‘நிமிா்ந்து நில்’ திட்டம்:
- தமிழகத்தில் 2,000 கல்வி நிறுவனங்களில் பயிலும் 6 லட்சம் மாணவா்களுக்கு புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு பயிற்சி வழங்கும் நோக்கில் ‘நிமிா்ந்து நில்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கலைஞர் கைவினைத் திட்டம்:
- கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை, குன்றத்தூரில் ஏப்ரல் 18 – ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.
- கைவினைக் கலைஞர்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த விஸ்வகர்மா திட்டம் மாணவர்கள் உயா் கல்வி பயில்வதை தடுத்து குலத் தொழிலை ஊக்குவிப்பதாக உள்ளதால் அதற்கு மாற்றாக, முதல்வர் சமூக பாகுபாடு இல்லாமல் அனைத்து கைவினைஞர் களையும் உள்ளடக்கிய கலைஞர் கைவினைத் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்.
- மத்திய அரசின் திட்டத்தில், வயது வரம்பு குறைந்தபட்சம் 18 – ஆக உள்ள நிலையில் நமது திட்டத்தில் இளைஞர்களின் உயர்கல்வி பாதிக்காத வகையில் 35 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- விஸ்வகர்மா திட்டத்தில் 18 வகை கைவினைத் தொழில்களுக்கு முதலீட்டு மானியம் இல்லாமல் கடன் வழங்கப்படும் நிலையில், நமது திட்டத்தில் 25 வகை தொழில்களுக்கு 25 சதவீத முதலீட்டு மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது.
- மத்திய அரசின் திட்டத்தில் கடன் இரு தவணைகளாக வழங்கப்படும் நிலையில் நமது திட்டத்தில் கடன் ஒரே தவணையாக வழங்கப்படும்.
- இந்தத் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் வரும் 18 – ஆம் தேதி முதல்வரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
ஏப்ரல் 10: உலக ஹோமியோபதி தினம்.
- ஹோமியோபதி மற்றும் மருத்துவத்தில் அதன் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10 – ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது.
- ஹோமியோபதியின் முன்னோடியான ஜெர்மன் மருத்துவர் டாக்டர் கிறிஸ்டியன் பிரீட்ரிக் சாமுவேல் ஹானிமனின் பிறந்த நாள் இந்த நாளில் நினைவுகூரப்படுகிறது.
ஏப்ரல் 10: மகாவீர் ஜெயந்தி.
- மகாவீர் ஜெயந்தி ஏப்ரல் 10 – ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
- சமண மதத்தினரின் முக்கிய விழாவான மகாவீா் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
தகவல் துளிகள்:
- கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்ட டீப்டெக் ஸ்டார்ட் அப் நிறுவனமான ஜிரோ லேப்ஸ், ஐஐடிஎம் பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் ஆகியவற்றுடன் இக்கல்வி நிறுவனம் இணைந்து செயற்கை நுண்ணறிவுக்கான உயர்சிறப்பு மையத்தை சென்னை ஐஐடி நிறுவவுள்ளது.
- பிரான்ஸிடம் இருந்து இந்திய கடற்படைக்கு சுமார் ரூ 64,000 கோடியில் 26 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
- முற்றிலும் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட ஐஎஸ்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலில் இயக்குவதற்காக இந்த போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
- பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப் படைக்காக ஏற்கெனவே 36 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
- ஸ்லோவாக்கியா சென்றுள்ள இந்திய குடியரசுத் தலைவருக்கு இந்திய தத்துவங்களின் உபநிடதங்கள் ஸ்லோவாக்கிய மொழிபெயர்ப்பை அந்நாட்டு அதிபர் பரிசளித்துள்ளார்.
- காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் ரூ 1,000 கோடியில் மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்தி சேவைகள் திட்டம் தொடங்கப்படவுள்ளது.