நாட்டிலேயே முதல்முறை இணையத்தில் லோக் அதாலத் சேவை:
- இணையத்தில் (மக்கள் நீதிமன்றம்) லோக் அதாலத் சேவைகளை வழங்கும் முதல் மாநிலமாக கேரளம் மாறியுள்ளது.
- விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எளிமையாக நீதித் துறையை அணுக வேண்டும் என்ற நோக்கத்தில் இணையத்தில் லோக் அதாலத் சேவைகளை கேரளம் அறிமுகம் செய்துள்ளது.
- இணையம் மூலம் மனுத் தாக்கல் செய்து விசாரணைக்கு இணையம் முலமாகவே ஆஜராகும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
- லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் சமாதானநிலை மற்றும் சமரசம் மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் ஆகும்.
- இந்திய நீதிமன்றங்கள், தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்குகளை, மனுதாரர்களின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தன்னிச்சையாகவோ சமரச முறையில் தீர்வு காண மக்கள் நீதி மன்றங்களுக்கு அனுப்பலாம்.
- லோக் அதாலத் 1987 – ஆம் ஆண்டு சட்ட சேவைகள் அதிகாரசபை சட்டம் மூலம் நிறுவப்பட்டது.
தகவல் துளிகள்:
- இந்தியாவில் இந்தூர் மற்றும் பரோடா மன்னா்களுக்குச் சொந்தமாக இருந்த கோல்கொண்டா நீல வைரம், ஜெனீவாவில் உள்ள ‘கிறிஸ்டி’ ஏல நிறுவனத்தில் முதன்முறையாக ஏலத்தில் விடப்படுகிறது.
- பழங்குடியினருக்கான 1,000 குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- உயர் கல்வி மாணவா்கள் தற்கொலை தடுப்பு தேசிய பணிக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
- உயர் கல்வி மாணவர்கள் தற்கொலை தடுப்பு பற்றி ஆய்வு செய்ய, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். ரவீந்திர பட் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
- பட்டியலின சமூகத்தினருக்கு (எஸ்.சி.) வழங்கப்படும் இடஒதுக்கீட்டை மூன்றாகப் பிரிக்கும் வகைப்பாட்டை முதல் மாநிலமாக அமல்படுத்தியது தெலங்கானா.
- மத்திய பிரதேசத்தின் இந்தூா் மாவட்டம் மௌவ் நகரில் 1891 – ஆம் ஆண்டு ஏப்ரல் 14 – இல் அம்பேத்கா் பிறந்தார், அவரின் நினைவாக அந்த ஊரின் பெயர் அம்பேத்கர் நகர் என கடந்த 2003 – ஆம் ஆண்டு மாற்றப்பட்டது.
- மத்திய பிரதேசத்தில் அம்பேத்கர் பிறந்த ஊரில் இருந்து தில்லி செல்லும் ரயிலை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தொடக்கி வைத்தார்.
- தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் தற்போதைய அதிபா் டேனியல் நொபோவா மீண்டும் அதிபரானார்.
- விண்வெளி ஆராய்ச்சிக்காக அமேஸான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் தொடங்கியுள்ள ‘ப்ளூ ஆரிஜின்’ நிறுவனத்திற்கு சொந்தமான ’நியூ ஷெப்பர்ட்’ ராக்கெட்டில் 6 பெண்கள் இணைந்த குழுவினர் விண்வெளிக்கு அனுப்பப்படுகின்றனர், இதில் பாப் இசையில் உலகப் புகழ் பெற்ற பாடகி கேட்டி பெர்ரியும் ஒருவராக இணைந்துள்ளார்.
- மத்தியப் பிரதேச அரசு, சாகர் மாவட்டத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பெயரிடப்பட்ட வனவிலங்கு சரணாலயமாக அறிவித்துள்ளது.
- ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற ஸ்விம் ஓபன் நீச்சல் போட்டியில் 400 மீ ஃப்ரீஸ்டைல் ஆடவர் பிரிவில் ஜெர்மன் வீரர் லுகாஸ் மார்டென்ஸ் உலக சாதனை படைத்தார்.