கடல்வழி சரக்குப் போக்குவரத்து மசோதா:
- கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 – ஆம் தேதி கடல்வழி சரக்குப் போக்குவரத்து மசோதா 2024 மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- மக்களவையில் கடல்வழி சரக்குப் போக்குவரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது.
- கடந்த 1925 – ஆம் ஆண்டின் இந்திய கடல்வழி சரக்குப் போக்குவரத்துச் சட்டத்துக்கு மாற்றாக, இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.
- இந்தியாவின் கடல்சார் சட்டத்தை சர்வதேச மரபுகளுடன் இணைத்து, கடல்வழி சரக்குப் போக்குவரத்தை நிர்வகிக்கும் விதிகளை நவீனமயப்படுத்த இந்த மசோதா முயற்சிக்கிறது.
காசம்பட்டி பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிர்த் தலம்:
- திண்டுக்கல் மாவட்டம், காசம்பட்டி தமிழகத்தின் 2 – ஆவது பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிர்த் தலமாக அறிவிக்கை செய்யப்பட்டது.
- இங்குள்ள அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள், பறவைகள் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்கும் வகையில் செயல்படுத்தப்படும்.
- இதன்மூலம், மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியைத் தொடா்ந்து, தமிழகத்தின் 2 – ஆவது பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிர்த் தலம் என்ற சிறப்பு காசம்பட்டிக்கு கிடைத்திருக்கிறது.
தகவல் துளிகள்:
- கணிதவியலாளர் மசாகி காஷிவாராவுக்கு இந்த ஆண்டுக்கான ஏபெல் பரிசு வழங்கப்பட்டது.
- மார்ச் 25 முதல் 27 வரை வடக்கு எல்லைகளில் சவாலான உயரமான நிலப்பரப்பில் நடத்தப்பட்ட முப்படைப் பயிற்சியான பிரசாந்த் பிரஹாரின் போது இந்திய ஆயுதப் படைகள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தின.
- நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு இந்தியா சார்பில் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
- மியான்மா், தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இந்தியாவில் கொல்கத்தா, இம்பால், மேகாலயாவில் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.
- இந்தியாவுக்கான ஜப்பானின் அதிகாரபூா்வ மேம்பாட்டு உதவித் திட்டத்தின் கீழ் 6 திட்டங்களைச் செயல்படுத்த ரூ 10,936 கோடி கடன் ஒப்பந்தம் இந்தியா – ஜப்பான் இடையே கையொப்பமாகியுள்ளது.
- 2018 – ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின்கீழ்’தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ 5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.
- ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தில் மேற்கு வங்கம் தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளன.
- காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
- பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ‘ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு’என்ற வாட்ஸ்ஆப் குழுவை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
- கன்னியாகுமரி மாவட்டம், அம்சியில் தேன் பதப்படுத்தும் அலகில் தேன் இருப்பு கொள்கலன்கள் ரூ 40 லட்சம் செலவில் நிறுவப்பட உள்ளது.
- மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரா்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.
- ஜோர்டானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரீதிகா ஹூடா வெள்ளிப் பதக்கம் வென்றார்.