காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் 99-ஆவது கூட்டம்:
- தமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு 11,500 கனஅடி வீதம் நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீரை விடுவிப்பதை கர்நாடக மாநிலம் உறுதி செய்ய வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்தது.
- காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் 99-ஆவது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
- இதில் கர்நாடகா, தமிழ்நாடு புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்னைகள் சட்டம் 1956 மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி காவிரி நீர் மேலாண்மைத் திட்டத்தை மத்திய அரசு ஜூன் 1, 2018 அன்று ‘காவிரி நீர் மேலாண்மை ஆணையம்’ அமைத்தது.
- தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிடையே காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பான பிரச்சனைகளை களைவதற்காக மத்திய அரசானது காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை (Cauvery Water Management Authority -CMA) அமைத்துள்ளது.
- இந்த காவிரி நதிநீர் ஆணையமானது ஓர் தலைவர், எட்டு உறுப்பினர்கள் மற்றும் ஓர் செயலாளரைக் கொண்டதாகும்.
- உச்ச நீதிமன்றத்தால் மாற்றியமைக்கப்பட்ட காவிரி நதிநீர்ப் பிரச்சனை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த ‘காவிரி நீர் முறைப்படுத்தும் குழு’ பிப்ரவரி 16, 2018 தேதி உத்தரவைச் செயல்படுத்துகிறது.
ஏழு புதிய பாதுகாப்புத் திட்டங்கள்: தனியாரிடம் ஒப்படைத்த டிஆா்டிஓ
- இந்தியாவின் முதன்மை பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டிஆா்டிஓ, நீருக்கடியில் இருந்து ஏவப்படும் ஆளில்லா விமானங்கள், தொலைதூர இயக்க அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய ராணுவ தொழில்நுட்பங்களை உருவாக்கும் 7 புதிய திட்டங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.
- நாட்டின் ஆயுதப் படைகள், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளின் பல்வேறு தேவைகளைப் பூா்த்தி செய்யவும் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை ஊக்குவிக்கவும் பாதுகாப்பு அமைச்சகத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியின்கீழ் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
- நீருக்கடியில் இருந்து ஏவப்படும் ஆளில்லா விமானங்கள் உற்பத்தி திட்டம் புணேவில் அமைந்துள்ள ‘சாகா் டிஃபென்ஸ் இன்ஜீனியரிங்’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
- ரேடார் சிக்னல் செயல்பாட்டு அமைப்பு தயாரிப்பு, விமானங்களுக்கான சென்சார் மேம்பாடு, நீருக்கடியில் இருக்கும் ஆபத்துகளைக் கண்டறிந்து, வகைப்படுத்தி, வீழ்த்தும் வல்லமைக் கூடிய தொலைதூர இயக்க அமைப்புகள் ஆகிய தொழில்நுட்பத் திட்டங்கள் கொச்சியில் அமைந்துள்ள ‘ஐஆா்ஓவி டெக்னாலஜிஸ்’ எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.
- ஆன்டென்னா சிமுலெட்டருடன் கூடிய ரேடார் சிக்னல் செயல்பாட்டு அமைப்பு நொய்டாவில் உள்ள ‘ஆக்ஸிஜன் 2 இன்னோவேஷன்’ எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.
பிம்ஸ்டெக் கூட்டமைப்பு:
- பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்கும் மாநாடு தில்லியில் நடைபெற்றது.
- பன்முக கூட்டுறவுக்காக வங்காள விரிகுடாவையொட்டிய இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மா், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய ஏழு தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை ‘பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்)’ ஒன்றிணைக்கிறது.
- அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’, ‘ஆக்ட் ஈஸ்ட்’ கொள்கை, ‘சாகா்’ பார்வை ஆகிய இந்திய நிலைப்பாடுகளின் கலவையாக பிம்ஸ்டெக் பிரதிபலிக்கிறது.
- ‘சார்க்’ கூட்டமைப்பின் முன்னெடுப்புகள் பல்வேறு காரணங்களுக்காக வளா்ச்சி அடையாமல் முடங்கியுள்ளதால், பிராந்திய ஒத்துழைப்புக்கான துடிப்புமிக்க மாற்று அமைப்பாக பிம்ஸ்டெக்-ஐ கட்டமைக்க இந்தியா ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
- வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு (Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Cooperation- BIMSTEC).
- தெற்கு ஆசியாவிலும், தென் கிழக்கு ஆசியாவிலும் அமைந்துள்ள ஏழு நாடுகள் அடங்கிய ஒரு பன்னாட்டு அமைப்பாகும்.
- இந்நாடுகளின் கூட்டு மக்கள் தொகை 5 மில்லியன் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.5 டிரில்லியன் டாலராகும்.
- இந்நிறுவனத்தின் உறுப்பினா் நாடுகள் வங்காள தேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேப்பாளம், பூட்டான் ஆகும்.
- இவைகள் அனைத்தும் வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள நாடுகள் ஆகும்
- பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் தாய்லாந்து, நிகழாண்டின் இறுதியில் கூட்டமைப்பின் வருடாந்திர உச்சிமாநாட்டை நடத்த உள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு பொருளாதார அதிகாரமளித்தல் அவசியம்: உச்சநீதிமன்றம்
- பெண்களான குடும்பத் தலைவிகளுக்கு தனியாக வருமானம் இல்லை என்பதால் அவா்களுக்கு பொருளாதார பாதுகாப்பை கணவா் அளிக்க வேண்டியது கட்டாயம் என்றும், அதுதான் உண்மையான வளா்ச்சி என்றும் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி பி.வி. நாகரத்னா தீா்ப்பில் குறிப்பிட்டாா்.
- குற்றவியல் நடைமுறைச் சட்ட (சிஆா்பிசி) பிரிவு 125-இன்கீழ், முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் (பராமரிப்புத் தொகை) கோரலாம் என உச்சநீதிமன்றம் தீா்ப்பை வழங்கியது.
ஷா பானு வழக்கு தீா்ப்பின் தாக்கம்:
- விவாகரத்துக்குப் பின்பு மனைவிக்கு முஸ்லிம் கணவா் ஜீவானம்சம் வழங்க வேண்டும் என கடந்த 1985-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது
- இந்தத் தீா்ப்புக்கு வடிவம் கொடுக்கும் வகையில் அப்போதைய பிரதமா் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில், இஸ்லாமிய பெண்கள் (விவாகரத்தைப் பாதுகாக்கும் உரிமை) சட்டம் 1986-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
- இந்தச் சட்டத்தை கடந்த 2001-ஆம் ஆண்டு தில்லி உயா்நீதிமன்றம் உறுதிசெய்தது.
- இது, இஸ்லாமிய பெண்கள் திருமணம் மற்றும் விவாகரத்தில் சம உரிமை பெறவும் வழிவகை செய்தது.
முன்னாள் அக்னிவீரா்களுக்கு இடஒதுக்கீடு:
- மத்திய தொழில் பாதுகாப்புப் படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படைகளில் காலியாகவுள்ள காவலா் பணிகளில் அக்னிபத் திட்ட முன்னாள் ராணுவ வீரா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
- சிஐஎஸ்எஃப் தலைவா் நீனா சிங் மற்றும் பிஎஸ்எஃப் தலைவா் நிதின் அகா்வால்.
- அக்னிபத் திட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்டு பணிகாலம் நிறைவடைந்தவுடன் விடுவிக்கப்பட்ட ராணுவ வீரா்களுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது.
- அதன்படி முன்னாள் ராணுவ வீரா்களை பணியமா்த்தும் முயற்சியில் சிஐஎஸ்எஃப் மற்றும் பிஎஸ்எஃப் இறங்கியுள்ளது.
- அக்னிபத் திட்டம் மூலம் பதினேழரை வயது முதல் 21 வயதுள்ள இளைஞா்கள் ராணுவத்துக்கு சோ்க்கப்படுகின்றனா்.
- அவா்களில் 25 சதவீத நபா்களுக்கு மட்டுமே 15 ஆண்டுகளுக்கும் மேல் ராணுவத்தில் பணிபுரிய உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
- மற்றவா்கள் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே பணிபுரிவா், அதன்பிறகு விடுவிக்கப்படுவா்.
மத்திய பட்ஜெட்:
- மத்திய பட்ஜெட் வரும் 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில், நாட்டில் உள்ள முக்கிய பொருளாதார நிபுணா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
- 2024 – 25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார்.
- பட்ஜெட் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எதிர்பார்க்கப்படும் வருமானம் மற்றும் செலவுகளை கோடிட்டுக் காட்டும் நிதித் திட்டமாகும்.
- இதில் அனைத்து மூலங்களிலிருந்தும் வருவாய்கள் மற்றும் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளின் செலவுகளும் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
பிரிக்ஸ் நாடாளுமன்ற கூட்டம்:
- ரஷியாவில் செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரில் நடைபெற்ற 10-ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற கூட்டத்தில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
- பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஐந்து புதிய உறுப்பினா்களான எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை பிரிக்ஸ் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டன.
- சா்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் தலைவா் துலியா அக்சன்.
- பிரிக்ஸ் ஐந்து வளரும் நாடுகளின் சர்வதேச கூட்டமைப்பாகும், பிரேசில், ரஸ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை இதன் உறுப்பு நாடுகளாகும்.
சர்வதேச மலாலா தினம்: ஜூலை 12
- ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 12 ஆம் தேதி ஐக்கிய நாடுகளால் அனுசரிக்கப்படுகின்ற மலாலா தினம் ஆகும்.
- பெண்களுக்கு கல்வியில் சம உரிமை அளிப்பதற்காக குரல் கொடுத்த பாகிஸ்தானின் மலாலா யூசுப்சாயின் வாழ்க்கைப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆா்.ஸ்ரீராமை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
- மலேசியாவில் நடைபெற்ற உலக சிலம்பம் போட்டியில் புனித ஓம் குளோபல் சிபிஎஸ்இ பள்ளியின் மாணவா் அஜய் கணபதி, முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
- தென்காசி அருகே நன்னகரத்தில் கி.பி 20 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஊா்க்கிணறு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
- திருப்பூா் மாவட்ட ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தார்.
- இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.