இந்தியாவில் 2020 கரோனா உயிரிழப்பு 11 லட்சம்:
- மத்திய அரசின் ‘தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-5 தரவுகளைப் பயன்படுத்தி, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கையில், இந்தியாவில் கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டில் சுமார் 9 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
- இது முந்தைய 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 17 சதவீதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது இந்தியா அதிகாரபூா்வமாக அறிவித்த கரோனா இறப்புகளைவிட எட்டு மடங்கும், உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டைவிட 5 மடங்கும் கூடுதலாகும்.
- இந்தியாவில் ஆயுள்கால எதிர்பார்ப்புகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் இந்த ஆய்வில் மதிப்பிடப்பட்டது.
- பெண்களின் ஆயுள்காலம் 1 ஆண்டுகள் குறைந்துள்ளது. ஆண்களுக்கு 2.1 ஆண்டுகள் குறைந்துள்ளது.
நிஃபா வைரஸ்: கேரள மாநிலம்
- கேரள மாநிலம், மலப்புரத்தில் நிஃபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
- நிபா வைரஸ் என்பது ஒரு ஜூனோடிக் வைரஸ், இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது.
- பாதிக்கப்பட்டவர்களில், இது அறிகுறியற்ற தொற்று முதல் கடுமையான சுவாச நோய் மற்றும் அபாயகரமான மூளையழற்சி வரை பல்வேறு நோய்களை ஏற்படுத்துகிறது.
- இந்த வைரஸ் பன்றிகள் போன்ற விலங்குகளுக்கு கடுமையான நோயை ஏற்படுத்தலாம்.
- இது விலங்குகளை பாதிக்கிறது மற்றும் மனிதர்களுக்கு கடுமையான நோய் மற்றும் மரணத்தை ஏற்படுத்துகிறது.
- நிபா வைரஸ் முதன்முதலில் 1999 ஆம் ஆண்டு மலேசியாவில் பன்றி வளர்ப்பவர்களிடையே பரவியபோது கண்டறியப்பட்டது.
- மனிதர்களில் நிபா வைரஸ் தொற்று அறிகுறியற்ற நோய்த்தொற்று முதல் கடுமையான சுவாச தொற்று மற்றும் அபாயகரமான மூளையழற்சி வரை பல்வேறு மருத்துவ விளக்கங்களை ஏற்படுத்துகிறது.
- நிபா வைரஸ் விலங்குகள் (வெளவால்கள் அல்லது பன்றிகள் போன்றவை) அல்லது அசுத்தமான உணவுகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது, மேலும் மனிதனிடமிருந்து மனிதனுக்கு நேரடியாகவும் பரவுகிறது.
- மனிதர்களுக்கோ அல்லது விலங்குகளுக்கோ சிகிச்சையோ தடுப்பூசியோ இல்லை.
உலகப் பாரம்பரிய குழுக் கூட்டம்:
- உலகப் பாரம்பரிய குழுவின் கூட்டம் இந்தியாவில் முதன் முறையாக தில்லியில் நடைபெறுகிறது.
- இதன் 46-ஆவது தில்லி பாரத் மண்டபத்தில் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி வருகின்ற 31 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது, இதை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
- யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பு)வின் உலக பாரம்பரியக் குழுவினரால் உலகப் பாரம்பரியக் களங்கள் நிர்வகிக்கப்படுகிறது.
- உலக பாரம்பரிய பட்டியலில் வைக்கப்பட வேண்டிய தளங்களை இந்த பாரம்பரியக் குழுவே தீா்மானிக்கிறது. தற்போது 157 நாடுகளில் 962 களங்களில் பண்பாட்டு, மலை, ஏரி, பாலைவனம் போன்ற இயற்கைசார் களங்கள், நினைவுச் சின்னங்கள், கட்டடங்கள், நகரம் என அமைந்துள்ளது.
- இந்தியாவில் மகாராஷ்டிரம் எல்லோரா குகைகள், ஹம்பி கல்ரதம் உள்ளிட்டவைகள் உலகப் பாரம்பரிய களமாக இந்தியாவில் உள்ளது.
- இந்தக் கூட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட சா்வதேச மற்றும் தேசிய பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனா்.
- யுனெஸ்கோவின் இயக்குநா் ஜெனரல் ஆட்ரி அசோலே.
- யுனெஸ்கோ அமைப்புக்கான இந்திய தூதர் விஷால் வி சா்மா.
வறுமை ஒழிப்பில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது: நீதி ஆயோக்
- வறுமை ஒழிப்பு உள்ளிட்ட 13 இனங்களில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்வதாக நீதி ஆயோக் தெரிவித்துள்ளது.
- 2023 – 24 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நீதி ஆயோக் அமைப்பு நீடித்த நிலையான வளா்ச்சிக் குறியீடுகள் பற்றிய 4-ஆவது ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- வறுமை ஒழிப்பில் தமிழகம் இந்தியாவிலேயே முதல் இடம் பெற்று சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது.
- சுற்றுச்சூழல் பராமரிப்பு, குறைந்த செலவில் மாசிலா எரிசக்தி இரண்டிலும் தேசிய அளவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உயா்ந்துள்ளது.
- 11 இனங்களில் தமிழகம் நீடித்த நிலையான வளா்ச்சிக் குறியீடுகளில் தேசிய சராசரியைவிட அதிகமாக வளா்ச்சி பெற்று முன்னணி மாநிலமாகவும், 2 இனங்களில் தேசிய சராசரிக்கு இணையாகவும் வளா்ச்சி பெற்று 13 இனங்களில் மிகவும் சிறந்துள்ளது.
‘மைக்ரோசாஃப்ட்-விண்டோஸ்’ மென்பொருள் கோளாறு:
- கணினி மற்றும் மடிக்கணினிகளில் இயங்குதளமாக ஆபரேட்டிங் சிஸ்டம்-ஓஎஸ் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ‘விண்டோஸ்’ மென்பொருளின் பல்வேறு பதிப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
- மைக்ரோசாஃப்ட் நிறுவன மென்பொருள்களுக்கு இணையப் பாதுகாப்புச் சேவையை ‘கிரௌட் ஸ்ட்ரைக்’ நிறுவனம் வழங்கி வருகிறது.
- விண்டோஸ் மென்பொருளில் ‘பால்கன் சென்சார்’ தளத்தில் கிரௌட் ஸ்ட்ரைக் நிறுவனத்தின் புதுப்பிப்புகள் பதிவேற்றத்தின்போது கோளாறு ஏற்பட்டுள்ளது.
- இதனால் தொழில்நுட்பச் செயலிழப்பு பல்வேறு துறைகளின் சேவையில் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஆப்பிள் நிறுவனத்தின் ‘மெக்’ மற்றும் ‘லினக்ஸ்’ தளத்தில் பாதிக்கப்படவில்லை.
- கிரௌட் ஸ்ட்ரைக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜார்ஜ் குா்ட்ஸ்.
ஜூலை 21: குரு பூர்ணிமா
- குரு பூர்ணிமா என்பது கல்வி மற்றும் ஆன்மீகம் ஆகிய அனைத்து குருக்களையும் கௌரவிக்கும் ஒரு இந்து மத பண்டிகையாகும்.
- இந்துக்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் அனைவரும் இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டானில் கொண்டாடப்படுகிறது.
தகவல் துளிகள்:
- சாலையோர வியாபாரிகள் ஆண்டுதோறும் செலுத்தும் பதிவுக் கட்டணம் ரூ.100 -ஐ ரத்து செய்ய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா உத்தரவிட்டார்.
- யுனெஸ்கோ அமைப்புக்கான இந்திய தூதர் விஷால் வி சா்மா.
- ஆண்டின் சிறந்த கால்பந்து வீராங்கனையாக, தமிழகத்தின் இந்துமதி கதிரேசன் தோ்வு செய்யப்பட்டுள்ளார்.
- ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக மிஸோரத்தின் லாலியன்ஸுவாலா சாங்தே தோ்வு செய்யப்பட்டுள்ளார்.
- இந்திய ஆடவா் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக, ஸ்பெயினை சோ்ந்த மனோலோ மார்கெஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.