ஒரு மாநிலம் – ஒரு ஊரக வங்கி திட்டம்:
- ஒரு மாநிலம் – ஒரு பிராந்திய ஊரக வங்கி’ திட்டத்தை அமல்படுத்த நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
- செலவுகளைக் குறைத்து, செயல்திறனை அதிகரிக்கும் விதமாக தற்போது மொத்தமுள்ள 43 பிராந்திய ஊரக வங்கிகளை (ஆர்ஆர்பி) 28 – ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- நாட்டில் தற்போது 28 மாநிலங்களும், 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளன.
- ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் ஒரு ஆர்ஆர்பிக்கு மேல் இருந்தால் அதை ஒருங்கிணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- கிராமப்புறங்களில் வசிக்கும் சிறு விவசாயிகள், வேளாண் தொழிலாளர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களுக்கு கடன் வழங்கும் நோக்கில் ‘பிராந்திய ஊரக வங்கிகள் சட்டம், 1976’ கொண்டுவரப்பட்டு ஆர்ஆர்பிக்கள் உருவாக்கப்பட்டன.
- இந்த வங்கிகளில் மத்திய அரசின் பங்கு 50 சதவீதமாகவும், மாநில அரசின் பங்கு 15 சதவீதமாகவும் சேவைகளை வழங்கும் பிற பொதுத் துறை வங்கிகளின் பங்கு 35 சதவீதமாகவும் உள்ளது.
- கடந்த 2015 – இல் ஆர்ஆர்பி சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி மத்திய அரசு, மாநில அரசு, சேவைகளை வழங்கும் வங்கிகள் மட்டுமின்றி பிற வழிகளிலும் மூலதனத்தை திரட்ட ஆர்ஆர்பிக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
- இருப்பினும் ஆர்ஆர்பிக்களில் மத்திய அரசு மற்றும் சேவைகளை வழங்கும் பொதுத்துறை வங்கிகளின் பங்கு 51 சதவீதத்துக்கு கீழ் குறையக்கூடாது எனவும் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டது.
- 2004-05 இல் மேற்கொண்ட சீர்திருத்தத்தின்மூலம் ஆர்ஆர்பிக்களின் எண்ணிக்கை 196 – இல் இருந்து 43 – ஆக குறைக்கப்பட்டது.
ஏப்ரல் 7: உலக சுகாதார தினம்.
- 1948 – ஆம் ஆண்டு WHO நிறுவப்பட்ட ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 – ஆம் தேதி உலக சுகாதார தினம் (WHD) கொண்டாடப்படுகிறது.
- இந்த ஆண்டு 2025, உலக சுகாதார தினத்தின் கருப்பொருள்: “ஆரோக்கியமான ஆரம்பம், நம்பிக்கையான எதிர்காலம்” என்பதாகும்.
தகவல் துளிகள்:
- உலகப் புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு பிரிட்டனில் ‘ஃபிரெட்டாரிங்டன் சாண்ட் மாஸ்டர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
- பிரிட்டனில் உள்ள டார்செட் மாவட்டத்தின் வேமத் பகுதியில் “2025, சர்வதேச மணல் சிற்பத் திருவிழா’ தொடங்கியது.
- போர்ச்சுகல், ஸ்லோவாகியா ஆகிய ஐரோப்பிய அரசுமுறை பயணமாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு செல்கிறார்.
- போர்ச்சுகல் நாட்டு அதிபர் மார்செலோ ரெபேலோ டிசூசா மற்றும் பிரதமர் லூயிஸ் மான்டினெக்ரோ.
- ஸ்லோவாகியா நாட்டு அதிபர் பீட்டர் பெல்லேகிரினி, மற்றும் பிரதமர் ராபர்ட் ஃபிகோ.
- பிரேஸிலில் நடைபெற்ற உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஹிதேஷ் தங்கப் பதக்கம் வென்றார்.