11th April Daily Current Affairs – Tamil

மகப்பேறு இறப்பு: உலகளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா.

  • சர்வதேச அளவில் மகப்பேறு இறப்புகளில் இந்தியா 7.2 சதவீதம் பங்களிக்கிறது.
  • அதிக இறப்புகளைக் கொண்ட நைஜீரியாவிற்கு அடுத்து இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களுக்கு இடையேயான மகப்பேறு இறப்பு மதிப்பீட்டு குழு தெரிவித்துள்ளது.
  • தாய்மை அடைந்த ஒரு பெண் கர்ப்பமாகவோ, பிரசவம் அல்லது கருக்கலைப்பு செய்த 42 நாள்களுக்குள் எந்தவொரு காரணத்தினாலும் இறப்பது மகப்பேறு இறப்பாகும்.
  • உலக சுகாதார அமைப்பு, யுனிசெப், ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம், ஐக்கிய நாடுகளின் பொருளாதார சமூக விவகார பிரிவு மற்றும் பல்வேறு நாடுகளில் அமைப்புகள் உள்ளிட்டவைகள் இணைந்தது எம்எம்இஜஜி ஆகும்.
  • இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகித மதிப்பீடு 23 புள்ளிகள் குறைந்துள்ளது. அதாவது ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 103 ஆக இருந்த இறப்புகள் விகிதம் தற்போது 80 ஆகக் குறைந்துள்ளது.
  • உயர் இரத்த அழுத்தம்(எக்லாம்ப்சியா), தொற்று நோய்கள், கடுமையான ரத்தப்போக்கு, பிரசவ சிக்கல்கள், பாதுகாப்பற்ற கருக்கலைப்பு போன்றவைகள் மகப்பேறு இறப்புகளுக்கு காரணமாக உள்ளன எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 11: தேசிய பாதுகாப்பான தாய்மை தினம்.

  • தேசிய பாதுகாப்பான தாய்மை தினம், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 11 அன்று அனுசரிக்கப்படுகிறது.

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது:

  • எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதான பாரதிய பாஷா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ள எஸ். ராமகிருஷ்ணன் தனது ‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக 2018 – ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
  • ஞானவாணி விருது, தாகூர் இலக்கிய விருது, இயல் விருது, மாக்சிம் கார்க்கி விருது, இலக்கியச் சிந்தனை விருது, கலைஞர் பொற்கிழி விருது, கொடீசியா வாழ்நாள் சாதனையாளர் விருது, இலக்கிய வேள் விருது, தமிழ்நாடு அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

தகவல் துளிகள்:

  1. முடி உதிர்வை ஏற்படுத்தும் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சன் ஃபார்மா நிறுவனம் அறிமுகப்படுத்தவிருந்த ‘லெக்செல்வி’ (டியூரெக்ஸோலிட்னிப்) எனும் மருந்துக்கு விதிக்கப்பட்ட தடையை அமெரிக்க நீதிமன்றம் நீக்கியுள்ளது.
  2. உலகின் சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில், தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 32-ஆவது இடத்திலும், பெங்களூரு விமான நிலையம் 48-ஆவது இடத்திலும், ஐதராபாத் விமான நிலையம் 56-ஆவது இடத்திலும், மும்பை விமான நிலையம் 73-ஆவது இடத்திலும் உள்ளது.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these