இந்தியா-ஆசியான் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மறுஆய்வு:
- இந்தியா மற்றும் ‘ஆசியான்’ நாடுகள் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வது தொடா்பாக 3-ஆவது சுற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.
- புரூனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய 10 நாடுகளை உள்ளடக்கிய ‘ஆசியான்’ கூட்டமைப்பு மற்றும் இந்தியா இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கடந்த 2009-ஆம் ஆண்டில் கையொப்பமானது.
- இதையடுத்து, இந்தியா-ஆசியான் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதற்கான பேச்சுவார்த்தை, கடந்த 2022-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன.
- இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்ற 3-ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை, கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
- இந்தியாவின் உலகளாவிய வா்த்தகத்தில் ஆசியான் நாடுகளின் பங்கு 11 சதவீதமாகும்.
- கடந்த 2023-24-ஆம் ஆண்டில் 2 பில்லியன் டாலா் மதிப்பில் ஏற்றுமதியும், 80 பில்லியன் டாலா் மதிப்பில் இறக்குமதியும் நடைபெற்றுள்ளது.
புல்லட் ரயில் திட்டம்:
- மணிக்கு அதிகபட்சமாக 320 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய உலகின் அதிவேக புல்லட் ரயில்கள் சீனா, ஜப்பான், தென் கொரியா, தைவான் போன்ற நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன.
- புல்லட் ரயில் திட்டத்தை இந்தியாவிலும் அறிமுகம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு, அதற்கான பணிகளை கடந்த 2021-ஆம் ஆண்டு தொடங்கியது.
- இத்திட்டம் 2027-ஆம் ஆண்டு நிறைவு செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்தது.
- முதல் புல்லட் ரயில் குஜராத் மாநிலம் அகமதாபாதிலிருந்து மகாராஷ்டிரத்தின் மும்பை நகருக்கு இயக்கப்பட உள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) :
- தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ASEAN) என்பது 10 தென்கிழக்கு ஆசிய மற்றும் பசிபிக் ரிம் நாடுகளின் பிராந்திய அமைப்பாகும்.
- புரூனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய 10 நாடுகளை உள்ளடக்கிய ‘ஆசியான்’ கூட்டமைப்பு ஆகும்.
- அதன் பிராந்தியத்தில் சமூக-கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கு ஒத்துழைக்கின்றன.
- 1967 – ல் பாங்காக் பிரகடனத்தில் கையெழுத்திட்டதன் மூலம் ஆசியான் உருவாக்கப்பட்டது.
- ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆசியான் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- ஆசியான் செயலகம் – இந்தோனேசியா, ஜகார்த்தாவில் உள்ளது.
- தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வளமான மற்றும் அமைதியான சமூகத்திற்கான பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் கலாச்சார வளர்ச்சியை துரிதப்படுத்துதல்.
- பொருளாதார, சமூக, கலாச்சார, தொழில்நுட்ப, அறிவியல் மற்றும் நிர்வாகத் துறைகளில் பொதுவான ஆர்வமுள்ள விஷயங்களில் செயலில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவியை மேம்படுத்துதல்.
ஆகஸ்ட் 4 ஆகஸ்ட் முதல் ஞாயிறு: நட்பு தினம்
- நண்பர்கள் தினம் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
ஆகஸ்ட் 4: உதவி நாய் தினம்
- உதவி நாய்கள் தினம் உதவி நாய்களின் அர்ப்பணிப்பைக் கொண்டாடுகிறது.
தகவல் துளிகள்:
- எல்லைப் பாதுகாப்புப் படையின் புதிய தலைமை இயக்குநராக தல்ஜித் சிங் சௌதரி நியமிக்கப்பட்டுள்ளார்.
- நிகழாண்டுக்கான ‘தி மிடில் இன்கம் ட்ராப்’ உலக வளா்ச்சி அறிக்கையின்படி, அமெரிக்காவின் தனிநபா் வருமானத்தில் கால் பங்கை எட்டுவதற்கு இந்தியாவுக்கு கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் ஆகலாம் என உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- 2001 – ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அருந்ததியர் பிரிவினருக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
- பிரான்ஸில் நடைபெற்ற டோல் கோப்பை சா்வதேச ஓபன் செஸ் கிராண்ட் ப்ரீ போட்டியில் சென்னை எஸ்ஆா்எம் மாணவா் எம். பிரானேஷ் பட்டம் வென்றார்.