4th August Daily Current Affairs – Tamil

இந்தியா-ஆசியான் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மறுஆய்வு:

  • இந்தியா மற்றும் ‘ஆசியான்’ நாடுகள் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வது தொடா்பாக 3-ஆவது சுற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.
  • புரூனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய 10 நாடுகளை உள்ளடக்கிய ‘ஆசியான்’ கூட்டமைப்பு மற்றும் இந்தியா இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கடந்த 2009-ஆம் ஆண்டில் கையொப்பமானது.
  • இதையடுத்து, இந்தியா-ஆசியான் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதற்கான பேச்சுவார்த்தை, கடந்த 2022-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன.
  • இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்ற 3-ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை, கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
  • இந்தியாவின் உலகளாவிய வா்த்தகத்தில் ஆசியான் நாடுகளின் பங்கு 11 சதவீதமாகும்.
  • கடந்த 2023-24-ஆம் ஆண்டில் 2 பில்லியன் டாலா் மதிப்பில் ஏற்றுமதியும், 80 பில்லியன் டாலா் மதிப்பில் இறக்குமதியும் நடைபெற்றுள்ளது.

புல்லட் ரயில் திட்டம்:

  • மணிக்கு அதிகபட்சமாக 320 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய உலகின் அதிவேக புல்லட் ரயில்கள் சீனா, ஜப்பான், தென் கொரியா, தைவான் போன்ற நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன.
  • புல்லட் ரயில் திட்டத்தை இந்தியாவிலும் அறிமுகம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு, அதற்கான பணிகளை கடந்த 2021-ஆம் ஆண்டு தொடங்கியது.
  • இத்திட்டம் 2027-ஆம் ஆண்டு நிறைவு செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்தது.
  • முதல் புல்லட் ரயில் குஜராத் மாநிலம் அகமதாபாதிலிருந்து மகாராஷ்டிரத்தின் மும்பை நகருக்கு இயக்கப்பட உள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) :

  • தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ASEAN) என்பது 10 தென்கிழக்கு ஆசிய மற்றும் பசிபிக் ரிம் நாடுகளின் பிராந்திய அமைப்பாகும்.
  • புரூனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய 10 நாடுகளை உள்ளடக்கிய ‘ஆசியான்’ கூட்டமைப்பு ஆகும்.
  • அதன் பிராந்தியத்தில் சமூக-கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கு ஒத்துழைக்கின்றன.
  • 1967 – ல் பாங்காக் பிரகடனத்தில் கையெழுத்திட்டதன் மூலம் ஆசியான் உருவாக்கப்பட்டது.
  • ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆசியான் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • ஆசியான் செயலகம் – இந்தோனேசியா, ஜகார்த்தாவில் உள்ளது.
  • தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வளமான மற்றும் அமைதியான சமூகத்திற்கான பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் கலாச்சார வளர்ச்சியை துரிதப்படுத்துதல்.
  • பொருளாதார, சமூக, கலாச்சார, தொழில்நுட்ப, அறிவியல் மற்றும் நிர்வாகத் துறைகளில் பொதுவான ஆர்வமுள்ள விஷயங்களில் செயலில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவியை மேம்படுத்துதல்.

ஆகஸ்ட் 4 ஆகஸ்ட் முதல் ஞாயிறு: நட்பு தினம்

  • நண்பர்கள் தினம் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்ட் 4: உதவி நாய் தினம்

  • உதவி நாய்கள் தினம் உதவி நாய்களின் அர்ப்பணிப்பைக் கொண்டாடுகிறது.

தகவல் துளிகள்:

  1. எல்லைப் பாதுகாப்புப் படையின் புதிய தலைமை இயக்குநராக தல்ஜித் சிங் சௌதரி நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. நிகழாண்டுக்கான ‘தி மிடில் இன்கம் ட்ராப்’ உலக வளா்ச்சி அறிக்கையின்படி, அமெரிக்காவின் தனிநபா் வருமானத்தில் கால் பங்கை எட்டுவதற்கு இந்தியாவுக்கு கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் ஆகலாம் என உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  3. 2001 – ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அருந்ததியர் பிரிவினருக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
  4. பிரான்ஸில் நடைபெற்ற டோல் கோப்பை சா்வதேச ஓபன் செஸ் கிராண்ட் ப்ரீ போட்டியில் சென்னை எஸ்ஆா்எம் மாணவா் எம். பிரானேஷ் பட்டம் வென்றார்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these