ஏப்ரல் 16: திருநங்கைகள் தினம்.
- ஆண்டுதோறும் திருநங்கைகள் தினம் ஏப்ரல் 15 – ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
- திருநங்கைகளின் சமூகப் பாதுகாப்பைக் கருதி, அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 – ஆம் நாளை திருநங்கையர் நாள் எனக் கொண்டாட தமிழக அரசு மார்ச் 11 அன்று அரசாணை பிறப்பித்தது.
- ஏப்ரல் 15, 2008 ஆம் ஆண்டு தமிழக அரசால் திருநங்கைகளுக்கு என தனி நலவாரியம் ஒன்று அமைக்கப்பட்டது.
தகவல் துளிகள்:
- நாட்டின் 23 – ஆவது சட்ட ஆணையத்தின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி நியமிக்கப்பட்டார்.
- 2025 – ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை திருநங்கை ரேவதி மற்றும் திருநங்கை பொன்னி ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் உள்நாட்டுப் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டு மக்களுக்கு நிவாரண உதவிகள் அளிப்பதற்காக பிரிட்டன் தலைநகர் லண்டனில் சர்வதேச மாநாடு நடைபெற்றது.
- ஜப்பான் நாட்டின் மக்கள் தொகையானது தொடர்ந்து 14 – வது ஆண்டாகக் குறைந்துள்ளது.
- ஐசிசியின் மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் வென்றுள்ளார்.
- மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தவும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும் தேவையான ஆலோசனைகள், பரிந்துரைகளை வழங்க
- உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.
- தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் புதிய தலைவராக என்.சுரேஷ்ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025 பீகார் – பாட்னாவில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.