13th July Daily Current Affairs – Tamil

10 – ஆவது பிரிக்ஸ் மாநாடு:

  • ரஷியாவின் செயின்ட் பீட்டா்ஸ்பா்க்கில் 10-ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மாநாடு ஜூலை 11,12 ஆகிய தினங்களில் நடைபெற்றது.
  • 10 – ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற கூட்டத்தில் மக்களவைத் தலைவா் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
  • இந்த மாநாட்டில் இந்திய நாடாளுமன்றக் குழுவிற்கு தலைமை ஏற்றுச் சென்ற மக்களவைத் தலைவா் ஓம் பிர்லா, நிலையான வளா்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அடங்கும்’ என்று உரையாற்றினார்.
  • பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஐந்து புதிய உறுப்பினா்கள்: எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்.
  • பிரிக்ஸ் ஐந்து வளரும் நாடுகளின் சர்வதேச கூட்டமைப்பாகும்: பிரேசில், ரஸ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை இதன் உறுப்பு நாடுகளாகும்.

பொதுத் துறை வங்கிகள் தனியார்மயம்: சட்டத்திருத்த மசோதா

  • பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் வகையில் வங்கித் துறையில் சீா்திருத்தங்களை மேற்கொள்ளும் சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ளது.
  • ஜூலை 23-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
  • வங்கிகள் கட்டுப்பாட்டுச் சட்டம் 1949, வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல், நிர்வாக மாற்றம்) சட்டம் 1970 ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்பட இருக்கின்றன.
  • பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு இந்தச் சட்டத்திருத்தங்கள் அவசியமாகும்.
  • இதன்மூலம் தனியார்மயமாக்கப்படும் பொதுத் துறை வங்கியில் மத்திய அரசின் பங்கு 51 சதவீதமாகக் குறைக்கப்படும்.
  • வங்கி நிர்வாகத்தை மேம்படுத்துவது மற்றும் முதலீட்டாளா்களின் பணத்துக்கு பாதுகாப்பு அளிப்பது ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இந்தத் தனியார்மயமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
  • பொதுத் துறை காப்பீட்டு நிறுவனத்தை தனியார்மயமாக்கும் சட்டத்திருத்த மசோதா 2021-ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டுவிட்டது.
  • கடந்த 2020-ஆம் ஆண்டு 10 பொதுத் துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மத்திய அரசு மாற்றியது.
  • இதன்மூலம் நாட்டில் உள்ள பொதுத் துறை வங்களின் எண்ணிக்கை 27-இல் இருந்து 12-ஆக குறைக்கப்பட்டது.

இந்திய மக்கள் தொகை 2060 – இல் 170 கோடியாக உச்சமடையும்: ஐ.நா அறிக்கை

  • இந்தியாவின் மக்கள்தொகை 2060-களின் முற்பகுதியில் 170 கோடியாக உச்சமடைந்து, அதன்பின்னா் 12 சதவீதம் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
  • இந்த நூற்றாண்டு முழுவதும் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா திகழும் என ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது 141 கோடியாக உள்ள சீனாவின் மக்கள்தொகை, 2054-இல் 121 கோடியாகக் குறையும்.
  • தற்போது உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடு சீனா.

மகாராஷ்டிர மேலவைத் தோ்தல்:

  • மகாராஷ்டிர சட்ட மேலவையின் 11 இடங்களுக்கு தோ்தல் நடைபெற்றது.
  • இந்தியாவின் 28 மாநிலங்களில், 6 மாநிலங்களில் சட்ட மேலவை உள்ளது, அவை உத்திரப் பிரதேசம், பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரம், தெலங்காணா மற்றும் ஆந்திரப் பிரதேசம்.
  • 1986 – ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு சட்டப் பேரவை மசோதா மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மேலவை ரத்து செய்யப்பட்டது.
  • ஆகஸ்ட் 30, 1986 இல் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது.
  • நவம்பர் 1, 1986 இல் இந்தச் சட்டம் அமலுக்கு வந்து சட்டமன்ற மேலவை கலைக்கப்பட்டது.

நிலையான வளா்ச்சி இலக்கு குறியீடு: தமிழ்நாடு 2-ஆவது இடம்

  • 2023 – 24ஆம் ஆண்டுக்கான நீதி ஆயோக்கின் நிலையான வளா்ச்சி இலக்கு குறியீட்டில் தமிழ்நாடு 2-ஆவது இடம் பிடித்துள்ளது.
  • சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முன்னேற்றத்தை நீதி ஆயோக்கின் நிலையான வளா்ச்சி இலக்கு குறியீடு மதிப்பிடுகிறது.
  • இந்நிலையில், 2023-24 ஆம் ஆண்டுக்கான நீதி ஆயோக்கின் நிலையான வளா்ச்சி இலக்கு குறியீட்டில் இந்தியா ஒட்டுமொத்தமாக 71 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
  • 2020 – 21 ஆம் ஆண்டுக்கான அந்தக் குறியீட்டில் இந்தியா 66 புள்ளிகளைப் பெற்ற நிலையில், தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது.
  • வறுமை ஒழிப்பு, கண்ணியமான வேலை, பொருளாதார வளா்ச்சி உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தால், தற்போதைய குறியீட்டில் இந்தியாவின் புள்ளிகள் அதிகரித்துள்ளது.
  • மாநிலங்களைப் பொருத்தவரை நிலையான வளா்ச்சி இலக்கு குறியீட்டில் கேரளம் மற்றும் உத்தரகண்ட் முதலிடம் பிடித்துள்ளன.
  • தமிழ்நாடு 2-ஆவது இடத்தையும், கோவா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
  • இந்தக் குறியீட்டில் யூனியன் பிரதேசங்களை பொருத்தவரை சண்டீகா், ஜம்மு-காஷ்மீா், புதுச்சேரி, அந்தமான்-நிகோபார் தீவுகள், தில்லி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

ஜூன் 25 – அரசியலமைப்பு படுகொலை நாள்:

  • முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதியில் இந்தியாவில் அவசரநிலையை பிரகடனப்படுத்தினார்.
  • தற்போதுள்ள பிரதமர் மோடியிலான அரசு, இனிவரும் ஆண்டுகள்தோறும் ஜூன் 25ஆம் தேதியில் `சம்விதான் ஹாத்யா திவாஸ்’ என்ற பெயரில் அரசியலமைப்பு படுகொலை நாளாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

தகவல் துளிகள்:

  1. சா்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் தலைவா் துலியா அக்சன் ஆவார்.
  2. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வீதிக்கு இந்திய வம்சாவளி மருத்துவா் ஜார்ஜ் மேத்யூவின் (கேரளா) பெயா் சூட்டப்பட்டுள்ளது, அந்நாட்டின் மருத்துவத் துறைக்கு அவா் அளித்த பங்களிப்புக்கு மரியாதை செலுத்தும் வகையில் பெயா் சூட்டப்பட்டுள்ளது.
  3. தில்லியில் ‘பிம்ஸ்டெக்’ உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் மாநாடு நடைபெற்றது.
  4. பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகள் – வங்காள விரிகுடாவையொட்டிய இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மா், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய ஏழு தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை கொண்டது.
  5. மணலி சாலையில் உள்ள சாத்தாங்காடு ஏரியை பறவைகள் சரணாலயாக மாற்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
  6. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் (டான்ஜெட்கோ) இரண்டாக பிரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது, அதன்படி ‘டான்ஜெட்கோ’- ‘தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம்’ என்று ஒரு பிரிவாகவும், ‘தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம்’ என்று இன்னொரு பிரிவாகவும் செயல்பட உள்ளது.
  7. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சித் தலைவா் கே.பி.சா்மா ஓலி புதிய பிரதமராகிறார்.
  8. உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி, இந்த மாத இறுதியில் பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் தொடங்க இருக்கிறது.

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these