Site icon Gurukulam IAS

16th April Daily Current Affairs – Tamil

ஏப்ரல் 16: திருநங்கைகள் தினம்.

தகவல் துளிகள்:

  1. நாட்டின் 23 – ஆவது சட்ட ஆணையத்தின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி நியமிக்கப்பட்டார்.
  2. 2025 – ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை திருநங்கை ரேவதி மற்றும் திருநங்கை பொன்னி ஆகியோருக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
  3. வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் உள்நாட்டுப் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டு மக்களுக்கு நிவாரண உதவிகள் அளிப்பதற்காக பிரிட்டன் தலைநகர் லண்டனில் சர்வதேச மாநாடு நடைபெற்றது.
  4. ஜப்பான் நாட்டின் மக்கள் தொகையானது தொடர்ந்து 14 – வது ஆண்டாகக் குறைந்துள்ளது.
  5. ஐசிசியின் மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் வென்றுள்ளார்.
  6. மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தவும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும் தேவையான ஆலோசனைகள், பரிந்துரைகளை வழங்க
  7. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.
  8. தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் புதிய தலைவராக   என்.சுரேஷ்ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  9. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025 பீகார் – பாட்னாவில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
Exit mobile version