Site icon Gurukulam IAS

15th April Daily Current Affairs – Tamil

நாட்டிலேயே முதல்முறை இணையத்தில் லோக் அதாலத் சேவை:

தகவல் துளிகள்:

  1. இந்தியாவில் இந்தூர் மற்றும் பரோடா மன்னா்களுக்குச் சொந்தமாக இருந்த கோல்கொண்டா நீல வைரம், ஜெனீவாவில் உள்ள ‘கிறிஸ்டி’ ஏல நிறுவனத்தில் முதன்முறையாக ஏலத்தில் விடப்படுகிறது.
  2. பழங்குடியினருக்கான 1,000 குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  3. உயர் கல்வி மாணவா்கள் தற்கொலை தடுப்பு தேசிய பணிக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
  4. உயர் கல்வி மாணவர்கள் தற்கொலை தடுப்பு பற்றி ஆய்வு செய்ய, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். ரவீந்திர பட் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
  5. பட்டியலின சமூகத்தினருக்கு (எஸ்.சி.) வழங்கப்படும் இடஒதுக்கீட்டை மூன்றாகப் பிரிக்கும் வகைப்பாட்டை முதல் மாநிலமாக அமல்படுத்தியது தெலங்கானா.
  6. மத்திய பிரதேசத்தின் இந்தூா் மாவட்டம் மௌவ் நகரில் 1891 – ஆம் ஆண்டு ஏப்ரல் 14 – இல் அம்பேத்கா் பிறந்தார்,  அவரின் நினைவாக அந்த ஊரின் பெயர் அம்பேத்கர் நகர் என கடந்த 2003 – ஆம் ஆண்டு மாற்றப்பட்டது.
  7. மத்திய பிரதேசத்தில் அம்பேத்கர் பிறந்த ஊரில் இருந்து தில்லி செல்லும் ரயிலை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தொடக்கி வைத்தார்.
  8. தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் தற்போதைய அதிபா் டேனியல் நொபோவா மீண்டும் அதிபரானார்.
  9. விண்வெளி ஆராய்ச்சிக்காக அமேஸான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் தொடங்கியுள்ள ‘ப்ளூ ஆரிஜின்’ நிறுவனத்திற்கு சொந்தமான ’நியூ ஷெப்பர்ட்’ ராக்கெட்டில் 6 பெண்கள் இணைந்த குழுவினர் விண்வெளிக்கு அனுப்பப்படுகின்றனர், இதில் பாப் இசையில் உலகப் புகழ் பெற்ற பாடகி கேட்டி பெர்ரியும் ஒருவராக இணைந்துள்ளார்.
  10. மத்தியப் பிரதேச அரசு, சாகர் மாவட்டத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பெயரிடப்பட்ட வனவிலங்கு சரணாலயமாக அறிவித்துள்ளது.
  11. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற ஸ்விம் ஓபன் நீச்சல் போட்டியில் 400 மீ ஃப்ரீஸ்டைல் ஆடவர் பிரிவில் ஜெர்மன் வீரர் லுகாஸ் மார்டென்ஸ் உலக சாதனை படைத்தார்.
Exit mobile version