டஸ்ட்லிக் கூட்டு இராணுவப் பயிற்சி:
- இந்தியா-உஸ்பெகிஸ்தான் கூட்டு இராணுவப் பயிற்சியின் ஆறாவது பதிப்பு டஸ்ட்லிக் புனேவில் தொடங்கியது.
- இந்தப் பயிற்சி ஏப்ரல் 28 வரை நடைபெறும்.
- கூட்டுப் பயிற்சி DUSTLIK -VI என்பது இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் மாறி மாறி நடத்தப்படும் வருடாந்திர பயிற்சி நிகழ்வாகும்.
- கடைசி பதிப்பு ஏப்ரல் 2024 இல் உஸ்பெகிஸ்தானின் டெர்மெஸ் மாவட்டத்தில் நடத்தப்பட்டது.
- இந்தப் பயிற்சியின் கருப்பொருள், அரை-நகர்ப்புற சூழ்நிலையில் கூட்டு பல கள துணை மரபு நடவடிக்கைகள் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
- வரையறுக்கப்பட்ட பிரதேசத்தைக் கைப்பற்றுவது சம்பந்தப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைக்கு பதிலளிப்பதில் இது கவனம் செலுத்தும்.
ஏப்ரல் 18: உலக பாரம்பரிய தினம்.
- மனித பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும், இந்தத் துறையில் உள்ள அனைத்து தொடர்புடைய அமைப்புகளின் முயற்சிகளையும் அங்கீகரிப்பதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- இந்த நாள் 1982 – ஆம் ஆண்டு சர்வதேச நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்கள் கவுன்சிலால் (ICOMOS) அறிவிக்கப்பட்டது.
- 1983 ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
தகவல் துளிகள்:
- அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என நீதி ஆயோக் தெரிவித்துள்ளது.
- புது டெல்லியில் பாதுகாப்புத் தொழில்நுட்பம் மற்றும் எதிர்காலப் போர் குறித்த “கலாம் & கவாச் 2.0” என்ற பாதுகாப்பு இலக்கிய விழா நடைபெற்றது, இதை ஏப்ரல் 15, 2025 அன்று நடைபெற்ற இந்த நிகழ்வை கூட்டுப் போர் ஆய்வு மையம் நடத்தியது.
- உலகின் சிறந்த மருத்துவமனைகள் தரவரிசையில் தில்லி எய்ம்ஸ் 97 – ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
- ஐந்தாவது ஆசிய இளைஞர் பாரா விளையாட்டுப் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் டிசம்பர் 7–14, 2025 வரை நடைபெறும் என்று ஆசிய பாராலிம்பிக் குழு அறிவித்துள்ளது.
- 2025 – ஆம் ஆண்டை சீர்திருத்த ஆண்டாக பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
- மும்பை-மன்மத் பஞ்சவடி விரைவு ரயிலில் முதல் முறையாக ஏடிஎம் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது, இது இந்தியாவின் முதல் ஆன்போர்டு ரயில் ஏடிஎம் ஆகும்.
- தமிழ் மொழியின் தன்மை மற்றும் பண்டையகால வரலாற்றை பறைசாற்றும் கல்வெட்டுகளை கால வாரியாக தொகுத்து கல்வெட்டு அருட்காட்சியகம் மதுரை உலக தமிழ் சங்க வளாகத்தில் அமைக்கப்பட உள்ளது.
- காஞ்சிபுரம், மதுரையில் பெளத்த, சமண பண்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் அறிவித்தார்.
- சென்னையை அடுத்த சிறுசேரியில் ரூ 1,882 கோடியில் சிஃபி நிறுவனத்தின் தரவு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- வாடிகன் நகரம், உலகின் மிகக் சிறிய நாடாகக் கருதப்படும் நிலையில், கடந்த 96 ஆண்டுகளில், ஒரு குழந்தைகூட பிறக்காத நாடாக வாடிகன் உள்ளது.