மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சி:
- மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை உறுதி செய்யும் அரசமைப்புச் சட்ட தீா்மானம், மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023-இல் பெரும் கலவரம் மூண்டது.
- அதன் பிறகு இரு தரப்பினருக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது.
- கடந்த பிப்ரவரி 13 – ஆம் தேதி சட்டப் பேரவை முடக்கப்பட்டு, குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
- அரசமைப்புச் சட்டத்தின் 356 (1) பிரிவின்கீழ் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
- மாநில ஆட்சி வழக்கமாக ஒரு முதலமைச்சரின்கீழ் இயங்காது குடியரசுத் தலைவரின் கீழ் இயங்குவதால் இதனை குடியரசுத்தலைவராட்சி என்று குறிப்பிடுகின்றனர்.
- ஆயினும் நிர்வாக அதிகாரங்கள் மாநில ஆளுநருக்கு மாற்றப்பட்டு ஆட்சி நடத்துகிறார்.
- அவர் தமது உதவிக்கு ஆலோசகர்களை, ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், நியமித்துக் கொள்வார்.
- பொதுவாக மத்திய அரசின் கொள்கைகள் பின்பற்றப்படும்.
- விதி 356 ஓர் மாநிலத்தில் அரசியலமைப்பு அமைப்புகள் சரியாக இயங்கவியலா நிலை இருக்கும்போது மத்திய அரசு மாநில அரசை நீக்கி குடியரசுத் தலைவராட்சியை அமைத்திட அதிகாரம் வழங்குகிறது
- இவ்விதியின்படி, மாநிலத்தில் அரசியலமைப்பு அமைப்புகள் இயங்காதிருக்கும்போது மாநில அரசுகளைக் கலைக்க மத்திய அரசிற்கு அதிகாரம் உள்ளது.
- விதி 365 ஒன்றியத்தால் கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்கத் தவறியதன் விளைவு, அல்லது நடைமுறைப்படுத்தத் தவறியதன் விளைவு, மாநில அரசாங்கத்தை விதிகளின்படி நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி கருதுவது சட்டப்பூர்வமானது.
கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
- கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா 2024’ மக்களவையில் நிறைவேறியது.
- இந்த மசோதா கடல்சார் வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது.
- அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் பின்பற்றப்படும் சட்டங்களை ஆய்வு செய்து சர்வதேச தரத்தில் இந்த மசோதா தயாராகியுள்ளது.
- இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள கடலோர வா்த்தகம் என்ற விளக்கத்தில் இருந்து மீன்வளம்/ மீன்பிடித்தல் ஆகியவற்றுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃப் மசோதா நிறைவேற்றம்:
- நாட்டில் சமூக-மத ரீதியிலான பணிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்படும் வக்ஃப் சொத்துகளின் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் நோக்கில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 4: சர்வதேச சுரங்க விழிப்புணர்வு மற்றும் சுரங்க நடவடிக்கைக்கான உதவி தினம்.
- ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 4 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அனுசரிக்கப்படுகிறது.
- இது கண்ணிவெடிகள் மற்றும் வெடிமருந்து எச்சங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உதவி செய்யவும் ஒரு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் துளிகள்:
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் டாக்டா் வி. நாராயணன்.
- இந்தியா-தாய்லாந்து இடையே, டிஜிட்டல் தொழில்நுட்பத் துறை ஒத்துழைப்பு, குஜராத்தின் லோதலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாக மேம்பாடு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை ஒத்துழைப்பு, கைவினைப் பொருள்கள்-கைத்தறி மேம்பாடு, இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்கள் இடையிலான ஒப்பந்தம் என 5 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
- ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) மூன்றாவது ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது சராசரியாக 27 சதவீத வரி விதிப்பை அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளார்.
- ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி நியமிக்கப்பட்டுள்ளார்.
- சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து ஹங்கேரி நாடு வெளியேற உள்ளது.