5th April Daily Current Affairs – Tamil

வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை:

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) மற்றும் இந்திய ராணுவம் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட தரையிலிருந்து வான் இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.
  • இந்த ராணுவ பயன்பாட்டு ஏவுகணைகள் ஒடிஸா கடற்கரைக்கு அருகே சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் மேற்கொள்ளப்பட்டது.
  • ரேடார் மற்றும் மின் ஒளியியல் கண்காணிப்பு நடைமுறைகள் மூலம் ஏவுகணையின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்பட்டது.
  • இந்த ஏவுகணை ராணுவத்தின் பயன்பாட்டுக்காக டிஆா்டிஓ மற்றும் இஸ்ரேல் விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் கூட்டாக மேம்படுத்தப்பட்டதாகும்.

துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டம்:

  • துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • 100 சதவீதம் மத்திய அரசு நிதியளிக்கும் துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் முதல் கட்டம், நாட்டின் வடக்கு எல்லையில் உள்ள கிராமங்களின் மேம்பாட்டை உள்ளடக்கியது.
  • இந்த கிராமங்களை தவிர, சா்வதேச நில எல்லைகளையொட்டி உள்ள பிற கிராமங்களின் விரிவான வளா்ச்சிக்கு துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டம் உதவும்.
  • அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், பிகார், குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உத்திசார்ந்து முக்கியத்துவம் வாய்ந்த கிராமங்களை தோ்ந்தெடுத்து ரூ 6,839 கோடி செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • வளமான மற்றும் பாதுகாப்பான எல்லைகளை உறுதி செய்யவும், எல்லை தாண்டிய குற்றங்களை கட்டுப்படுத்தவும் வாழ்வதற்கு சிறந்த சூழலையும், போதிய வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

ஏப்ரல் 5: தேசிய கடல்சார் தினம்.

  • ஆண்டுதோறும் ஏப்ரல் 5 – ஆம் தேதி தேசிய கடல்சார் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • 1919 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 5 ஆம் நாளன்று இந்தியாவின் முதல் நீராவிக் கப்பல் (எஸ்.எஸ்.லாயல்டி) மும்பையிலிருந்து லண்டனுக்குச் சென்றது.
  • அதன் நினைவாக 1964 ஆண்டு முதல், ஏப்ரல் 5ம் நாளானது தேசிய கடல்சார் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னங்களில் அதிக வருவாய் ஈட்டுவதில் தாஜ்மஹால் முதலிடத்தில் உள்ளது.
  2. இந்தியாவில் நிகழாண்டில் ‘பிம்ஸ்டெக்’ தடகள போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு, வரும் 2027-இல் ‘பிம்ஸ்டெக்’ விளையாட்டுப் போட்டிகளை முதல்முறையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  3. தமிழகத்தில் பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை 157-ஆக உயா்ந்துள்ளது.
  4. கேரளாவைச் சேர்ந்த தனித்துவமான பழங்குடி கைவினைப் பொருளான கண்ணடிப்பாய் சந்தைப் பாதுகாப்பையும், இந்த பாரம்பரிய தயாரிப்புக்கான உலகளாவிய தளத்தையும் உறுதி செய்யும் புவியியல் குறியீடு (GI) பெற்றுள்ளது.
  5. தமிழகத்தில் பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரிக்கு உள்ளிட்ட 6 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
  6. தமிழகத்தில் மேலும் 6 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரை கார் அரிசி, செட்டிக்குளம் சின்ன வெங்காயம் உள்ளிட்ட 6 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
  7. இதன் மூலம், தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருள்களின் எண்ணிக்கை 68-ஆக உயர்ந்துள்ளது.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these