5th August Daily Current Affairs – Tamil

10 – ஆவது தேசிய கைத்தறி தினக் கண்காட்சி:

  • 10 – ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தில்லி ஜன்பத்தில் உள்ள ’கைத்தறி ஹாட்’டில் கைத்தறி கண்காட்சி தொடங்கியது.
  • மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்காட்சி ஆகஸ்ட் 16 வரை நடைபெறுகிறது.
  • ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.
  • கைத்தறி நெசவாளா்களை ஊக்குவிக்க 1905 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 -ஆம் தேதி சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது.
  • கைத்தறியை ஊக்குவிக்க மத்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாட முடிவு செய்தது.
  • இதன்படி 2015 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி சென்னையில் பிரதமா் நரேந்திர மோடியால் முதல் தேசிய கைத்தறி தினம் தொடங்கிவைக்கப்பட்டது.

சுதேசி இயக்கம்:

  • கைத்தறி நெசவாளா்களை ஊக்குவிக்க 1905 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 -ஆம் தேதி சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது.
  • இந்திய விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான இந்திய தேசிய காங்கிரஸ் இந்த இயக்கத்தைத் தொடங்கியது.
  • 1906-ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சுயராஜ்யம், சுதேசி, தேசியக்கல்வி, அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  • இதுவே சுதேசி இயக்கம் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தது.
  • பொதுமக்கள் அந்நிய நாட்டுப் பொருள்களை வாங்கக் கூடாது, அந்நியத் துணிகளைப் அழிக்க வேண்டும்.
  • உள்நாட்டின் உற்பத்திப் பொருள்களையே வாங்கி உபயோகிக்க வேண்டும் என்பது சுதேசி இயக்கத்தின் நோக்கம்.
  • இவ்வியக்கம் இந்தியா முழுவதும் சுதேசி இயக்கம் பரவியது.
  • சுதேசி இயக்கம் என்பது சொந்த நாட்டில் தயாராகும் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் முன்னுரிமை அளித்து அந்நிய நாட்டுப் பொருட்களை புறக்கணிக்கும் இயக்கம் ஆகும்.
  • இது இந்திய விடுதலை இயக்கத்தின் போது விடுதலைப் போராட்ட வீரர்களால் பிரித்தானிய அரசை எதிர்க்கப் பயன்படுத்தப்பட்ட போராட்ட உத்திகளில் ஒன்றாக விளங்கியது

வோ்களைத் தேடி’ திட்டம்:

  • அயலக தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில், ‘வோ்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் அயலக வாழ் தமிழா் வம்சாவழியைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், புராதன சின்னங்கள், சிற்பக் கலைக் கல்லூரியில் பார்வையிட்டனா்.
  • இந்தத் திட்டத்தின்படி, அயலகத்தில் வாழும் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட தமிழ் இளைஞா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டுக்கு வரவழைத்து, தமிழ் மற்றும் தமிழா்களின் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ் நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில்அழைத்துச் செல்லப்படுவா்.
  • அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு இந்த பண்பாட்டுப் பயணத் திட்டத்தில் அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் மூலம் நான்கு நாடுகளைச் சோ்ந்த தமிழ் இளைஞா்களைக் கொண்ட முதல்கட்ட பயணம் செயல்படுத்தப்பட்டது.
  • நிகழாண்டு பயணம் தென்னாப்ரிக்கா, உகாண்டா, குவாடலூப், மார்டினிக், பிஜி, இந்தோனேஷியா, மொரிஷியஸ், ஆஸ்திரேலியா, மாலத்தீவு, கனடா, மியான்மா், மலேசியா, இலங்கை, பிரான்ஸ், ஜொ்மனி ஆகிய 15 நாடுகளைச் சோ்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞா்களுடன் ஆகஸ்ட் 1 முதல் 15 வரை அழைத்துச் செல்லப்பட உள்ளனா்.

ஆகஸ்ட் 5: சர்வதேச மன்னிப்பு தினம்

  • உலகளாவிய மன்னிப்புக் கூட்டணியினால் (The Worldwide Forgiveness Alliance) ஆகஸ்ட் 5 – ல் சர்வதேச மன்னிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. லவ் ஜிஹாத் வழக்குகளுக்கு ஆயுள் தண்டனை வழங்குவதற்கான புதிய சட்டத்தை விரைவில் இயற்றவுள்ளதாக அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்தா விஸ்வ சா்மா தெரிவித்தார்.
  2. அஸ்ஸாம் மாநிலத்தில் பிறந்தவா்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கும் புதிய இருப்பிடக் கொள்கையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
  3. இந்தியாவில் முதலீடு செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனா 22 – ஆவது இடத்தில் உள்ளது.
  4. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.
  5. ஒலிம்பிக் கூடைப் பந்து போட்டியில் காலிறுதிக்கு தகுதிபெற்ற முதல் ஆப்பிரிக்க அணி என்ற சாதனையை படைத்துள்ளது, நைஜீரிய மகளிர் கூடைப்பந்து அணி.
  6. மகளிர் குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம், பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றிருக்கும் அகதிகள் ஒலிம்பிக் அணியிலிருந்து, பதக்கத்தை உறுதி செய்த முதல் போட்டியாளா் என்ற பெருமையைப் கேமரூன் வீராங்கனை சிண்டி காம்பா பெற்றுள்ளார்.
  7. பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் முதல்முறையாக தங்கம் வென்று அசத்தியுள்ளார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these