29th March Daily Current Affairs – Tamil

கடல்வழி சரக்குப் போக்குவரத்து மசோதா:

  • கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 – ஆம் தேதி கடல்வழி சரக்குப் போக்குவரத்து மசோதா 2024 மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
  • மக்களவையில் கடல்வழி சரக்குப் போக்குவரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது.
  • கடந்த 1925 – ஆம் ஆண்டின் இந்திய கடல்வழி சரக்குப் போக்குவரத்துச் சட்டத்துக்கு மாற்றாக, இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.
  • இந்தியாவின் கடல்சார் சட்டத்தை சர்வதேச மரபுகளுடன் இணைத்து, கடல்வழி சரக்குப் போக்குவரத்தை நிர்வகிக்கும் விதிகளை நவீனமயப்படுத்த இந்த மசோதா முயற்சிக்கிறது.

காசம்பட்டி பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிர்த் தலம்:

  • திண்டுக்கல் மாவட்டம், காசம்பட்டி தமிழகத்தின் 2 – ஆவது பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிர்த் தலமாக அறிவிக்கை செய்யப்பட்டது.
  • இங்குள்ள அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள், பறவைகள் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்கும் வகையில் செயல்படுத்தப்படும்.
  • இதன்மூலம், மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியைத் தொடா்ந்து, தமிழகத்தின் 2 – ஆவது பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிர்த் தலம் என்ற சிறப்பு காசம்பட்டிக்கு கிடைத்திருக்கிறது.

தகவல் துளிகள்:

  1. கணிதவியலாளர் மசாகி காஷிவாராவுக்கு இந்த ஆண்டுக்கான ஏபெல் பரிசு வழங்கப்பட்டது.
  2. மார்ச் 25 முதல் 27 வரை வடக்கு எல்லைகளில் சவாலான உயரமான நிலப்பரப்பில் நடத்தப்பட்ட முப்படைப் பயிற்சியான பிரசாந்த் பிரஹாரின் போது இந்திய ஆயுதப் படைகள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தின.
  3. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு இந்தியா சார்பில் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
  4. மியான்மா், தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இந்தியாவில் கொல்கத்தா, இம்பால், மேகாலயாவில் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.
  5. இந்தியாவுக்கான ஜப்பானின் அதிகாரபூா்வ மேம்பாட்டு உதவித் திட்டத்தின் கீழ் 6 திட்டங்களைச் செயல்படுத்த ரூ 10,936 கோடி கடன் ஒப்பந்தம் இந்தியா – ஜப்பான் இடையே கையொப்பமாகியுள்ளது.
  6. 2018 – ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின்கீழ்’தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ 5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.
  7. ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தில் மேற்கு வங்கம் தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளன.
  8. காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
  9. பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ‘ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு’என்ற வாட்ஸ்ஆப் குழுவை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
  10. கன்னியாகுமரி மாவட்டம், அம்சியில் தேன் பதப்படுத்தும் அலகில் தேன் இருப்பு கொள்கலன்கள் ரூ 40 லட்சம் செலவில் நிறுவப்பட உள்ளது.
  11. மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரா்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.
  12. ஜோர்டானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரீதிகா ஹூடா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these