28th March Daily Current Affairs – Tamil

இந்திய பணக்காரர்கள் பட்டியல்:

  • இந்திய பணக்காரர்கள் பட்டியலை ஹுருன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
  • உலகின் டாப் 10 பணக்காரர் பட்டியலில் இருந்து ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி பின்னுக்குத் தள்ளப்பட்டாலும், தொடர்ந்து இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக நீடிக்கிறார்.
  • ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ரோஷ்னி நாடார், உலகளவில் ஐந்தாவது பணக்காரப் பெண்ணாக முன்னேறியுள்ளார்.
  • உலகப் பணக்காரப் பெண்களின் பட்டியலில் டாப் 10 இடத்தைப் பிடித்த முதல் இந்தியப் பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
  • உலகளவில் அதிக கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
  • உலகளவில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன.
  • அமெரிக்காவின் நியூயார்க் நகரம் அதிக கோடீஸ்வரர்கள் கொண்ட நகரின் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
  • அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், உலகளவில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

இந்தியா – ரஷ்யா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி:

  • ரஷ்யாவும் இந்தியாவும் 20 வருடங்களுக்கு மேலாக “இந்திரா” பயிற்சியை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
  • இந்த பயிற்சியின் நோக்கம் இரு நாடுகளின் கடற்படைகளும் இணைந்து செயல்படும் திறனை மேம்படுத்துவதே ஆகும்.
  • இந்தியா தனது பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்தவும், சா்வதேச ஒத்துழைப்பை வளா்க்கவும் ஒவ்வொரு ஆண்டும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகிறது.
  • நிகழாண்டு இந்திய கடற்படையுடன், ரஷிய கடற்படையினா் கூட்டு கடற்பயிற்சியில் ஈடுபடவுள்ளனா்.
  • இதற்காக ரஷியா கடற்படையின் ‘ரெஸ்கி’மற்றும் ‘ஹீரோ ஆல்டார் சைடென்ஷாபோவ்’என்ற 2 போர் கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு வந்தடைந்தன.

குழந்தை இறப்பு விகிதம் குறைப்பு: இந்தியாவுக்கு ஐ.நா. பாராட்டு

  • தடுக்கக்கூடிய குழந்தை இறப்புகளை குறைப்பதில் இந்தியாவின் முயற்சிகள் முன்மாதிரியாக திகழ்வதாகக் கூறி ஐ.நா பாராட்டியுள்ளது.
  • சுகாதார அமைப்பு முறையில் முதலீடுகளை செய்து, ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தின்மூலம் லட்சக்கணக்கான இளம் உயிர்களை இந்தியா காப்பாற்றியுள்ளதாகவும் ஐ.நா. சுட்டிக்காட்டியது.
  • தடுக்கக் கூடிய குழந்தை இறப்புகளை குறைப்பதில் இந்தியா, நேபாளம், செனகல், கானா மற்றும் புருண்டி ஆகிய 5 நாடுகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
  • பிறந்த முதல் 28 நாள்களுக்குள் இறந்த குழந்தைகளின் விகிதமும் 61சதவீதமாக குறைந்துள்ளது.
  • கருவில் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது.

மார்ச் 28: உலக பியானோ தினம்.

  • உலக பியானோ தினம் மார்ச் 28 இல் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா
  2. தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் ஏப்ரல் 2 முதல் 4 வரை நடைபெறவுள்ள 6 – வது பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
  3. தமிழகத்தில் ஏப்ரல் 4, 5 ஆகிய தேதிகளில் 2 – ஆவது மருத்துவ சுற்றுலா மாநாடு நடைபெறவுள்ளது.
  4. சிவகங்கை மாவட்டம், அரியக்குடி ரா.சண்முக ஷிவானி மாநில அளவிலான கவிதைப் போட்டியில் பங்கேற்று ‘இளம் கவிஞா்’விருது பெற்றார்.
  5. தென் அமெரிக்க நாடான சிலி நாட்டின் அதிபர் கேப்ரியல் போரிக் ஃபொண்ட்.
  6. செர்பியாவின் வீரர் ஜோகோவிச் செபாஸ்டியன், அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவை வெற்றி பெற்றார்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these