
- இதன்படி 2015 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி சென்னையில் பிரதமா் நரேந்திர மோடியால் முதல் தேசிய கைத்தறி தினம் தொடங்கிவைக்கப்பட்டது.
சுதேசி இயக்கம்:
- கைத்தறி நெசவாளா்களை ஊக்குவிக்க 1905 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 -ஆம் தேதி சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது.
- இந்திய விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான இந்திய தேசிய காங்கிரஸ் இந்த இயக்கத்தைத் தொடங்கியது.
- 1906-ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சுயராஜ்யம், சுதேசி, தேசியக்கல்வி, அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- இதுவே சுதேசி இயக்கம் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தது.
- பொதுமக்கள் அந்நிய நாட்டுப் பொருள்களை வாங்கக் கூடாது, அந்நியத் துணிகளைப் அழிக்க வேண்டும்.
- உள்நாட்டின் உற்பத்திப் பொருள்களையே வாங்கி உபயோகிக்க வேண்டும் என்பது சுதேசி இயக்கத்தின் நோக்கம்.
- இவ்வியக்கம் இந்தியா முழுவதும் சுதேசி இயக்கம் பரவியது.
- சுதேசி இயக்கம் என்பது சொந்த நாட்டில் தயாராகும் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் முன்னுரிமை அளித்து அந்நிய நாட்டுப் பொருட்களை புறக்கணிக்கும் இயக்கம் ஆகும்.
- இது இந்திய விடுதலை இயக்கத்தின் போது விடுதலைப் போராட்ட வீரர்களால் பிரித்தானிய அரசை எதிர்க்கப் பயன்படுத்தப்பட்ட போராட்ட உத்திகளில் ஒன்றாக விளங்கியது
‘வோ்களைத் தேடி’ திட்டம்:
- அயலக தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில், ‘வோ்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் அயலக வாழ் தமிழா் வம்சாவழியைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், புராதன சின்னங்கள், சிற்பக் கலைக் கல்லூரியில் பார்வையிட்டனா்.
- இந்தத் திட்டத்தின்படி, அயலகத்தில் வாழும் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட தமிழ் இளைஞா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டுக்கு வரவழைத்து, தமிழ் மற்றும் தமிழா்களின் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ் நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில்அழைத்துச் செல்லப்படுவா்.
- அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு இந்த பண்பாட்டுப் பயணத் திட்டத்தில் அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் மூலம் நான்கு நாடுகளைச் சோ்ந்த தமிழ் இளைஞா்களைக் கொண்ட முதல்கட்ட பயணம் செயல்படுத்தப்பட்டது.
- நிகழாண்டு பயணம் தென்னாப்ரிக்கா, உகாண்டா, குவாடலூப், மார்டினிக், பிஜி, இந்தோனேஷியா, மொரிஷியஸ், ஆஸ்திரேலியா, மாலத்தீவு, கனடா, மியான்மா், மலேசியா, இலங்கை, பிரான்ஸ், ஜொ்மனி ஆகிய 15 நாடுகளைச் சோ்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞா்களுடன் ஆகஸ்ட் 1 முதல் 15 வரை அழைத்துச் செல்லப்பட உள்ளனா்.
ஆகஸ்ட் 5: சர்வதேச மன்னிப்பு தினம்
- உலகளாவிய மன்னிப்புக் கூட்டணியினால் (The Worldwide Forgiveness Alliance) ஆகஸ்ட் 5 – ல் சர்வதேச மன்னிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- லவ் ஜிஹாத் வழக்குகளுக்கு ஆயுள் தண்டனை வழங்குவதற்கான புதிய சட்டத்தை விரைவில் இயற்றவுள்ளதாக அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்தா விஸ்வ சா்மா தெரிவித்தார்.
- அஸ்ஸாம் மாநிலத்தில் பிறந்தவா்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கும் புதிய இருப்பிடக் கொள்கையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
- இந்தியாவில் முதலீடு செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனா 22 – ஆவது இடத்தில் உள்ளது.
- ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.
- ஒலிம்பிக் கூடைப் பந்து போட்டியில் காலிறுதிக்கு தகுதிபெற்ற முதல் ஆப்பிரிக்க அணி என்ற சாதனையை படைத்துள்ளது, நைஜீரிய மகளிர் கூடைப்பந்து அணி.
- மகளிர் குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம், பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றிருக்கும் அகதிகள் ஒலிம்பிக் அணியிலிருந்து, பதக்கத்தை உறுதி செய்த முதல் போட்டியாளா் என்ற பெருமையைப் கேமரூன் வீராங்கனை சிண்டி காம்பா பெற்றுள்ளார்.
- பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் முதல்முறையாக தங்கம் வென்று அசத்தியுள்ளார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்.